Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | ஸ்ரீ மங்கள சண்டிகா ஸ்தோத்ரம்!

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||

durga7

|| க ஏ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

ஸ்ரீ மங்கள சண்டிகா ஸ்தோத்ரம்!

 

ஸாரே மங்கள தாரே பாரேச ஸர்வ கர்மணாம் |
ப்ரதி மங்களா தாரேச பூஜ்யே மங்கள சுகப்ரதே ||

மங்களத்திற்கு ஆதாரமானவளே! மங்கள வாரம் தோறும் (செவ்வாய்க்கிழமை தோறும்) பூஜிக்கத் தக்கவளே மங்களத்தை அருளும் அன்னையே உன் தாள் பணிகின்றேன்.

தேவீம் ஷோடஸ வர்ஷியாம் ஸுஸ்திர யௌவனாம் |
பிம்போஷ்டீம் ஸுதீதம் சுந்தரம் சரத் பத்ம நிபாநநாம் ||

தேவியை என்றும் பதினாறு வயதுடைய நித்யயௌவன உருவமுடையவளாகவும், அழகிய உதடுகளில் அருள் வழியும் புன்னகையுடன் சரத் காலத்து நிலவொளியில் தாமரை மலர் மீது அமர்ந்திருப்பவளாக தியானிக்கிறேன்.

ஸ்வேத சம்பக வர்ணாம் ஸுநீலோத்லப லோசநாம் |
ஜகதாத்ரீம் சதாத்ரீம் ச ஸந்வேப்ய: ஸர்வ சம்பதாம் ||

காயாம்பு வண்ண மேனியுடன் நீலோத்பல மலர் போன்ற கண்களுடன் விளங்கும் அன்னை, உலகை ஈன்று சகல சௌபாக்கியங்களையும் அளிக்கின்றாள்.

ஸ்ம்ஸார சாகரே கோரே ஜ்யோதிரூபாம் சதாபஜே |
தேவ்யாச்ச த்யான மித்யேவம் ஸ்தவ நம் ச்ருயதாம் முனே ||

பயங்கரமான பிறவிப் பெருங்கடலைத் தாண்ட, மணி விளக்காய் வழிகாட்டும் தேவியின் பாதங்களை நினைப்பதே சிறந்த மார்க்கமாகும்.

மங்கள மங்களார் ஹே ச சர்வ மங்கள மங்களே |
ஸதாம் மங்களதே தேவி ஸர்வேஷாம் மங்களாலயே ||

மங்களத்தை தரும் மங்கள நாயகியே!
என்றென்றும் மங்கள வாழ்வை அளிப்பாயாக!

பூஜ்ய மங்கள வாரே ச மங்களா பீஷ்ட தேவதே |
பூஜ்யே மங்கள பூபஸ்ய மனுவம்சஸ்ய ஸந்தகம் ||

பூஜிக்க தக்க மங்கள நாயகியே! சுபத்தை அளிக்கும் தேவியே! மனித வர்க்கத்திற்கு என்றும் நல்வாழ்வை நல்குவாயாக!

மங்களா திஷ்டாத்ரு தேவி மங்களநாம்ச மங்களே |
ஸம்ஸார மங்களா தாரே மோக்ஷ மங்கள தாயினி ||

மங்களத்தைத் தரும் அருள் நோக்கு உடையவளே! மங்களமே உருவானவளே உலகின் நல்வாழ்வுக்கு ஆதாரமானவளே! மாந்தருக்கு மோக்ஷத்தை அளிப்பவளே!

ஸாரே மங்கள தாரே பாரேச ஸர்வ கர்மணாம் |
ப்ரதி மங்களா தாரேச பூஜ்ய மங்கள சுகப்ரதே ||

மங்களத்திற்கு ஆதாரமானவளே மங்கள வாரம் தோறும் (செவ்வாய்கிழமை தோறும்) பூஜிக்கத்தக்கவளே மங்களத்தை அருளும் அன்னையே உன் தாள் பணிகின்றேன்.

பலஸ்ருதி

ஸ்தோத்ரேனாநேந சம்பிஸ் ச ஸ்துத்வா மங்கள சண்டிகாம் |
ப்ரதி மங்கள வாரே ராகு காலௌ பூஜரம் தத்வா கத: சிவ ||

மங்கள சண்டிகையான அன்னையை மங்கள வாரம் தோறும் ராகு காலத்தில் பூஜித்து துதித்தால் சகல நன்மைகளையும் அளிப்பாள்.

தேவ்யாஸ் ச மங்கள ஸ்தோத்ரம் ய ச்ருணோதி ஸமாஹித |
தத்மங்களம் பவேத் தஸ்ய நபவேத் தத் மங்களம் |
வர்த்ததே புத்ர பௌத்ரஸ்ச மங்களம் ச திநே திநே ||

தேவியைப் போற்றும் இந்த மங்கள ஸ்துதியை ஓதுவதால் உலகில் கிடைக்காத பாக்கியமே இல்லை, சகல சம்பத்துகளும் வம்ச விருத்தியும் எண்ணற்ற பாக்யங்களும் நாளுக்கு நாள் பெருகும் என்பதில் ஐயமே இல்லை.

