Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | Sri Durga Sapta Sloki | ஸ்ரீ துர்கா ஸப்த ஸ்லோகீ

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||

lady

|| க ஏ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

”Sri Durga Sapta Sloki”

“ஸ்ரீ துர்கா ஸப்த ஸ்லோகீ”

 

ஸ்ரீ சண்டிகா தேவியின் பெருமையை கூறுவதும், 700 மந்திரங்களாக கருதப்படுவதும் ஸப்தசதீ என்று அழைக்கப்படுவதுமான தேவீ மஹாத்மியம் மார்க்கண்டேய புராணத்தில் உள்ளது. ஜகன்மாதாவான அம்பிகையின் பிரபாவத்தைப் புகழும் ‘ஸ்ரீ தேவி மஹாத்மியம்’ பாராயணம் செய்வது மிக சிலாக்கியம். தேவியின் அவதார மகிமை, யுத்த சரித்திரம் முழுவதும் அடங்கியதே ஸ்ரீ தேவி மஹாத்மியம். இது, நினைத்தவுடனே முக்தி அளிக்கும் மிக மகிமை வாய்ந்த நூலாகும். அந்த ஸ்ரீ தேவி மஹாத்மியத்தில் இருக்கும் எழுநூறு ஸ்லோகங்களின் சாரமே, ‘ஸ்ரீ துர்கா ஸப்த ஸ்லோகி”. இதை பாராயணம் செய்தால், ஸ்ரீ தேவிமஹாத்மியம் பாராயணம் செய்த முழுப் பலனும் அடையலாம். அதுவும் அன்னைக்கு உகந்த நவராத்திரி காலத்தில் பாராயணம் செய்வது மிகவும் விஷேசம். தன்னை ஜபம் செய்வோர்க்கு ஸ்ரீ துர்க்கா ஸப்த ச்லோகீ விரும்பத்தக்கவற்றைப் பெறுவதற்கும், விலக்க வேண்டுவனவற்றைத் தள்ளுவதற்கும் அன்னையின் அருளைப் பெற்றுத் தரும்.

இந்த ஸப்தச்லோகீ பாராயணத்தாலேயே ஸப்த சதீ பாராயண பலத்தை உறுதியாகப் பெறக்கூடும். கலியில் “கீதை”, “விஷ்ணு சகஸ்ரநாமம்”, “தேவி மஹாத்மியம்”, “லலிதா ஸகஸ்ரநாமம்” இந்நான்கும் பலன் தரும் ஸ்தோத்திரங்கள் என்று சொல்லப்பட்டிருக்கின்றது. தேவி மஹாத்மிய பலச்ருதியில் இதைப் படித்தாலும் கேட்பதாலும் கன்னிகை கணவனை அடைவாள் இந்த மஹாத்மியத்தை கேட்டு ஸ்திரீ சுமங்கலித் தன்மையைப் பெறுவாள். மனிதன் இஹத்தில் எல்லாவற்றையும் அடைவான் என்று கூறப்பட்டுள்ளது. தேவியின் மஹ’மையை அறிந்து அவளிடம் பக்தி செலுத்தி இஹபர லாபங்களான புக்தி முக்தியை பெறட்டும் என்று எல்லாம் வல்ல பராசக்தி மஹா மாயை ப்ரார்த்திப்போம்!.

அஷ்டமி, சதுர்த்தசி, மற்றும் வெள்ளிக் கிழமைகளில், ஐந்து முக தீபத்தை ஏற்றி, தேவியைப் பூஜித்து, ஸ்ரீ துர்கா ஸ்ப்த ஸ்லோகியை மூன்று முறை சொல்லி நமஸ்கரிப்பது, எல்லா நலன்களையும் பெற்றுத் தரும். தீபத்தை கிழக்கு, அல்லது வடக்கு முகமாக வைத்துப் பூஜிக்க வேண்டும். வெள்ளிக் கிழமைகளில், சப்தஸ்லோகியுடன், லக்ஷ்மி அஷ்டோத்திர அர்ச்சனையும் சேர்த்து செய்து, தேங்காய், பழம் நிவேதனம் செய்ய, ஐஸ்வர்யம் பெருகி, சர்வ மங்களங்களும் உண்டாகும்.

|| ஸ்ரீ துர்கா ஸப்த ஸ்லோகீ ||

சிவ உவாச:
தேவி த்வம் பக்தி ஸூலபே சர்வ கார்ம விதாயினி |
கலௌ ஹிகார்ய ஸித்யர்த்தம் உபாயம் ப்ருஹியர்ந்த ||

