Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | ஸ்ரீ மஹா சுதர்ஸன ஹோமம்!

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||

Chakra

|| க ஏ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

ஸ்ரீ மஹா சுதர்ஸன ஹோமம்!

ஸ்ரீ மஹா சுதர்ஸன ஹோம வழிமுறைகள் மற்றும் பலன்கள்

1. சுதர்ஸன ஹோமம் எதற்கெல்லாம் பண்ணலாம்?

ஸ்ரீ மஹா சுதர்ஸன ஹோமம் பொதுவாக எல்லாவித நிவாரணங்களுக்கும் பண்ணலாம். ஒவ்வொரு தேவதைக்கும் ஒவ்வொரு ஆயுதம் அதாவது ஒருவிதமான பிரச்சினையை மட்டும் தீர்க்கும் சக்தி என்;றால் ஸ்ரீ சுதர்ஸனருக்கு 16 ஆயுதங்கள் உண்டு. இந்த 16 ஆயுதங்களால் நாம் வாழ்வில் பெறவேண்டிய 16 விதமான செல்வங்களையும் பெருவதற்குத் தடையாக உள்ள அத்தனை தீய சக்திகளையும் அழித்து நம்மைப் பதினாரும் பெற்றுப் பெருவாழ்வு வாழவைக்கிறார். ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் சக்ராயுதமான ஸ்ரீ மஹா சுதர்ஸனர் ஸ்ரீ சக்ரத்தாழ்வார் என்றும் அழைக்கப்படுவார். மேற்படி ஸ்ரீ சக்ரமே பக்தர்களைக் காப்பாற்ற எப்போதும் துணை நிற்கிறது என்பது புராணம். எனவே இப்படிப்பட்ட ஸ்ரீ மஹா சுதர்ஸன ஹோமத்தின் பலனை முழுமையாகப் பெற, நடத்திக்கொடுப்பவர் மிகுந்த பக்தி ச்ரத்தை, நீண்ட அநுபவம், வைராக்ய அநுஷ்டானம், நல்ல கைராசி, பூர்ண வாக் பலிதம் முதலிய தகுதி பெற்றிருத்தல் முக்கியமாகும். இவற்றுடன் வேதாப்யாசமும் உள்ளவராயின் மிகவும் நன்மை உண்டாகும்.

2. ஸ்ரீ சுதர்ஸன ஹோமத்திற்கு நாள் தேர்ந்தெடுக்க:

வீட்டில் உள்ள பெரியவர்கள் அல்லது குடும்பத் தலைவரின் ஜன்ம மாத ஜன்ம நக்ஷத்திர தினம், அல்லது எந்த மாதத்திலும் சித்திரை, ஸ்வாதி அல்லது திருவோண நக்ஷத்திரம் உள்ள நாள், அல்லது பொதுவான முஹ_ர்த்த நாள் அல்லது குடும்ப உறுப்பினர் யாருடையதாயினும் பிறந்த நாள் அல்லது திருமண நாள் அல்லது ஏதாவது ஒரு சனிக்கிழமை என்று எந்த தினத்தில் வேண்டுமானாலும் ஸ்ரீ மஹா சுதர்ஸன ஹோமத்தை அநுஷ்டிக்கலாம். விழுப்புத் தீட்டு கலக்காமல் சுத்தமாகவும் பக்தி ச்ரத்தையுடனும் பரம விஸ்வாசத்துடனும் நம்பிக்கையுடனும் செய்யப்படும் ஸ்ரீ மஹா சுதர்ஸன ஹோமத்தினால் மட்டுமே நல்ல பலன்களை எதிர்பார்க்கமுடியும். (நல்ல பலன் ஏற்படவேண்டும் என்ற விதி உள்ளவர்களுக்கே அவர்கள் முயற்சிக்குத தக்க இப்படிப்பட்ட வாய்ப்பு தாமாகவே உருவாகும்)

