“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்” – Part 7 – ஸ்ரீ அம்ருத ருத்ரம்

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம:

லக்ஷ்மி

க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம்

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்” – Part 7

ஸ்ரீ அம்ருத ருத்ரம்

இந்த பகுதிகளின் முதலில், இதில் விவரிக்கப்படும் வழிபாடு முறைகள் “அதர்வண” வேதத்தில், “சௌபாக்யகாண்ட”த்தில் வைவஸ்வத மனுவிற்கு, ப்ரசன்னமானது என்றும், இந்த மந்திரங்கட்க்கு ஆனந்த பைரவர், கணகர், அங்கீரர், கஸ்யபர், வஷிஷ்டர், விஸ்வாமித்திரர் மற்றும் சம்வர்த்தனர் ரிஷிகளாவார். என்றும் கணேசர், சிவன், பாலா, சம்வர்த்தனர் மற்றும் ஸ்ரீவித்யா பஞ்சதஸி போன்றவர் இம்மந்திரத்தின் தேவ தேவதைகளாவர் என்றும் பகிர்ந்திருந்தோம்.

கடந்த பகுதிகளில், கஜவதனனின் (யானைமுகனின்), சிவ கண நாயகனின், அம்பிகா தனயனின், அம்பிகையின் ஸ்னானத்தின் போது மீதியான மஞ்சளிலிருந்து அம்பிகையின் திருவிளையாட்டால் ஸ்ருஷ்டிக்கப்பட்ட அம்பிகையின் ஸ்னானக்ருஹ த்வாரபாலகனாய் ஈசனை எதிர்த்த மகவின் அருள் ஆற்றல் பற்றி பல பல மந்திரங்கள் இருப்பினும், இரு மந்திரங்களை மட்டும் பார்த்தோம். இவர் ஒருவரை விதிவத்தாக வழிபட்டாலே வேண்டுவதனைத்தும் அருள்கிறார் என்றும் க்ரந்தங்கள் தெரிவிக்கின்றன.

இந்த பதிவில் இரண்டாவதாக சொல்லப்பட்டுள்ள அக்ஷயனாம், ஈசனின், க்ஷயம் (அழிவு) எனும் இறப்பையே வெல்லும் ம்ருத்யுஞ்செயனாம், அப்படியே அழிவு தாக்கினாலும், அதன் தாக்கத்திலிருந்து காக்கும் ம்ருத்சஞ்சீவனனாம், இறப்பிற்கே இறப்பை அருளும் பரமசிவனார் பேரருள் பற்றி ஒரு சில வார்த்தைகள் மந்திரத்தை உணருமுன்! உலகிற்கு, அம்மை காமாட்சியின் அரூபத்தை மாற்றி ஸ்வரூபமாக்கியது பராபட்டாரிகர், துர்வாசர் எனும் சிவ ஸ்வரூபமேயன்றோ! இன்றும் அவர் பணித்த “ஆர்யா த்விசதி” அன்றோ அம்பிகையின் ஆராதனை ஆகமமாக அமைந்துளது. மார்கண்டேயனை யமன் அடைய வர, மார்கண்டேயன் சிவனை அணைக்க சிவனோ யமனுக்கே யமனான கதை எல்லோரும் அறிந்ததே! இப்படியாக அழிக்கும் கடவுள் என அழைக்கப்படும் சிவனோ பல ஆக்கும் பணிகளை தொடர்ந்து செய்துகொண்டே உள்ளார்.

ஒருவருக்கு, பணம், பொருள், அந்தஸ்து, வியாதியின்மை எல்லாம் ப்ராப்தம் (அ) ப்ராரப்தம் என்கின்றனர் வேத வித்துக்கள், அங்ஙனமாயின், ப்ரார்ப்தத்தை, ப்ராப்தத்தை படைத்த இறைவ-இறைவியர், அந்த ப்ரார்ப்தத்தை, ப்ராப்தத்தையே பேதிக்கும் வித்யையும் அருள வேண்டியதன் காரணம் தான் என்ன! இந்த விந்தயையும் வேத வித்துக்கள் தான் விளக்கவேண்டும். விதிப்பயன் என்றறியப்படும் வாழ்க்கையில் விதியை வெல்லும் வழிகளை இறைவனே அல்லது இறைவியே அல்லது இருவருமே சேர்ந்து முனிவர்கள் மூலமாக மானுடர்க்கு தெரிவிக்க வேண்டிய கட்டாயம் ஏன் ஏற்பட்டது? மானுடம் தர்மத்துடன் நலமாக வாழ அன்றோ! அதர்ம வாழ்க்கையின் பலனை கருட புராணத்திலிருந்து, மஹாபாரதம் வரை காணக்கிடைக்கிறதன்றோ! இன்றும் ப்ரத்யக்ஷமாக வாழ்நாளில் காண்கிறோம் அல்லவா! 

