Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | ஸ்ரீ சக்தி பஞ்சாக்ஷரீ

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||

sivaparvath

|| க ஏ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||

जपो जल्पः शिल्पं सकलमपि मुद्राविचरना गतिः प्रादक्षिण्यक्रमणं अशनाद्याहुति विधिः |
प्रणामः संवेशः सुखमखिलमात्मार्पण दृशा सपर्या पर्यायसत्व भवतु यन्मे विलसितं ||

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

”ஸ்ரீ சக்தி பஞ்சாக்ஷரீ”

அஸ்ய ஸ்ரீ சக்தி பஞ்சாக்ஷரீ மஹா மந்த்ரஸ்ய, வாமதேவ ரிஷி: அனுஷ்டுப் சந்த:, சாம்பசதாஸிவோ தேவதா!

ஸ்ரீ சக்தி பஞ்சாக்ஷரீ மஹா மந்திரத்துக்கு வாமதேவ ரிஷி: இந்த ரிஷிதான் இந்த மந்திரத்தை கண்டு உலகிற்கு கொடுத்தார். இந்த மந்திரம் அனுஷ்டுப் சந்தஸில் அமைந்துள்ளது. இந்த மந்திரத்துக்கு தேவதை சாம்பசதாஸிவன்.

ரிஷி புத்தி சம்பந்தப்பட்டதால் அதை சொல்லும்போது தலையை தொடுகிறோம். ச்சந்தஸ் என்பது ஒலியுடன் சம்பந்தப்பட்டதால் வாயை தொட வேண்டும். தேவதையை ஹ்ருதயத்தில் ஸ்தாபிப்பதால் ஹ்ருதய ஸ்தானத்தை தொட வேண்டும்.

ஹ்ராம் பீஜம். ஹ்ரீம் சக்தி: ஹ்ரூம் கீலகம்.
சாம்ப சதாசிவ ப்ரஸாத சித்த்யர்த்தே ஜபே வினியோக:

பீஜம் வலது தோள்; சக்தி இடது தோள்; கீலகம் நடு மார்பு / தொப்புள்; இந்த இடங்களில் தொட வேண்டும். வினியோகஹ என்னும் போது உள்ளங்கைகளை பக்கத்து பக்கத்தில் நீட்டி வைத்து இருந்து மந்திரம் சொல்லி விரல் நுனிகள் ஹ்ருதயத்தை நோக்கி சுழற்றி திருப்ப வேண்டும். (சில சம்பிரதாய வித்தியாசங்கள் உண்டு)

ஹ்ராம் அங்குஷ்டாப்யாம் நம:
ஹ்ரீம் தர்ஜனீப்யாம் நம:
ஹ்ரூம் மத்யமாப்யாம் நம:
ஹ்ரைம் அனாமிகாப்யாம் நம:
ஹ்ரௌம் கனிஷ்டிகாப்யாம் நம:

இவற்றைச் சொல்லி கட்டை விரலில் ஆரம்பித்து சின்ன விரல் வரை – விரல் கையில் சேருமிடத்தில் இருந்து நுனி வரை தடவிக்கொடுக்க வேண்டும். எப்படி என்பதை முன்னேயே பார்த்தோம்.

ஹ்ர: கலதல கரப்ருஷ்டாப்யாம் நம:
இதைச்சொல்லி கைகளை உள்ளும் புறமும் மற்ற கையால் துடைக்க வேண்டும்.

ஹ்ராம் ஹ்ருதயாய நம:
ஹ்ரீம் ஸிரஸே ஸ்வாஹா.
ஹ்ரூம் ஸிகாயை வஷட்.
ஹ்ரைம் கவசாய ஹூம்.
ஹ்ரௌம் நேத்ர த்ரயாய வௌஷட் .
ஹ்ர: அஸ்த்ராய பட்.

ஹ்ராம் ஹ்ருதயாய நம: – ஐந்து விரல்களாலும் ஹ்ருதய ஸ்தானத்தை தொட வேண்டும்.
ஹ்ரீம் ஸிரஸே ஸ்வாஹா. – வலது கை நடு விரல் மோதிர விரலால் தலை உச்சியையும்;
ஹ்ரூம் ஸிகாயை வஷட். – கட்டை விரலால் சிகையையும் தொட வேண்டும்.
ஹ்ரைம் கவசாய ஹூம்.. . -கைகளை மறித்து தோள்களை தொட்டு கவசம் செய்ய வேண்டும்.
ஹ்ரௌம் நேத்ர த்ரயாய வௌஷட் .- நடு விரலால் புருவ மத்தியையும் பக்கத்து விரல்களால கண்களையும் தொட வேண்டும்.
ஹ்ர: அஸ்த்ராய பட்.- சுட்டு விரலை மட்டும் நீட்டி தலையை வலமாக சுற்றி இடது உள்ளங்கையை இரு முறை மெல்லத் தட்ட வேண்டும்.

