“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்” – Part 6

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம:

லக்ஷ்மி

க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம்

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்” – Part 6

* காணபத்ய தந்த்ர மந்திரங்கள் *

“யுக, தேவ, மந்திர பேதம்”

இறைவனான சிவபெருமான், லோகோபயோகத்திற்காக நமக்கு 64 தந்திர நூலகளை அருளியுள்ளார். இவற்றில் அவரது அருள் வாக்குப்படி ஒவ்வொரு யுகத்திற்கும் ஒரு தேவனும் சில மந்திர க்ரந்தங்களும் சிலாக்கியமானது என்றும், கலியுகத்தில், காளீ தந்திரமும், எல்லா யுகங்களிலும் பலனளிக்க கூடியதான தந்த்ர ரத்னமும் சிலாக்கியமானது.

பூஜாஸ்கந்தம் எனும் க்ரந்தத்தில் சத்ய யுகத்தில், ப்ரம்மனையும், த்ரேதாயுகத்தில் சூர்ய தேவனையும், த்வாபர யுகத்தில் விஷ்ணுவையும் கலியுகத்தில் மஹேஸ்வரனையும் ஆராதித்து பயனடைய வேண்டும் எனவும் சொல்லப்பட்டுளது. இவர்தம் ஆராதனைகள் விஷேட க்ஷிப்ர பலப்ரதம் எனவும் மற்றவை தாமஸ பலனையே நல்கும் என விவரிக்கிறது.

இப்படியாக நாம் இப்பொழுது காணப்போகும் மந்திரம் மந்த்ர மஹாததி, மந்த்ர மஹார்ணவத்தில் ஒரு விதமாகவும் சாரதாதிலக தந்திரத்தில் இன்னொரு விதமாகவும் மந்த்ரோத்தாரணம் செய்யப்பட்ட ஒரு விஷேடமான ஷடாக்ஷரி ஆகும்.

மந்திரத்தின் தன்மையையும், பிரிவுகளையும் நாம் சூக்ஷமமாக கவனிக்க சில குறிப்புகள் காணப்படுகின்றன.

மந்திரங்கள் மூன்று பிரிவையும், பல தத்வத்தையும் ப்ரதிபலிப்பவை. உதாரணம் – புருஷ மந்திரங்கள், ஸ்த்ரீ மந்திரங்கள் மற்றும் நபும்சக மந்திரங்கள் எனப்படுகின்றன. அதுபோலவே ஒரு பீஜாக்ஷரமந்திரத்தை பிண்டமந்திரம் எனவும், இரு பீஜாக்ஷரத்தை கர்த்தரி மந்திரம் எனவும், மூன்று முதல் ஒன்பது பீஜாக்ஷரங்கள் கொண்டது பீஜமந்திரம் எனவும், பத்து முதல் இருபது பீஜாக்ஷரங்கள் வரையுள்ளவை மந்திரங்கள் எனவும் அதற்கு மேல் பீஜாக்ஷரங்கள் உள்ளவை மாலா மந்திரம் எனவும் அறியப்படுகிறது.

மந்திரங்களை அவற்றின் ப்ரயோகங்களுக்கேற்ப ப்ருத்வி தத்துவம், ஜல தத்துவம், வாயு தத்வம் இத்யாதி என பல தத்துவ மந்திரங்களாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

வக்ரதுண்ட கணபதியின் “ப்ருத்விதத்வ” மந்திரத்தை கவனித்தோம் அல்லவா! இப்பொழுது “ஆகாஷ தத்துவ” மந்திரத்தை கவனிப்போம்.

 “ஓம் மேதோல்காய ஸ்வாஹ:”

என்பதாம் அது. இவ்விரு மந்திரங்களுமே விதிப்படி ப்ரயோகம் செய்ய, நமது காமங்கள் அனைத்தையுமே பரிபூரணமாக அருளவல்லது.

விதிப்படி சுக்லபக்ஷ சதுர்த்தியிலிருந்து க்ருஷ்ணபக்ஷ சதுர்த்திவரை ஒரு பக்ஷம் அனுசரித்தாலே ஸ்ரீருத்ர ‘சமக’ ப்ரஸ்னத்தில் யாம் வேண்டுகிற சதுர்வித பலபுருஷார்த்தத்தை இந்திரனுடய அந்தஸ்தத்துக்கு சமமாக அருளவல்லது என சிவ பார்வதீ அனுக்ரஹம் பெற்றது என சாஸ்திரங்கள் பகிர்கின்றன.

ஆச்சார்ய முகேன ஹோமம் செய்விப்பவர் கவனிக்க. தர்பணம் ஸ்வயம் ‘கர்தா’ அவர்களே அவரவர் கையால் செய்யவேண்டும், இல்லையெனில் பலன் இல்லை என்கின்றன சாஸ்திரங்கள்

இந்த வழிபாட்டுக்கு கணேச மாத்ருகா ந்யாசம், யந்திரமும், யந்திர பூஜா விதானமும், யந்திரத்தின் ஆவரண பூஜா விளக்கமும், மற்றும் விரிவான வழிபாடு முறையும் தொடர்புகொள்பவர்க்கு, வழங்கப்படும் என்பதை பணிவோடு தெரிவித்துக்கொள்கிறேன்

“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்” – Part 5

“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்” – Part 4

“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்” – Part 3

“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்” – Part 2

“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்”– Part 1.

பாலாம்பிகையின் வழிபாட்டு முறை ,

தசமஹாவித்யை மந்திர ரஹஸ்யம்

தமிழும் மந்திரமும்

ஒம்

சுபம்

இந்த வலைப்பூவில் குறிப்பிட்டிருக்கும் செய்முறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்

ஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan@yahoo.com, அலைபேசி:- 92454 46956

தங்களது மேலான எண்ணங்களை “COMMENT” ஆக பதிவிட வேண்டுகிறேன்

This entry was posted in அக்ஷய தனப்ராப்தி, யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம், ராஜதனம், Uncategorized and tagged , , , . Bookmark the permalink.