“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்” – Part 10 – ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி மந்திரங்கள்

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||

bala

|| க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்” – Part 10

***ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி மந்திரங்கள்***

இவ்வெளியோன் அறிந்தவரையில் இந்த மந்திரம் மிக பலமானது மிக சுகமானது! இதை இவ்வெளியோனுக்கு தங்கவண்ண கும்பமுனி பலகாலங்களுக்கு முன் கருணையுற்று அருளியதாகும். இதன் பயனோ என்னவோ ஆதிபரையின் பேருளால் பல பல நன்மைகள் இவ்வெளியோனுக்கு சித்தித்தது. இதை அவர்தம் பொற்பாதம் பணிந்து, அவர் அனுமதியின் காண் இங்கு வெளியிடுகிறேன் அனுஷ்டித்து நலம் பெருவீரே!

“ஓம் சௌ: ஐம் க்லீம் சௌ: சௌ: க்லீம் ஐம் சௌ: ஆகச்ச ஆகச்ச பாலே, புவனே, பரமேஸ்வரி, பஞ்சாக்ஷரி, ஆனந்தரூபி நம: / ஸ்வாஹ: ||”

“ஓம் சௌ: ஐம் க்லீம் சௌ:” இது மந்த்ரமஹார்ணவாவிலும், மந்த்ர மஹோததியிலும் காணக்கிட்டும் பாலா மந்திரமாகும்.

“ஓம் சௌ: ஐம் க்லீம் சௌ: சௌ: க்லீம் ஐம் சௌ” இப்படி ஒரு மந்த்ர ஸம்புடீகரணத்தை க்ரந்தங்களில் எளியோன் காணவில்லை!

“ஆகச்ச ஆகச்ச” என்றால் வருக வருக (இதய கமலத்தில் அமர்க)

“பாலே” எனும்பொழுது, பாலாம்பிகை தேவியையும்,

“புவனே” எனும்பொழுது, த்ரிபுவன அரசியாம் திரிபுரசுந்தரியையும்,

“பரமேஸ்வரி” எனும்பொழுது ஆதிபரையையும்,

“பஞ்சாட்சரி” எனும்பொழுது தந்த்ர பார்வதியாம் ஆதிசக்தியையும்,

“ஆனந்தரூபி” எனும்பொழுது ஸ்ரீ லலிதாம்பிகையும் குறிக்கிறது.

உருவிடும்பொழுது நம: என்றும், ஹோமிக்கும்போது ஸ்வாஹ: என்றும் சொல்லவும்.

ஆக ஓரே மந்திரத்தின் மூலம் அம்பிகையின் எல்லா ஸ்வரூபங்களையும் சித்தித்து கொள்கிறோம் அல்லவா! கும்பமுனியின் கருணைக்கு அளவேது! (கும்பமுனி – அகத்தியர்)

இம்மந்திரத்தை தேகசுத்தியுடன், செம்பட்டுடுத்தி, நீரு பூண்டு காலையும் மாலையும் தீபமேற்றி, கிழக்கு முகமாக அமர்ந்து 1008 முறை உருவிட, பின்னர், பாலும், கல்கண்டு, பேரீச்சம்பழம் நிவேதனம் செய்து நிவேதித்த. ப்ரசாதத்தை உட்கொள்ள. சித்தியாகும் வரை நிஷ்டையுடன் அனுஷ்டிக்க.

இந்த வழிபாட்டுக்கு தேவையான மாத்ருகா ந்யாசம், யந்திரம், யந்திர பூஜா, ஆவரண பூஜா விதானமும், விரிவான வழிபாடு, புரஸ்சரண விதியும், முறையும் தொடர்புகொள்பவர்க்கு, வழங்கப்படும் என்பதை பணிவோடு தெரிவித்துக்கொள்கிறேன்

பாலா திரிபுரசுந்தரி, மந்திரங்கள், ஒரு எச்சரிக்கை, ஸ்ரீ அம்ருத ருத்ரம், Part 6, Part 5, Part 4, Part 3, Part 2, Part 1., ஸ்ரீ பாலாம்பிகை, தஸ மஹாவித்யா, மந்த்ரமாத்ருகா புஷ்பமாலா ஸ்தவம்,

***

“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |

ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||

சுபம்

இந்த வலைப்பூவில் குறிப்பிட்டிருக்கும் ப்ரயோகம், செய்முறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்

ஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு தேவையான மந்திரம், யந்திரம், தந்திரத்தை தகுதி அனுசரித்து அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan [at] yahoo [dot] com, அலைபேசி:- +91 92454 46956, Whats App:- +91 96774 50429

This entry was posted in ஜெப விதி, மந்திரங்கள், ஒரு எச்சரிக்கை, மந்த்ர மாத்ருகா புஷ்பமாலாஸ்தவம், மந்த்ர ஸ்வரூபம், யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம், ராஜதனம், ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி, ஸ்ரீ பாலாம்பிகை, Dasa Maha-Vidhya, Uncategorized and tagged , , , , , , . Bookmark the permalink.