3. ஸ்ரீ மஹா சுதர்ஸன ஹோமத்தில் அல்லது எப்போதுமே பெருமாளிடம் தன்னுடைய கோரிக்கைகளை தெரிவிக்க வேண்டிய முறை: தனக்கு ஒரு சொந்த வீடு அமையவேண்டும் என்றால் பெருமாளே எனக்கு ஒரு சொந்தவீடு நீ தரவேண்டும் என்று வேண்டக்கூடாது பதிலாக பெருமாளே அடியேன் ஒரு சொந்தக் குடிலை அமைத்துக்கொள்ள தேவையான சக்தியினையும், அதற்குகந்ததான மற்ற அநுகூலங்களையும் அது ஸம்பந்தமான அடியேன் முயற்சிகளில் கால தாமதமும் ஏமாற்றமும் இன்றி நல்ல இடத்தையும் நல்ல மனிதர்களையும் காட்டிக் கொடுத்து ஒரு நல்ல க்ருஹம் அமைய ஆவன செய்ய வேண்டுமாய்ப் ப்ரார்திக்கிறேன் என்றும் வேண்டிக் கொள்ளவேண்டும். சங்கல்பத்திலேயே தங்கள் கோரிக்கைகளைச் சேர்க்க வாத்தியாரிடம் கீழ்கண்ட தகவல்களைத் தரவேண்டும்.

1. தங்கள் நக்ஷத்திரம்
2. ராசி
3.கோத்திரம்
4. சர்மண் (ஆண்களுக்கு உபநயனத்தின் போதும் பெண்களுக்கு திருமணத்தின்போதும் வைக்கப்படும் வைதீக பெயர்)
5. ஹோமம் நடத்தும் யஜமானனுக்கு உறவு
6. தங்கள் கோரிக்கை (விண்ணப்பம் வெளியில் சொல்ல முடியாததாயின் நினைத்தது நிறைவேற என்று சொல்லலாம்) என்ற ரீதியில் முன்கூட்டி ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதி தயாரித்து வைத்துக்கொள்வது நலம். ஹோமம் நடக்கும் காலத்தில் மந்திர சப்தம் தவிர வேறு எந்த அப சப்தமும் (பேச்சும்) இல்லாமல் இருப்பது மிகுந்த பலனைத் தரும்.

4. ஹோமம் நிர்ணயிக்கப்பட்ட நாளுக்கு முதல் நாளே க்ருஹத்திலுள்ள தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தி அழுக்கு மற்றும் துர்வாசனை இன்றி அனைத்து இடங்களையும் அலம்பித் துடைத்து தேவையான இடங்களில் வண்ண வண்ணமாகக் கோலமிட்டு வைக்கவேண்டும். அனைவருக்கும் மடித்துணிகள் உலர்த்தி வைக்கவேண்டும். ஹோமம் நடைபெறும் நாளில் அடிக்கடி மலம் சிறுநீர் தொந்திரவு ஏற்படாத வகையில் வயிற்றையும் உடம்பையும் தகுந்த ஆகார நியமத்துடன் சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும். காலையில் எழுந்து தீர்த்தமாடி மடி உடுத்தி வாசலில் மாவிலைத் தோரணங்கள் கொண்டு அலங்கரித்து வாசலில் பெரிதாக அழகாக கோலங்கள் போட்டு வைத்து, வருபவர்கள் கால் சோதித்துக் (அலம்பிக்) கொண்டு உள்ளே வருவதற்கு ஏதுவாக ஒரு பாத்திரத்தில் ஜலம் வைத்து மொண்டு ஆள்வதற்கு ஒரு சுத்தமான பாத்திரமும் எடுத்து வைக்கவேண்டும். சாம்பிராணி தூபம் தயார் செய்து ஒவ்வொரு அறையிலும் நன்றாகப் பரவச் செய்து மணம் கமழ வைக்கவேண்டும். வீட்டில் உள்ள பெருமாள் அறையில் உள்ள பழைய குப்பைகளை நன்றாகத் துடைத்து படங்களையும் கழற்றி நன்றாகத் துடைத்து மாட்டி வைக்கவேண்டும். பெருமாள் திருவாராதன பாத்திரங்கள் மணி, சொம்பு, ஸ்தாலி போன்ற அனைத்தையும் புளி, சாணி போட்டு கேஸவாதி 12 நாமங்களைக் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டே ஜ்வலிக்கும்படியாக சுத்தி பண்ணி வைக்கவேண்டும். வீட்டில் நம் குடும்பத்தைச் சேர்ந்த மிக நெருங்கிய பந்துக்கள் அண்ணா தம்பிகள் சித்தப்பா பெரியப்பாக்கள் வீட்டில் உள்ள சாளக்ராம பெருமாள்களை- யெல்லாம் மடியாக ஏளப்பண்ணி கொண்டு வரலாம். அதுபோல் பெருமாள் விக்ரஹங்கள் இருந்தாலும் ஏளப்பண்ணலாம். ஹோமம் நடக்கப்போகும் அறையில் உள்ள வெப்பத்தால் சேதமடையக்கூடிய மெல்லிய ப்ளாஸ்டிக்கால் ஆன பொருட்கள், கண்ணாடி பொருட்கள் இவற்றை பத்திரமாக அப்புறப்படுத்தி வைத்துவிடுவது நல்லது.

