Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | அதிகாலையின் ஏன் எழவேண்டும்? | Why getup early?

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||

ஸ்ரீ லலிதாம்பிகை

|| க ஏ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||

जपो जल्पः शिल्पं सकलमपि मुद्राविचरना गतिः प्रादक्षिण्यक्रमणं अशनाद्याहुति विधिः |
प्रणामः संवेशः सुखमखिलमात्मार्पण दृशा सपर्या पर्यायसत्व भवतु यन्मे विलसितं ||

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

”அதிகாலையின் ஏன் எழவேண்டும்? | Why getup early?”

நமது அஞ்ஞானிகள் அதிகாலையில், எழுந்திரித்து காலைக்கடன்களையெல்லாம் முடித்துக்கொண்டு, இறைவனை வழிபடவேண்டும், சூரியோதயத்திற்கு முன் செய்யவும் வலியுறித்தி இருக்கிறார்கள்.

இன்றைய விஞ்ஞானிகள் கண்டறிந்தது கீழே –

cycle copy

காலை 6 மணி என ஆரம்பிப்போமா!

காலை 0600 மணி முதல் 0645 மணிக்குள், மனிதனுடய இரத்த அழுத்தம் உச்ச நிலையை அடைகிறது.

காலை 0730 அளவில் பினியல் உறுப்பினால் சுரக்கும் மெலடோனின் உற்பத்தி, நிற்கிறது.

காலை 0830 மணி அளவில் மல வெளியேற்றம் இருக்கும்

காலை 0900 மணி அளவில் டெஸ்டோஸ்டெரோன் அளவு அதிகமாக இருக்கும்.

காலை 1000 மணி அளவில் சுறுசுறுப்பு அதிகமாக இருக்கும்.

மதியம் 1430 மணி அளவு வரை உன்னதமான சிந்தையும் செயலும் இருக்கும்.

பிற்பகல் 1530 மணி அளவு வரை உன்னதமான செயல்பாடு இருக்கும்

சாயங்காலம் 1700 அளவில், மனித இதயமும், தசைகளும் மிக அதிக வலிமை கொண்டிருக்கும்

பிற்பகல் 1830 அளவில் இரத்த அழுத்தம் மறுபடியும் உச்சனிலையை அடையும்

இரவு 1900 அளவில், உடல் சூடு உச்சனிலை அடையும்

இரவு 2100 அளவில் மெலடோனின் உற்பத்தி ஆரம்பிக்கும்.

இரவு 2230 அளவில் மலஜல வெளியேற்றம் நிறுத்தப்படும்.

இரவு 0200 அளவில் மிக ஆழமான உறக்கம் நீடிக்கும்

விடிகாலை 0430 அளவில் உடலில் சூடு மிக குறைவாக இருக்கும். அது சுமார் 0600 வரை நீடிக்கும்.

இந்த செயல்கள் இயற்கையாகவே, இரவு பகலை அனுசரித்து அமைந்துள்ளது எனில் தவறாகாது. இந்த வளையத்தை நாம் மாற்றியமைக்க முற்படும்போது, வேண்டாத அழுத்தங்கள் உண்டாகி, உடல் சீர்கெடுகிறது நமது உடலின் புதுப்பித்துக்கொள்ளும் தன்மைக்கு / செயலுக்கு பாதகம் நேற்கிறது. இதன் காண் உருப்புகள் செயலிழத்தல், நோய்வாய்ப்படுதல், விரைவில் முப்பெய்தல் என பல சிக்கல்கள் நேர்கிறது.

