ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை
|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||
|| க ஏ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||
जपो जल्पः शिल्पं सकलमपि मुद्राविचरना गतिः प्रादक्षिण्यक्रमणं अशनाद्याहुति विधिः |
प्रणामः संवेशः सुखमखिलमात्मार्पण दृशा सपर्या पर्यायसत्व भवतु यन्मे विलसितं ||
* * *
வலைப்பூ அன்பர்களுக்கு,
”பஞ்சதஸி | Panchadasi”
பஞ்சதஸி தொடர்கிறது!
ஓம் எனும் ப்ரணவத்தை பஞ்சதஸியின் முதல் கூடத்தின் முன் இணைத்தால் அது சுந்தரி வித்யையாகும். இரண்டாவது கூடத்தின் முன் இணைத்தால் அது ப்ரம்ம-சுந்தரிவித்யையாகும், மூன்றாவது கூடத்தின் முன் இணைத்தால் அது அனந்த-சுந்தரிவித்யை என்பதாம்!
இதுபோலவே பஞ்சசுந்தரிவித்யையில், பாஷா, ஸ்ருஷ்டி, ஸ்திதி, லயம் மற்றும் நிராகாயா என்பதாக காணப்படுகிறது!
பஞ்சதஸியின் முன்னர் ப்ரணவமும், பின்னர் ரஹஸ்யமாக கருதப்படும் ஸ்ரீம், க்லீம், ஐம் போன்ற பீஜங்கள் தேவைக்கேற்ப இணையும் பொழுது அவை சோடஸி எனப்படுகிறது! உதாரணம்: ஓம் க ஏ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் க்லீம் (அ) ஓம் க ஏ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ஐம் (அ) ஓம் க ஏ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ஸ்ரீம். இந்த மாற்றங்களை உபதேசிக்கும் குருவானவரிடம் பணிவுடன் தெரிந்துகொள்ளல் வேண்டும்!
ஓம் க ஏ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ஸ்ரீம் ஹம்ஸ: சப்ததஸியாகும்!
ஐம் க ஏ ஈ ல ஹ்ரீம்; ஹ்ரீம் ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ்ரீம் ஸ க ல ஹ்ரீம் என்பது அஷ்டதஸி என்பதாம்!
க ஏ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ஸ்த்ரீம் ஐம் க்ரௌம் க்ரீம் க்லாம் ஹூம் என்பது சித்தயாமளாவித்யா எனும் 21 அக்ஷரங்களுடயதாகும்!
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஐம் சௌ: ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க ஏ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் சௌ: ஐம் க்லீம் ஹ்ரீம் ஸ்ரீம் என்பது 28 அக்ஷரங்களையுடைய மஹாஸோடஸியாகும்!
ஓம் ஐம் க்லீம் சௌ: க ஏ ல ஹ ஹ்ரீம் சௌ: க்லீம் ஐம்
ஓம் ஐம் க்லீம் சௌ: ஹ ஸ க ல ஹ்ரீம் சௌ: க்லீம் ஐம்
ஓம் ஐம் க்லீம் சௌ: ஸ க ஹ ல ஹ்ரீம் சௌ: க்லீம் ஐம் ஓம் || என்பது பரா வித்யா ஆகும்! இதிலும் சில மாற்றங்கள் க்ரந்தங்களில் காணப்படுகிறது!
ஓம் ஐம் க்லீம் சௌ: க ஏ ல ஹ ஹ்ரீம் சௌ: க்லீம் ஐம் ஓம்;
ஓம் ஐம் க்லீம் சௌ: ஹ ஸ க ல ஹ்ரீம் சௌ: க்லீம் ஐம் ஓம்
ஓம் ஐம் க்லீம் சௌ: ஸ க ஹ ல ஹ்ரீம் சௌ: க்லீம் ஐம் ஓம் || என்பது மற்றொன்று!
இவற்றின் எல்லா மந்திரத்தின் சித்திகளுக்கு ஆதாரமாக பாலாவின் ஐம் க்லீம் சௌ: எனும் த்ரியக்ஷரியே விளங்குகிறது!
முதலாவது க ஏ ஈ ல ஹ்ரீம் என்பதும் அதன் மருவல்களும் பராம்பிகையின் பீஜங்களாகவும்,
பஞ்சதஸியின் இரண்டாம் கூடமான “ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்” என்பதையே மந்த்ரிணீ எனும் ராஜஷ்யாமளா எனும் ராஜமாதங்கியாவாள்! இந்த தேவியின் மந்திரமாக “ஐம் க்லீம் சௌ: ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம்” அல்லது “ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஐம்” அல்லது ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் க்லீம் சௌ: ஓம் நமோ ராஜமாதங்கேஸ்வரீ ஐம் அல்லது ஹஸ்த்ரைம் ஹ ஸ க ஹ ல ஹ்ரீம் ஹஸ்த்ரௌ: என்பதாகும்!
மூன்றாவது சக்திகூடமான “ஸ க ல ஹ்ரீம்” தண்டநாதா எனப்படும் வராஹி அம்மனுடையது ஆகும். ஐம் க்லௌம் ஐம் ஓம் நமோ பகவதி வார்த்தாளி வராஹி வராஹமுகி அல்லது ஹஸைம் ஸ க ல ஹ்ரீம் ஹஸ்த்ரௌம் என்பதாம்!
அடுத்தது ப்ரத்யங்கிரா தேவியின் மந்திரத்தை காண்போமா! ஹ்ரீம் க்ஷம் ப்ரத்யங்கிரே க்லீம் ஹ்ரீம் க்ஷம் ஹூம் ஃபட் சௌ: என்பதே அது! இனியும் வெகுவான மந்த்ரங்கள் இந்த பிரிவிலேயே உள்ளன, இயன்றவரை எடுத்துரைக்க கடமைப்பட்டுள்ளேன்!
இப்பதிவானது எல்லோருக்கும் ஆஷாட நவராத்திரி உபாஸனைக்கு உதவும் என நம்புகிறேன்!
***