சிவ ஆகமம் – அலங்காரம்

9.1 ஆவுடையாருக்கு வஸ்த்ரம்: காலஸந்தி பூஜையிலே வெள்ளை வஸ்த்ரமும், உச்சிகால பூஜையின்போது சிவப்பு வஸ்த்திரமும், சாயரக்ஷை பூஜை காலத்தில் மஞ்சள் வண்ண வஸ்த்ரமும், அர்த்யாம பூஜையின்போது எல்லா வஸ்திரங்களும் சாத்தலாம்.

9.2  பழமையானது, கிழிந்ததும், வெடித்ததும், எலி கடித்ததுமான வஸ்திரங்களை விலக்க வேண்டும்.

9.3 கவச மந்திரத்தினால்  பூணூலும், ஹ்ருதய மந்திரத்தினால் வஸ்திரமும் சாத்த வேண்டும். வாசனைத்  திரவியங்களோடு  கூடிய சந்தனம் சாத்த வேண்டும்.

9.4 அருக, கோஷ்டம், குங்குமம், கற்பூரம், பன்னீர் இவைகள் கலந்த சந்தணத்தை இறைவனுக்குச் சாத்த வேண்டும்

9.5  இலிங்கத்தின் சிரஸில் ஒருபோதும் புஷ்பம் இல்லாமல் இருக்கக் கூடாது.

9.6 கனிஷ்டை (சுண்டு விரல் அல்லது சிறு விரல்), அனாமிகை (மோதிர விரல் அல்லது அணி விரல்) விரல்களுக்கு இடையில் புது மலரை வைத்துக் கொண்டு, அங்குஷ்டம் (கட்டை விரல் அல்லது பெரு விரல்), தர்ஜனி (சுட்டு விரல் அல்லது ஆள்காட்டி விரல்) விரல்களால் நிர்மால்யத்தைக் களைய வேண்டும்; அப்படிக் களையும்போது, முன்விரலில் இடுக்கி வைத்துள்ள புதுமலரைச் சாத்த வேண்டும் (மத்யமை என்று கூறப்படும் நடு விரல் அல்லது பாம்பு விரல் இந்தக் கிரியையில் பயன் படுத்தப்படுவதில்லை.)

This entry was posted in Uncategorized and tagged , , , , , . Bookmark the permalink.