***

பவானி த்வம் தாஸே மயி விதர த்ருஷ்டிம் ஸகருணாம்
இதி ஸ்தோதும் வாஞ்சன் கதயதி பவானி த்வமிதி ய: |
ததைவ த்வம் தஸ்மை திசஸி நிஜ ஸாயுஜ்ய பதவீம்
முகுந்த-ப்ரஹ்மேந்த்ர-ஸ்புட மகுட நீராஜித பதாம் ||

“ஹே பவானி” அடிமையாகிய என்னிடம் கருணையுடன் கூடிய பார்வையை நீ செலுத்தி அருள்வாயாக என்று எவனொருவன் துதி செய்ய விரும்பி – “பவானி த்வம் தாஸே மயி விதர த்ருஷ்டிம் ஸகருணாம்” என்று சொல்லி அவள் கடாக்ஷத்தை ப்ரார்த்திக்க ஆசைப்பட்ட ஒருவன் இதில் முதல் இரண்டு சொற்களான ‘பவானி த்வம்’ என்று சொல்ல ஆரம்பித்த உடனேயே நீ அவனுக்கு, விஷ்ணு, ப்ரம்ஹா, இந்திரன் ஆகியோரின் க்ரீடங்களின் ஒளியால் தீபாராதனை செய்யப்பட்ட உனது பாதங்களைப் பெறும்படியான, உனதேயான ஸாயுஜ்ய பதவியினை தந்தருளுகிறாய்.

***
ராகு தோஷம் நீங்கி ஸ்ரீ துர்கையின் அருள் கிடைக்க,

ஓம் துர்லபாம் துர்கமாம் துர்காம்
துக்க ஹந்த்ரீம் ஸுகப்ரதாம் |
துஷ்டதூராம் துராசார ஸமனீம்
தோஷவர்ஜிதாம் [ஜெய] ப்ரதாம் ஓம் ||

[ ]இக்குறியிட்ட இடத்தில் (தன, ஸித்தி, ஞான, ஸஹாய குணயோக போக, மோக்ஷ என மாற்றியும் சொல்லலாம்)

***

“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |

ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||

சுபம்

இந்த வலைப்பூவில் கொடுக்கப்படும் முன்னோர்கள் அருளிய வேதம், வேத தழுவல், வேத மந்திரங்கள், உபனிஷத், பாஷ்யம், பாஷ்ய தழுவல், விரிவுரைகள், ஸ்லோகம், ஸ்தோத்ரம், அவற்றின் யந்திரங்கள், அதற்குறிய தந்திரங்கள் முதலியன, எவர் ஒருவடைய தனிப்பட்ட சொத்தும் அல்ல. நமது மூதாதையர்கள் அவர்தம் தவ பலத்தால் அறிந்ததேயாகும். அவர்கள் லோக கல்யாணத்திற்காக அவையெல்லாவற்றையும் நமக்கு அளித்தனர். இவற்றின் ப்ரயோக விதி, வழிபாடுமுறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” அவள் அனுக்ரஹத்தால், வழிகாட்டுதலால் கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்

ஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு தேவையான எளியோன் அறிந்த மந்திரம், யந்திரம், தந்திரம், விதிமுறைகள், வேண்டுபவரின் தகுதி அனுசரித்து அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan [at] yahoo [dot] com, அலைபேசி:- +91 92454 46956, Whats App:- +91 96774 50429

***

pers (6)

 

நான் ஹிந்து! சரி, ஹிந்து என்றால் என்ன?

ஆ சிந்தோ: சிந்துபர்யந்தம் யஸ்ய
பாரத பூமிகா மாத்ரு பூ:
பித்ரு பூ புண்ய (ஸ்)சைவ
ஸ வை ஹிந்து இதி ஸ்ம்ருதா:

சப்த சிந்து (இண்டஸ் நதி) முதல் இந்தியப் பெருங்கடல் வரையான நிலப்பரப்பை தாய்நாடு / தந்தை நாடாகவும் புண்ணிய பூமியாகவும் யார் கருதியிருக்கிரானோ அவன் ஹிந்து ஆவான்.

ஹிமாலயம் ஸமாரப்ஹ்ய
யாவத் ஹிந்து சரோவரம் தம்
தேவ நிர்மிதம் தேசம்
ஹிந்துஸ்தானம் ப்ரசக்ஷதே

ஸ்வயம் கடவுளால் படைக்கப்பட்ட இந்நிலப்பரப்பு ஹிமாலயம் முதல் இந்தியப் பெருங்கடல் வரை பரந்து விரிந்து ஹிந்து ஸ்தானம் என்றழைக்கப்படுகிறது.