உதாரணத்திற்கு:- ஒரு பரம ஏழையின் வயிற்றில் ஓலைக்குடிலில் உதித்த அந்தணச்சிறுவன், பின்னாளில், ஒரு அரசனுக்கு இணையாக ஒரு மாநிலத்தை ஆண்டு, இன்னொரு பேரரசனின் சம்பந்தியாகவும் உறவு வளர்த்தது எப்படி என கண்ணுற்றோமெனில் மூலமாக கிட்டுவது பைரவ சித்தியே. இவரே திரு ராஜகோபாலாச்சாரியர். 

இப்பொழுது மந்திரத்தை கவனிப்போமா! இந்த அற்புத மந்திரம், பெற்றோரிடம், பிள்ளைகள் எனக்கு குச்சி ஐஸ் தான் வேண்டும் என்று பாசத்துடன் அடம்பிடித்து ஆணையிடுமன்றோ அந்த நடையில் அமைந்துள்ளதாக இந்த எழியோனுக்கு படுகின்றது.

முப்பெரும் தேவியரும், காமாட்சியும், ம்ருதசஞ்சீவனமும் ஒருங்கிணைந்து அம்ருத ருத்ரனாக உருவெடுத்து, அவன் தன் பாதம் பணிந்து அவனை இரைஞ்சும்(?) மந்திரம் இதோ! இந்த மந்திரம் இறைவன் அ இறைவியர் மானுடம் மீது வைத்துள்ள எல்லையற்ற அளவிலா கருணையை ப்ரதிபலிக்கிறது.

ஓம் ஐம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஜூம் ஸ: வம் ட்டம் அம்ருத ருத்ராய |

ஆம் ஹ்ரீம் க்ரோம் ப்ரதிகூலம் மே நஸ்யது அனுகூலம் மே வசமானய வசமானய ஸ்வாஹ ||

காரணாவசத்தால் இந்த மந்திரத்தின் ஆச்சரண புரஸ்சரண விதியும், ரிஷியாதி ந்யாசங்களும், த்யான ஸ்லோகம் முதலியவனும் யந்திர வின்யாசமும் இங்கு வெளிப்படுத்தப் படவில்லை. தகுதியுள்ளவரிடம் மட்டுமே தெரிவிக்கப்படல் வேண்டும் என்ற கட்டளை உள்ளதால்! புதுவான விதிகளுக்கு புறமே இம்மந்திரம் அமைந்துள்ளது. அதுகாண் வழிபாட்டு முறையை குருவின் வழிகாட்டுதலில் கற்று அனுஷ்டிக்கவும்.

ஆயின், இதற்குண்டான உபாஸனா, ப்ரயோக யந்திரங்கள், தகுதியான வேதவித்துக்களின் உதவியுடன் ப்ராண ப்ரதிஷ்டையுடன், பௌஷ்டீகரணமும், பந்தனமும் செய்யப்பட்டு, தேவையானவர்க்கு வழங்க தயாராக உள்ளோம்.

“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்” – Part 6

“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்” – Part 5

“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்” – Part 4

“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்” – Part 3

“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்” – Part 2

“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்”– Part 1.

Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | ஸ்ரீ பாலாம்பிகை | Sri Balambigai

Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | பஞ்சதஸி / ஸோடஸி 2 | PANCHADASI / SHODASI 2

Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | பஞ்சதஸி / ஸோடஸி | PANCHADASI / SHODASI

ஒம்

சுபம்

இந்த வலைப்பூவில் குறிப்பிட்டிருக்கும் செய்முறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்

ஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan@yahoo.com, அலைபேசி:- 92454 46956

This entry was posted in அக்ஷய தனப்ராப்தி, அதிசய உண்மைகள், மந்த்ர ஸ்வரூபம், யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம், ராஜதனம், ஸ்ரீ அம்ருத ருத்ரம், ஸ்ரீ பாலாம்பிகை and tagged , , , . Bookmark the permalink.