தேவ்யுவாச:
ச்ருணுதேவ ப்ரவக்ஷ்யாமி கலேட ஸர்வேஷ்டஸாதநம் |
மயாதவைவ ஸநேஹநாப்யம்பாஸ்துதி: ப்ராகாச்யதே ||

சங்கல்பம்:

ॐ अस्य श्रीदुर्गासप्तश्लोकीस्तोत्रमहामन्त्रस्य | नारायण ऋषिः । अनुष्टुपादीनि छन्दांसि ।
श्रीमहाकालीमहालक्ष्मीमहासरस्वत्यो देवताः । श्री जगदम्बाप्रीत्यर्थ पाठे विनियोगः ॥

ஓம் அஸ்ய ஸ்ரீ துர்க்கா ஸப்தஸ்லோகீ ஸ்தோத்ர மஹாமந்த்ரஸ்ய; நாராயண ருஷி: । அனுஷ்டுப்சந்த: | ஸ்ரீ மஹாகாளி, மஹாலக்ஷ்மீ, மஹா சரஸ்வத்யோ தேவதா: । ஸ்ரீ ஜகதம்பா ப்ரீத்யர்த்தே ஜபே (பாடே) விநியோக: ॥

ज्ञानिनामपि चेतांसि देवि भगवती हि सा ।
बलादाकृष्य मोहाय महामाया प्रयच्छति ॥१॥

ஞானினாமபி சேதாம்ஸி தேவீ பகவதி ஹி ஸா ।
பலாதாக்ருஷ்ய மோஹாய மஹாமாயா ப்ரயச்சதி ॥ 1 ॥

दुर्गे स्मृता हरसि भीतिमशेषजन्तोः
स्वस्थैः स्मृता मतिमतीव शुभां ददासि ।
दारिद्रयदुःखभयहारिणि का त्वदन्या
सर्वोपकारकरणाय सदार्द चित्ता ॥२॥

துர்க்கே ஸ்ம்ருதா ஹரஸி பீதிமசேஷ ஜந்தோ:
ஸ்வஸ்த்தை: ஸ்ம்ருதா மதிமதீவ சுபாம் ததாஸி ।
தாரித்ர்ய து:க்க பயஹாரிணி காத்வதன்யா
ஸர்வோபகார கரணாய ஸதார்த்ர சித்தா ॥ 2 ॥

सर्वमंगलमांगल्ये शिवे सर्वार्थसाधिके ।
शरण्ये त्र्यम्बके गौरि नारायणि नमोऽस्तु ते ॥३॥

ஸர்வமங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதிகே ।
சரண்யே த்ர்யம்பகே கௌரி நாராயணி நமோ(அ)ஸ்து தே ॥ 3 ॥

शरणागतदीनार्तपरित्राणपरायणे ।
सर्वस्यार्तिहरे देवि नारायणि नमोऽस्तु ते ॥४॥

சரணாகத தீனார்த்த பரித்ராண பராயணே ।
ஸர்வஸ்யார்திஹரே தேவி நாராயணி நமோ(அ)ஸ்து தே ॥ 4 ॥

सर्वस्वरूपे सर्वेशे सर्वशक्तिसमन्विते ।
भयेभ्यस्त्राहि नो देवि दुर्गे देवी नमोऽस्तु ते ॥५॥

ஸர்வஸ்வரூபே ஸர்வேசேஸர்வசக்தி ஸமந்விதே ।
பயேப்யஸ்த்ராஹிநோ தேவி துர்க்கே தேவி நமோ(அ)ஸ்து தே ॥ 5 ॥

रोगानशेषानपहंसि तुष्टा रुष्टा तु कामान् सकलानभीष्टान् ।
त्वामाश्रितानां न विपन्नराणां त्वामाश्रिता ह्याश्रयतां प्रयान्ति ॥६॥

ரோகா நசேஷா நபஹம்ஸி துஷ்டா
ருஷ்டாது காமான் ஸகலானபீஷ்டான் ।
த்வாமாச்ரிதானம் ந விபந்நராணாம்
த்வாமாச்ரிதா ஹ்யாச்ரயதாம் ப்ரயாந்தி ॥ 6 ॥

सर्वाबाधाप्रशमनं त्रैलोक्यस्याखिलेश्वरि ।
एवमेव त्वया कार्यमस्मद्वैरि विनाशनम् ॥७॥

ஸர்வா பாதா ப்ரசமனம் த்ரைலோக்யஸ்யாகிலேச்வரி ।
ஏவமேவ த்வயா கார்யம் அஸ்மத் வைரி விநாசனம் ॥ 7 ॥

***

“ஸ்ரீ துர்கா ஸப்த ஸ்லோகீ”யின் பொருள்!

