“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்” – Part 8 – மந்திரங்கள், ஒரு எச்சரிக்கை

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

Sri Chakra

ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம:

க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம்

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்” – Part 8-மந்திரங்கள், ஒரு எச்சரிக்கை

ஸப்தகோடி மஹாமந்திரங்களும், மந்திரங்களும், உப-மந்திரங்களும் அ முதல் க்ஷ வரை உள்ள 50 அக்ஷரங்களை (ஸ்வரங்களின் குறியீடு (அ) லிபி) கொண்டுள்ளதே ஆகும். ஒரு அக்ஷரத்தையுடய மந்திரம் “பிண்ட மந்திரம்” எனவும், இரு அக்ஷரத்தையுடையது “கர்தரி மந்திரம்” எனவும், மூன்று முதல் ஒன்பது அக்ஷரங்களையுடையது “பீஜ மந்திரங்கள்” எனவும், பத்து முதல் இருபது அக்ஷரங்களையுடையது “மந்திரங்கள்” எனவும், இருபது அக்ஷரங்களுக்கு மேல் உள்ளது யாவும் “மாலா மந்திரங்கள்” எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

ஒரு மந்திரம் மூன்று உருப்புகளை கொண்டது ஆகும். மந்திரத்தின் ஆரம்பமாவது பீஜ மந்திரத்தால் ஆனது தலைபாகம் எனவும், மத்யபாகமானது பீஜத்தின் பின் வரும் தேவதா நாமம் அல்லது கார்ய சம்பந்தமானது ஆகும். கடைசி பகுதி “பல்லவம்” எனவும், அதனால் மந்திரத்தின் வேகமும் தீவிரமும் அமைந்திருக்கும்.

மந்திரங்களை மூன்று விதமாகவும் அறியப்படுகிறது, அவை “புருஷ (சிவ), ஸ்த்ரீ (சக்தி) மற்றும் நபும்சகமாகும்.

மந்திரசித்திக்கு சத்ரு. மித்ரன், சாத்யன், சுசாத்யன் எனும் பிரிவுகளில், நாம நட்சத்திரத்தின் அடிப்படையில் பொருத்தமானதிலிருந்து சிறந்தவற்றையே தெர்வு செய்யவேண்டும்.  சத்ரு வகை மந்திரங்கள், சாதகனை நாஸப்படுத்தவும், ஊனமுறவும் செய்துவிடும். கவனிக்க!

தஸ மஹாவித்யா, நவ துர்கா, மஹா துர்கா முதலிய சித்த வித்யைகள் இந்த சத்ரு, மித்ரன், சாத்யன், சுசாத்யன் என்பவற்றில் அடங்கா!

உபதேசித்த மந்திரங்கள், சுத்தமாக விதிவத்தாக உருவிட்டும் புரஸ்சரண விதிகளை அனுசரித்தும் சித்திக்கவில்லை எனில், தாடனம், தீபனம், சந்தீபனம் இத்யாதி க்ரியைகள் செய்யப்படவேண்டும். பின்னரே சித்தியாகும்.

மந்திரங்களுக்கு ஜனனம், ஜீவனம், தாடனம், போதனம், அபிஷேகம், விமலீகரணம், ஆப்பாயனம், தர்பணம், தீபனம், குப்திசம்ஸ்காரம். இவைகள் நடத்திய பின்னரே க்ரஹிக்க வேண்டும். அப்போழுது மாத்திரமே அவை நற்பயன் நல்கும்.

இப்படி நியமங்கள் பல இருக்க ஒருவர் கை உயர்த்தி ஏதோ ஒரு மந்திரத்தை எழுதியோ அல்லது சொல்லியோ செய்யின் அது உபதேஸமாகாது.  முக்கியமாக உபதெஸிப்பவர், எதை உபதேசிக்கிறாரோ அந்த மந்திரம் அவருக்கு சித்தியாகிருத்தல் வேண்டும்.

மந்திரங்கள் சிவனாலும், ப்ரம்மாவாலும், விஷ்ணுவாலும், முனிவர்களாலும் பலனளிக்காத வகையில் சபிக்கப்பட்டிருக்கும். ஆகையால், முதலில் சாப நிவர்த்தி செய்தல் அவசியம். சாப நிவர்த்தி (உத்கீலனம்)  சாபத்தையே கீலகம் என்பர். பின்னர், சாப விமோச்சனத்தின் பின் மந்திரத்தை உயிர்பித்து சஞ்ஜீவனமும், சம்புடீகரணமும் செய்தல் வேண்டும். இவையெல்லாம் ஆனபின்னே உபதேஸம்.

உபதேஸம் ஆன பின், பூத சுத்தி, ரிஷி, கர, அங்க ந்யாஸங்கள், மந்த்ர தேவதா த்யானம், ஆவாஹிதம், உபச்சாரம் முதலியவனும் க்ரமமாக செய்தல் வேண்டும். பின்னர் பஞ்ச பூஜை செய்து, உபதேஸம் பெறப்பட்ட மந்திரோச்சாடனம் ஆரம்பிக்க வேண்டும். குறிப்பிட்ட எண்ணிக்கை முடிந்தவுடன், புன: பூஜை செய்து சமர்ப்பிக்க வேண்டும். இதில் எதில் தவறு இருப்பினும் மந்திரம் தன் முழு பயனையும் அருளாது.

ஒவ்வொரு மந்திரத்திற்கும் இவ்வளவு வழிமுறைகள் / விதிமுறைகள் உளது என்பதை பணிவோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்” – Part 7 – ஸ்ரீ அம்ருத ருத்ரம்

“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்” – Part 6

“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்” – Part 5

“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்” – Part 4

“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்” – Part 3

“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்” – Part 2

“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்”– Part 1.

Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | புரோஹிதம் | Purohitham

Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | ஸ்ரீ பாலாம்பிகை | Sri Balambigai

சுபம்

இந்த வழிபாடுகளுக்கு  தேவையான மாத்ருகா ந்யாசம், யந்திரம், யந்திர பூஜா விதானம், யந்திரத்தின் ஆவரண பூஜா முறையும், விளக்கமும், மற்றும் விரிவான வழிபாடு முறையும் தொடர்புகொள்பவர்க்கு, வழங்கப்படும் என்பதை பணிவோடு தெரிவித்துக்கொள்கிறேன்

இந்த வலைப்பூவில் குறிப்பிட்டிருக்கும் செய்முறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்

ஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan@yahoo.com, அலைபேசி:- 92454 46956

தங்களது மேலான கருத்துக்களை பதிவிட்டு பிழை திருத்த கோருகிறேன்

This entry was posted in “யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்”, ஜெப விதி, புரோஹிதம், மந்திரங்கள், ஒரு எச்சரிக்கை, மந்த்ர ஸ்வரூபம், ராஜதனம், ஸ்ரீ பாலாம்பிகை, Dasa Maha-Vidhya, Mantra Derivation, Uncategorized and tagged , , , , , , , . Bookmark the permalink.