Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | இலவச சர்வ தோஷ நிவாரண ஹோமம்!

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||

ஸ்ரீ லலிதாம்பிகை

|| க ஏ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||

जपो जल्पः शिल्पं सकलमपि मुद्राविचरना गतिः प्रादक्षिण्यक्रमणं अशनाद्याहुति विधिः |
प्रणामः संवेशः सुखमखिलमात्मार्पण दृशा सपर्या पर्यायसत्व भवतु यन्मे विलसितं ||

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

இலவச சர்வ தோஷ நிவாரண ஹோமம்

ஸ்ரீ குரு பரமாச்சார்யாள் பெரும் கருணையாலும், இறைவ இறைவியர் பேரருளாலும், தானிகளின் பங்களிப்பாலும், சில தினங்களில் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி பீடத்தை அணுகுபவர்க்குசர்வ தோஷ நிவாரண ஹோமம்” இலவசமாக நடத்திக்கொடுக்கப்படும், இது ஸ்ரீவித்யா உபதேசம் பெறவும், தடையில்லா, சீரும் சிறப்புமிகு வாழ்வு வாழவும் உதவும்.

விருப்பப்படுபவர்க்கு, பல விஷேஷ சத்கர்ம ஹோமங்களும் விதிமுறைப்படி தகுந்த ஆச்சார்யர் மூலமாக நடத்திக் கொடுக்கப்படும். உதாரணம். கனகதாரா ஹோமம், மஹா சுதர்ஷன ஹோமம், மஹா ம்ருத்சஞ்சீவனி ஹோமம் முதலியன. விபரங்கள் அறிய thiruvalamsivan@yahoo.com எனும் மின்னஞ்சலில் தொடர்புகொள்ளவும்.

தோஷ வகைகள்: 5.

1.வஞ்சித தோஷம், 2.பந்த தோஷம், 3.கல்பித தோஷம், 4.வந்தூலக தோஷம், 5.ப்ரணகால தோஷம் என்பதாம்

தோஷங்கள் (யாம் அறிந்தது, முக்கியமானது): 21

அவையாவன – 1. கால தோஷம், 2. கிரக தோஷம், 3. ராகு தோஷம், 4. கேது தோஷம், 5. செவ்வாய் தோஷம், 6. சனி தோஷம், 7. பித்ருதோஷம், 8. மாங்கல்ய தோஷம், 9. புத்திர தோஷம், 10. மனை தோஷம், 11. வ்ருட்ச தோஷம், 12 சர்ப்ப தோஷம், 13. பட்சி தோஷம், 14. மிருக தோஷம், 15. ரிஷி தோஷம், 16. தேவ தோஷம், 17 களத்திர தோஷம், 18. கண் திருஷ்டி, 19. தீய எண்ண தாக்குதல், 20. தீய சக்திகளால் தாக்குதல், 21. பொறாமை முதலியனவாகும்.

சாபங்கள் 13.

1.பெண் சாபம், 2) பிரேத சாபம், 3) பிரம்ம சாபம், 4) சர்ப்ப சாபம், 5) பித்ரு சாபம், 6) கோ சாபம், 7) பூமி சாபம், 8) கங்கா சாபம், 9) விருட்ச சாபம், 10) தேவ சாபம், 11) ரிஷி சாபம், 12) முனி சாபம், 13) குலதெய்வ சாபம்.

இவை அனைத்தினும் பரிஹாரமாக ஒரு இலவச பரிஹார / சாந்தி ஹோமம் 10 நபர்கட்கு மட்டும் விரைவில் நித்தியமும் தானிகளின் பேருதவியால் நடைபெற உளது என்பதை பெருமையுடன் தெரிவிக்கிறோம்.

இந்த ஹோமங்களில் பங்கெடுக்க உங்களது பிறப்பு விபரம் அவசியம். மேலும் உங்கள் ஜென்ம நட்சத்திரம் வரும் தினம் பரிகாரம் செய்ய பெரும் பலன் கிட்டும்.

நடக்கவுள்ள இடமும் சமயமும் பற்றிய அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

தேவையுள்ளவர்கள் உடனே தொடர்பு கொள்க! பதிவு செய்க!

இத்தொண்டுடன் இணைய விரும்புபவர் பணமாகவோ, பொருளாகவோ கொடை நல்க!

***

“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |

ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||

சுபம்

இந்த வலைப்பூவில் கொடுக்கப்படும் முன்னோர்கள் அருளிய வேதம், வேத தழுவல், வேத மந்திரங்கள், உபனிஷத், பாஷ்யம், பாஷ்ய தழுவல், விரிவுரைகள், ஸ்லோகம், ஸ்தோத்ரம், அவற்றின் யந்திரங்கள், அதற்குறிய தந்திரங்கள் முதலியன, எவர் ஒருவடைய தனிப்பட்ட சொத்தும் அல்ல. நமது மூதாதையர்கள் அவர்தம் தவ பலத்தால் அறிந்ததேயாகும். அவர்கள் லோக கல்யாணத்திற்காக அவையெல்லாவற்றையும் நமக்கு அளித்தனர். இவற்றின் ப்ரயோக விதி, வழிபாடுமுறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” அவள் அனுக்ரஹத்தால், கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்!

ஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு தேவையான எளியோன் அறிந்த மந்திரம், யந்திரம், தந்திரம், விதிமுறைகள், வேண்டுபவரின் தகுதி அனுசரித்து அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan [at] yahoo [dot] com, அலைபேசி:- +91 92454 46956, Whatsapp:- +91 96774 50429

This entry was posted in இலவச சர்வ தோஷ நிவாரண ஹோமம், சர்வ தோஷ நிவாரண ஹோமம், Uncategorized and tagged , , , , , , , . Bookmark the permalink.