காம, க்ரோத, வக்ர சிந்தனைகள் தமக்கும் ஏற்படாமல் காத்து, பிறருக்கும் ஏற்பட்டுவிடக்கூடிய சூழ்நிலையைத் தவிர்த்து காக்கவேண்டும். நாம் மனதில் எண்ணுவதை மனிதர்களால் வேண்டுமானால் உணர முடியாது, பெருமாளுக்கோ, தர்ம தேவதைக்கோ அறிய முடியாமல் போகாது. தர்ம தேவதையின் தீர்ப்புகள் நம் ஒவ்வொரு எண்ணம் செயல்பாடு அனைத்தும் முடிவுறும் அந்த க்ஷணத்திலேயே வழங்கப்பட்டு பாப புண்ணிய கணக்குகள் ஒவ்வொரு நொடிக்கும் அப்டேட் செய்யப்படும் வகையில் ப்ரோக்ராம் செய்யப்பட்டுள்ளன. அந்த நாளில் கண்ணில் படும் ஆண் பெண் அனைவரையும் பெருமாள் தாயாராகவே எண்ணியிருக்கவேண்டும். எந்த வஸ்த்துவில் எந்த இடத்தில் எந்த தேவதைகள் இருப்பரோ என எண்ணி, அலட்சிய மனோபாவம் சிறிதும் இன்றி மிகவும் கவனமாக நடந்துகொள்ளவேண்டும். அப்படி கவனமாக இருந்து நம் சிரத்தையினால் அடுத்தவர்கள் சிரத்தை அதிகரிக்கும் விதமாக நடந்துகொள்ளவேண்டும். அசிரத்தையாகக் காணப்படுபவரிடம் கூட அசூயை இன்றி மிகவும் பக்குவமாக அந்த ஸன்னிவேசத்தை மாற்றி அமைக்கவேண்டும். இப்படி சிரத்தையாக இருந்து சிரத்தையாக ஹோமங்கள் நடக்கும் இடத்தில் மஹா விஸ்வாசமும் மஹா பாக்யமும் உள்ளவர்களுக்கு பெருமாள் ஏதாவது ஒரு ரூபத்தில் கண்டிப்பாக ப்ரத்யக்ஷமாவார் அந்த அநுபவமானது இதுவரை தங்கள் தங்கள் ஆயுளில் தாங்கள் எதுவெல்லாம் மஹத்தான மறக்க இயலாத இன்பம் என்று எண்ணியிருந்தீரோ அதைப்போல் பலமடங்கு இன்பம் தானாக உடல் எங்கும் பரவி மனத்தில் ஒரு அளவிடமுடியாத சாந்தியை உணரலாம். அதுவே பெருமாள் அநுக்ரஹம் பூரணமாக கிடைத்ததற்காக அறிகுறி. இந்த அநுபவம் ஏற்படாவிட்டால் தோல்வி என்று பொருள் அல்ல. அதை அநுபவிக்க நமக்குப் பக்குவம் போதவில்லை என்பதே பொருள். ‘பலன்” என்பதன் பொருள் என்ன? நாம் செய்யும் ஒரு செயலுக்கான எதிர் விளைவு நமக்கு அநுகூலமாக அதாவது பேவரபிளாக இருக்கவேண்டும் அல்லவா? தற்போது இந்த ஸ{தர்சன ஹோமம் பண்ணுவதால் நமக்குக் கிடைக்கப்போகும் பலன்களை பார்ப்போம்.