பூர் புவஸுவரோம் இதி திக்பந்த:,
தலையைச்சுற்றி வலமாக சொடுக்கி திக் பந்தம் செய்ய வேண்டும்.

இதுவே ஜபம் முடிந்த பின் செய்யும்போது பூர் புவஸுவரோம் இதி விமோக: என்றாகும். சுற்றுவதும் இடமாக ஆகும். கட்டை அவிழ்த்து விடுகிறோம் இல்லையா?

அடுத்து த்யான ஸ்லோகம்:

மூலே கல்பத்ருமஸ்ய த்ருத கனகநிபம் சாரு பத்மாஸனஸ்தம்
வாமாங்காரூட கௌரி நிபிட குசபராபோக காடோப கூடம்
நானாலங்கார காந்தம் வர பரசு ம்ருகாபீதி ஹஸ்தம் த்ரிநேத்ரம்
வந்தே பாலேந்து மௌலிம் கஜ வதன குஹாஸ்லிஷ்ட பார்ஸ்வம் மஹேஷம்

பொருள்: கற்பக விருக்ஷத்தின் அடியில் பொன் போன்ற மேனியுடன் பத்மாஸனத்தில் வீற்றிருப்பவரும், இடது புறம் மடியில் அமர்ந்திருக்கும் கௌரியின் மார்பை இறுகத்தழுவி இருப்பவரும், பலவிதமான அலங்காரங்களுடன் பிரகாசிப்பவரும், வரம், பரசு, மான், அபயம் ஆகியவற்றை கைகளில் தரிப்பவரும், முக்கண்ணரும், சிரசில் இளம் பிறைச் சந்திரனை அணிந்தவரும் கணபதியும் குஹனும் இரு புறமும் சேர்ந்திருக்கப்பெற்றவரும் ஆகிய மஹேஸ்வரனை வந்தனம் செய்கிறேன்.

லம் ப்ருத்வியாத்மனே கந்தாந் தாரயாமி
ஹம் ஆகாசாத்மனே புஷ்பை: பூஜையாமி
யம் வாய்வாத்மனே தூபம் ஆக்ராபயாமி
ரம் அக்ன்யாத்மனே தீபம் தர்ஸயாமி
வம் அம்ருதாத்மனே மஹா நைவேத்யம் நிவேதயாமி
ஸம் ஸர்வாத்மனே ஸமஸ்த ராஜோபசாரான் ஸமர்ப்பயாமி.

மூலம்: || ஓம் ஹ்ரீம் நம: சிவாய ||

இதுக்கு அப்புறம் ஜபம். முடிஞ்சு திருப்பியும் அங்க ந்யாஸம் (வித்தியாசம் சொல்லி இருக்கேன்), த்யானம், பஞ்ச பூஜை. சமர்ப்பணம் முடித்து. ஆசமனம் செய்து விட்டு இந்த உலக வியவகாரங்களுக்கு திரும்பலாம்.

***

“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |

ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||

சுபம்

இந்த வலைப்பூவில் கொடுக்கப்படும் முன்னோர்கள் அருளிய வேதம், வேத தழுவல், வேத மந்திரங்கள், உபனிஷத், பாஷ்யம், பாஷ்ய தழுவல், விரிவுரைகள், ஸ்லோகம், ஸ்தோத்ரம், அவற்றின் யந்திரங்கள், அதற்குறிய தந்திரங்கள் முதலியன, எவர் ஒருவடைய தனிப்பட்ட சொத்தும் அல்ல. நமது மூதாதையர்கள் அவர்தம் தவ பலத்தால் அறிந்ததேயாகும். அவர்கள் லோக கல்யாணத்திற்காக அவையெல்லாவற்றையும் நமக்கு அளித்தனர். இவற்றின் ப்ரயோக விதி, வழிபாடுமுறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” அவள் அனுக்ரஹத்தால், வழிகாட்டுதலால் கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்!

ஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு தேவையான எளியோன் அறிந்த மந்திரம், யந்திரம், தந்திரம், விதிமுறைகள், வேண்டுபவரின் தகுதி அனுசரித்து அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan [at] yahoo [dot] com, அலைபேசி:- +91 92454 46956, Whats App:- +91 96774 50429

This entry was posted in ஸ்ரீ சக்தி பஞ்சாக்ஷரீ, Uncategorized and tagged , , . Bookmark the permalink.