நமது முன்னோர்கள், இரவு சீக்கிரமாக உறங்க சொல்வது சுமார் 2100 hrs ஆகும். அச்சமயம் பினியல் சுரப்பி தனது சுரத்தலை ஆரம்பிக்கிறது. இரவு முழுவனும் உடல் புதிப்பிக்கும் பணியை செவ்வெனெ இயற்ற (BODY REJUVENATION PROCESS) உடல் பணியெடுக்காமல் இருக்க வேண்டியுள்ளது. அது உறங்கும் சமயம். விடிகாலை சுமார் 0430 மணி அளவில், உடல் சூடு தணியும்பொழுது, தவிற்க்கப்பட்ட மலஜலத்தினால், மூத்திர பிண்டம், மூத்திரப்பை முத்லியவற்றில் படிமங்கள் உண்டாகும் வாய்ப்பு அதிகம், ஏனெனில், உடல் சூடு குறையும்பொழுது, நீரில் கரைந்திருக்கும் பல கனிம உப்புக்கள், நீரில் நின்றும் வெளியேரும். அவை, மறுபடியும் நீரில் கரைய உடல் சூடு அதிகரிக்கவேண்டும். அப்படியாயின், நாம் சீக்கிரமாக கண்விழித்து உடல் பணியெடுக்கவேண்டும்.

காலைக்கடன் முடிக்கும் பொழுது, உடல் சோர்வு குறைந்து மிக சுறுசுறுப்பாக இருக்கும். அதுபோலவே உடல் சூடும் அதிகரிக்கும். அச்சமயம், மூத்திரப்பை அல்லது பிண்டத்தில் உப்பு படியாமல், நீரோடு வெளியேரும். இதே போன்று மலம் இருகுதல், குடலுக்குள்ளே அழுத்தம், அழுகுதல், அபான வாயு உருவாதல் முதலியனவும் தடுக்கப்படுகின்றன.

காலை 0900 மணியளவில், ப்ரம்மா தனது தொழிலை ஆரம்பிக்கிறார். விந்து அல்லது நாத உற்பத்திக்காக டெஸ்டிக்கில் (TESTICLE HORMONE – TESTOSTRONE) சுரப்பிகள் பணியெடுப்பதால், ரத்தத்தில் விந்து அல்லது நாத உற்பாத்திக்காக வேண்டிய புரதம் அதிகமாகிறது.

பினியல் சுரப்பியினின்றும் சுரக்கும் திரவம், உடலின் புதுப்பித்துக்கொள்ளும் செயலை சீர்படுத்துகிறது. பினியல் சுரப்பி நமது மூளைப்பகுதியின் நடுவே நரம்பு மண்டலத்தின் இணைப்பின் மேலே, நெற்றிக்கண் என்று அறியப்படுகின்ற புருவ மத்தியில் சிறிது பின் புரத்தே உள்ளது. நமது “எல்லா வேதமுமே / யோகமுமே / மார்கமுமே இந்த புருவ மத்தியில் உள்ள பினியல் சுரப்பியின் செயல் ஆற்றலை விரிவாக்குவதே” என்றால் மிகையாகாது.

***

“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |

ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||

சுபம்

இந்த வலைப்பூவில் கொடுக்கப்படும் முன்னோர்கள் அருளிய வேதம், வேத தழுவல், வேத மந்திரங்கள், உபனிஷத், பாஷ்யம், பாஷ்ய தழுவல், விரிவுரைகள், ஸ்லோகம், ஸ்தோத்ரம், அவற்றின் யந்திரங்கள், அதற்குறிய தந்திரங்கள் முதலியன, எவர் ஒருவடைய தனிப்பட்ட சொத்தும் அல்ல. நமது மூதாதையர்கள் அவர்தம் தவ பலத்தால் அறிந்ததேயாகும். அவர்கள் லோக கல்யாணத்திற்காக அவையெல்லாவற்றையும் நமக்கு அளித்தனர். இவற்றின் ப்ரயோக விதி, வழிபாடுமுறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” அவள் அனுக்ரஹத்தால், வழிகாட்டுதலால் கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்!

ஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு தேவையான எளியோன் அறிந்த மந்திரம், யந்திரம், தந்திரம், விதிமுறைகள், வேண்டுபவரின் தகுதி அனுசரித்து அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan [at] yahoo [dot] com, அலைபேசி:- +91 92454 46956, Whatsapp:- +91 96774 50429

This entry was posted in Uncategorized, Why getup early? and tagged , , , . Bookmark the permalink.