பலன்கள் இரண்டு வகைப்படும்.

1. த்ருஷ்ட பலன்: கண்கூடாகத் தெரியக்கூடிய அல்லது அறியக்கூடிய விஷயங்கள்

2. அதிர்ஷ்ட பலன்: நேரடியாகத் தெரியாதது, காலக்ரமத்தில் உணர்ந்து அறியக்கூடியது.

த்ருஷ்ட பலன்கள்:-

1. குறிப்பிட்ட நாளில் உடல் தூய்மை பெருகிறது.
2. மனம் தூய்மை பெருகிறது.
3. இல்லம் தூய்மை பெருகிறது.
4. பிறரால் கவனிக்கப்படுகிறோம்.
5. பிறரால் மதிக்கப்படுகிறோம்.
6. பிறரரால் வாழ்த்தப்படுகிறோம்.
7. சுற்றமும் நட்பும் ஓம்பப்படுகிறது,
8. இதற்குண்டான செலவில் பணம் சென்றடைபவரின் குடும்பங்கள் பிழைக்கின்றன.
9. மனிதாபிமானம், மனிதநேயம் போன்றவை வெளிப்படுகின்றன.
10. பொருமை, தன்னடக்கம், ச்ரத்தை போன்ற சிறப்பான ஒழுக்கங்களை பேணும் வைராக்யம் வருகிறது.
11. தங்களின் பண்பு நலன்கள் பிறருக்கு அறியக் கிடைக்கிறது.
12. வந்திருந்தோரின் பண்பு நலன்கள் நமக்கு அறியக் கிடைக்கிறது.
13. புதிய தகவல்களை அறியும் வாய்ப்பினைப் பெருகிறோம்.
14. மிகுதியான அன்னங்களால் சில ஜீவன்கள் பிழைக்க வகை செய்யப்படுகிறது.
15. சில பொருட்களின் நிலை மாற்றத்தால் ஏற்படும் ரசயான விளைவுகள்.
16. வீட்டைச் சுத்தம் செய்யும்போது சில பழைய பொருட்கள் செப்பனிடப்படுகின்றன.
17. காணாமல் போன சில பொருட்கள் கிடைக்கின்றன.
18. சில சமயம் அறிதான சிலருடைய நட்பு கிடைக்கின்றது.
19. அசூயை உடைய வேண்டாத சிலரின் நட்பு களையப்படுகிறது.
20. அறுசுவை உண்டியை விருந்தோடு உண்ணும் வாய்ப்பு கிடைக்கின்றது.
21. தாய் தந்தையர் மீது நாம்கொண்ட அன்பு மரியாதை இவை வெளியிட வாய்ப்பு ஏற்படுகிறது,

அதிர்ஷ்ட பலன்கள்: (இவற்றில் எவற்றிற்கு இந்த ஹோமம் காரணம் என்று உறுதியாகச் சொல்ல இயலாது)