மகாமாயையான பகவதி தேவி ஞானியரின் சித்தங்களையும் பலவந்தமாக தன் மாயா சக்தியால் இழுத்து மோகத்தில் செலுத்துகிறாள். (1)

கடக்க முடியாத பெரும் துன்பத்தில் ஸ்மரிக்கப்பட்டால் ஸ்ரீ துர்க்கா தேவி,சகல பிராணிகளின் அச்சத்தையும் போக்குகிறாள் (அல்லது) துர்கே உனை ஸ்மரித்த மாத்திரத்தில் எல்லா உயிரினங்களின் பயத்தையும் போக்குகின்றாய்.

இன்ப நிலையில் இருந்து கொண்டு ஸ்மரிக்கப்பட்டால் பரம மங்களமான நல்லறிவை நல்குகிறாய். வறுமை, துன்பம், பயம் ஆகியவற்றை நீக்குபவளே! ஸகலருக்கும் ஸர்வ உபகாரங்களையும் செய்வதற்காக ஸதாகாலமும் காத்திருக்கும், கருணையால் நிரம்பிய நெஞ்சுடையவர் உனையன்றி எவர் உண்டு? (2)

மங்கள வஸ்துக்கள் அனைத்தினும் பரமமங்களமானவளே! மங்களமே வடிவான சிவனின் சக்தியே! சகல புருஷார்த்தங்களையும் சாதித்துத் தருபவளே! சரணாகத நிலையமே! முக்கண் படைத்த (அல்லது மூம்மூர்த்தியருக்கும் அன்னையான) த்ரயம்பகியே! வெண்பொற் சோதியாம் கௌரி!! நரருக்கெல்லாம் ஆசிரயமாம் நாராயணி! உனக்கு நமஸ்காரம்.(3)

‘சரண்’ என வந்த தீனரையும் துன்புற்றோரையும் மிக அருமையாகக் காப்பதையே தொழிலாகக் கொண்ட தேவி! அனைவரின் துன்பங்களையும் நீக்கும் நாராயணி! உனக்கு நமஸ்காரம். (4)

காணும் உருவனைத்தும் நீயே! அனைத்தையும் ஆளும் தேவி நீயே! சர்வ‌ சக்தியும் ஒன்றிய இடம் நீயே! தேவி துர்கே! உனக்கு வந்தனம்! எங்களை அச்சங்களினின்று ரட்சித்தருள்வாய்.! (5)

(பக்தியினால்) நீ திருப்தியடைந்தால், சகல ரோகங்களையும் அறவே அகற்றுகிறாய். கோரும் விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றி அருள்கிறாய். உனை அரண் போல பாதுகாப்பாகக் கொண்ட மனிதருக்கு இடர் என்பதே இல்லை. அவர்களே பிறருக்கு அரணாகின்றனர் அன்றோ ? (6)

அகிலாண்டேசுவரி! உன்னால் எமது பகைவர்கள் அழிக்கப் பெற வேண்டும். இவ்வாறே மூவுலகிலும் உள்ளவர்களின் சகல துன்பங்களையும் நீ அடியோடு அகற்றி அருள வேண்டும்.

***

“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |

ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||

சுபம்

இந்த வலைப்பூவில் கொடுக்கப்படும் முன்னோர்கள் அருளிய வேதம், வேத தழுவல், வேத மந்திரங்கள், உபனிஷத், பாஷ்யம், பாஷ்ய தழுவல், விரிவுரைகள், ஸ்லோகம், ஸ்தோத்ரம், அவற்றின் யந்திரங்கள், அதற்குறிய தந்திரங்கள் முதலியன, எவர் ஒருவடைய தனிப்பட்ட சொத்தும் அல்ல. நமது மூதாதையர்கள் அவர்தம் தவ பலத்தால் அறிந்ததேயாகும். அவர்கள் லோக கல்யாணத்திற்காக அவையெல்லாவற்றையும் நமக்கு அளித்தனர். இவற்றின் ப்ரயோக விதி, வழிபாடுமுறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” அவள் அனுக்ரஹத்தால், வழிகாட்டுதலால் கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்

ஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு தேவையான எளியோன் அறிந்த மந்திரம், யந்திரம், தந்திரம், விதிமுறைகள், வேண்டுபவரின் தகுதி அனுசரித்து அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan [at] yahoo [dot] com, அலைபேசி:- +91 92454 46956, Whats App:- +91 96774 50429

This entry was posted in ஸ்ரீ துர்கா ஸப்த ஸ்லோகீ, ஸ்ரீ வித்யா தந்த்ரம்,, Uncategorized and tagged , , , . Bookmark the permalink.