1. மனோதிடம் கிடைக்கின்றது.
2. வெற்றிபெருவோம் என்ற நம்பிக்கை வளர்கிறது.
3. பகவத் ஸேவையின் பேரானந்தம் கிடைக்கிறது.
4. நாம் எண்ணிய எண்ணங்கள் ஈடேற வாய்ப்பு ஏற்படுகிறது.
5. பாபங்கள் தொலைந்து புண்ணியங்கள் கிட்டுகிறது.
6. சத்ருக்களின் பலங்கள் குறைகிறது.
7. நண்பர்களின் உதவி பெருகுகிறது.
8. நீண்டநாள் தீராத மனக் கவலை மாறுகிறது.
9. நீண்டநாள் தீராத வியாதி நிவாரணம் பெருகிறது.
10. சுப காரியங்கள் வந்து சேர்கின்றன.
11. மஹான்களின் தரிசனங்கள் சுலபமாகக் கிடைக்கின்றன.
12. எதிலும் ஒரு மகிழ்ச்சியும் இன்பமும் தெரியத் தொடங்குகின்றது.
13. எதிர்பாராத இடங்களில் இருந்து நற்செய்திகள்.
14. சொத்துகள் வாஹன விவகாரங்கள் நல்லமுறையில் தீர்வு பெறுகிறது.
15. திடீர் பணவரவு, பொக்கிஷங்கள் ஆபரணங்கள் கிடைத்தல்.
16. எதிர்பார்த்ததைவிட சுலபமாக விண்ணப்பங்கள் நிறைவேறுதல்
17. அரசாங்கத்திடம் எதிர்பார்த்த உதவி ஒத்துழைப்பு கிட்டுதல்
18. நற்சான்றுகள் விருதுகள் பட்டயங்கள் கிட்டுதல்.
19. நம்பிக்கை உள்ளவர்களுக்கு பாபங்கள் தொலைந்து நற்கதிக்கு வித்தாக அமைகிறது.
20. சொற்களால் விவரிக்க முடியாத சில நல்ல அநுபவங்கள் உண்டாகிறது.

சில மந்திரங்கள்

ஓம் க்லீம் க்ருஷ்ணாய ஹ்ரீம் கோவிந்தாய ஸ்ரீம் கோபி ஜனவல்லபாய ஓம் பராய பரமபுருஷாய பரமாத்மனே! மம பரகர்ம மந்த்ர தந்த்ர யந்த்ர ஒளஷத அஸ்த்ர ஸஸ்த்ர வாத ப்ரதிவாதானி ஸம்ஹர ஸம்ஹர ம்ருத்யோர் மோசய மோசய ஓம் மஹா சுதர்சனயா தீப்த்ரே ஜ்வாலா பரிவ்ருதாய ஸர்வதிக் க்ஷோபன கராய ஹும் பட் பரப்ரஹ்மணே ஸ்வாஹா ||

விடியற்காலையில் சூரிய உதயத்திற்கு முன்பு குளித்து, சுத்தமான உடை அணிந்து கிழக்கு நோக்கி அமர்ந்து, கண்ணை மூடிக்கொண்டு குறைந்தபட்சம் ஒன்பது தடவை – கூடிய பட்சம் 108 தடவை பாராயணம் செய்தால் அவர்களுக்கு பீடைகள் ஒழியும். சௌபாக்கியம் பிறக்கும்.

சுதர்சன மந்திரத்தில் ஓம் க்லீம் க்ருஷ்ணாய என்று தொடங்கும் மந்திரமே பெரும்பாலும் சுதர்சன ஹோமத்திற்குப் பயன்பட்டு வருகிறது. ஸர்வ சத்ரு நாசன சுதர்சன மந்த்ரம் இதுதான்..

ஓம் மஹா ஸுதர்சனாய; ஸர்வ சத்ரு ஸம்ஹர ஸம்ஹர; ஸர்வ க்ஷுத்ரம் மாரய மாரய; ஸர்வ ரோகம் நிவாரய நிவாரய; மஹா ஸுதர்சனாய சக்ர ராஜாய ஹும்பட் ஸ்வாஹா||

இந்த மந்திரத்தை வெண்கடுகு, ஸமித்து கொண்டு ஹோமம் செய்தால் சத்ருக்கள் அழிவார்கள். நாயுருவி உபயோகித்தால் வியாதி நாசம்… வெண்பட்டு ஹோமத்தில் இட்டால் ஐச்வர்ய விருத்தி… செந்தாமரையை இட்டால் கடன் நிவாரணம் ஆகியவை ஏற்படும்.

ரோக நிவர்த்திக்கு அஸ்வினி நட்சத்திரத்திலும் பரணி, திருவாதிரை, உத்திரட்டாதி ஸம்ஹார பிரயோகத்திற்கும், பைசாச உபாதைகளை நீக்க ஸ்வாதியும், ஏகாதசி சத்ரு நாசத்திற்கும், திரயோதசி பௌர்ணமி வச்ய ப்ரயோகம் செய்யவும் பயன்படுமென்று மந்த்ர மஹோததி மந்த்ர தத்வநிதி மந்த்ர மஹார்ணவம் முதலிய சாஸ்திரங்கள் கூறுகின்றன.

நம் காம்யார்த்தங்கள் நிறைவேற ஹோமமே சிறந்த ஸாதனம். பீஜங்கள் சேர்த்த மூல மந்திரத்தைப் பிரயோகத்திற்கு ஏற்றபடி தக்க ஹவிஸ்ஸுடன் நாம் அக்னிதத்வத்தில் ஸமர்ப்பிக்கிறோம். எண்ணையில் இட்ட பச்சை அப்பளம் சாப்பிடக்கூடிய நிலையில் பொரிந்து வருவதைப்போல ஹவிஸ்ஸுடன் சேர்ந்த மந்திரம் தீயில் ஸ்வாஹா என்று இடப்பட்டு உடனே நம் காம்யார்த்தங்கள் பலன் ரூபத்தில் நிறைவேறுகின்றன.

மந்திர சாஸ்திரங்களின் பிரயோகங்கள் வெளிப்படையாகக் கூறப்படுவதில்லை. நாட்டு மருத்துவத்தில் பச்சிலைகள் எவ்விதம் மறைபொருளாகக் கூறப்படுகின்றனவோ அவ்விதமே மந்த்ரமும் இலைமறை காய்மறையாகவே உபதேசிக்கப்பட்டு வந்துள்ளது. செய்யப்போகும் பிரயோகத்திற்கு தகுந்தபடி, பஞ்சபூத தத்வங்களான லம், ஹம், யம், ரம், வம் என்ற பீஜங்களையும் யாருக்காக செய்யப்படுகிறதோ அவர் பெயரையும் அதற்கு மந்திரத்தில் ஸூக்ஷ்மமாக அமைந்திருக்கும் இடத்தில் மந்த்ர பாண்டித்யம் உள்ளவர்கள் சேர்ப்பார்கள்.

இங்கிருந்து!

***

“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |

ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||

சுபம்

இந்த வலைப்பூவில் கொடுக்கப்படும் முன்னோர்கள் அருளிய வேதம், வேத தழுவல், வேத மந்திரங்கள், உபனிஷத், பாஷ்யம், பாஷ்ய தழுவல், விரிவுரைகள், ஸ்லோகம், ஸ்தோத்ரம், அவற்றின் யந்திரங்கள், அதற்குறிய தந்திரங்கள் முதலியன, எவர் ஒருவடைய தனிப்பட்ட சொத்தும் அல்ல. நமது மூதாதையர்கள் அவர்தம் தவ பலத்தால் அறிந்ததேயாகும். அவர்கள் லோக கல்யாணத்திற்காக அவையெல்லாவற்றையும் நமக்கு அளித்தனர். இவற்றின் ப்ரயோக விதி, வழிபாடுமுறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” அவள் அனுக்ரஹத்தால், வழிகாட்டுதலால் கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்!

ஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு தேவையான எளியோன் அறிந்த மந்திரம், யந்திரம், தந்திரம், விதிமுறைகள், வேண்டுபவரின் தகுதி அனுசரித்து அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan [at] yahoo [dot] com, அலைபேசி:- +91 92454 46956, WhatsApp:- +91 96774 50429

***

This entry was posted in ஸ்ரீ மஹா சுதர்ஸன ஹோமம்!, Uncategorized and tagged , , . Bookmark the permalink.