சனாதன தர்மம் அல்லது இந்து தர்மத்தின் மிக முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால், உண்மையில் இந்து தர்மத்தை உருவாகியவர்கள் இதை ஒரு மதமாகக் கருதாமல் தர்மமாகவே கருதினார்கள். தர்மம் என்றால் வாழும் கலை, அதாவது நிம்மதியான முறையில் வாழ்வதற்கு ஏற்படுத்தப்பட்ட வழிமுறைகள் (ஆச்சார விதிமுறைகள்).

பெண்களால் பின்பற்றப்படவேண்டிய ஆச்சாரங்களை மாத்ரு தர்மம் என்றும், ஆண்களால் பின்பற்றப்பட வேண்டிய ஆச்சாரங்களை பித்ரு தர்மம் என்றும், மகன் செய்ய வேண்டியதை புத்திர தர்மம் என்றும், ஆசிரியர் செய்ய வேண்டியதை ஆச்சார்யா தர்மம், சகோதரனுக்கு பிராத்ரு தர்மம், சகோதரிக்கு பாகினி (பாகம் உடையவள் என்ற பொருள் வரும்) தர்மம் என்றும், பௌர (குடிமக்கள்) தர்மம், ராஜ தர்மம் என்றும் வகை படுத்தி வைத்துள்ளனர். இதைத்தான் ஸ்ம்ரிதிக்களும் தர்ம சாஸ்திரங்களும் கடமைகளாகவும், பொறுப்புக்களாகவும், சட்டங்களாகவும் இயற்றி வைத்துள்ளன.

சனாதன தர்மம் என்றால் இவை அனைத்தையும் ஒன்றாகப் பின்பற்றும் நோக்கம் உடைய ஒரு குழுவாகும். இந்து தர்மத்தின் ஒவ்வொரு செயலிலும் ஆன்மீகம் பின்னிப் பிணைந்துள்ளது. ஆன்மீகம் இல்லாமல் இந்து தர்மம் இல்லை.

கிருஸ்துவ சமூகத்தில் ஏசுபிரான் மற்றும் பைபிள் ஒன்றுதான். ஆனால், லத்தின் கதோலிக், சிரியன் கதோலிக் சர்ச்சுக்குள் போகமாட்டாராம். இவர்கள் இருவருமே பெண்டேகோஸ்ட் சர்ச்-க்கு போகமாட்டாராம். இவர்கள் மூவரும் மர்தொமா சர்ச்-க்கு போகமாட்டாராம். மர்தொமா மற்றவர்களது சர்ச்-க்கு போகமாட்டார். இந்த நால்வருமே சால்வேஷன் ஆர்மி சர்ச்-க்கு போகமாட்டார்கள். இந்த ஐந்து பேருமே செவன்த் டே அட்வெண்டிஸ்ட் சர்ச்-க்குப் போக மாட்டார்கள். மேற்சொன்ன ஆறு குழுவினரும் ஆர்தொடாக்ஸ் சர்ச்-க்குப் போக மாட்டார்கள். இந்த ஏழு பேருமே ஜகோபைத் சர்ச்-க்கு போக மாட்டார்கள். கேரளாவில் மட்டும் 146 விதமான கிருஸ்துவப் பிரிவினர்கள் இருக்கிறார்கள். இதில் எந்தப் பிரிவினருமே மற்ற சர்ச்சுகள் போவதில்லை அல்லது தமக்கு வரும் நன்கொடைகளைப் பகிர்வதில்லை.

இங்கு இப்படி இருக்க, முஸ்லிம்களில் அல்லா, குரான், நபிகள் எல்லாம் ஒன்றுதான் என்கிறார்கள். ஆனால், ஷியா மற்றும் சுன்னி முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். ஷியாக்கள் சுன்னி முஸ்லிம்கள் மசூதிகளுக்குப் போக மாட்டார்கள். அகமதிய மசூதிகளுக்கு இவர்கள் இருவருமே போக மாட்டார்கள். சுஃபி மசூதிக்கு இந்த மூவரும் போக மாட்டார்கள். முஜாஹித்தின் மசூதிகளுக்கு இவர்கள் யாருமே போகமாட்டார்கள். 13 ஜாதிப் பிரிவுகளைக் கொண்டு இருக்கிறார்கள்.

ஒரே புனித நூலை அடிப்படையாக கொண்டு, இறை நம்பிக்கை வளர்க்கும்  மனிதர்களிடமே இத்தனை வித்தியாசங்கள்.

1,280 புனித நூல்கள், 12,000 விளக்கங்கள், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட உபவிளக்கங்கள், முப்பத்து முக்கோடி தேவர்கள், பலதரப்பட்ட மடங்கள், ஆசாரியர்கள், ரிஷிகள், நூற்றுக்கணக்கான மொழிகள் என்று அமைந்தது கூட இந்து மதத்தில் இருக்கும் சுதந்திரம் காரணமாகத்தான். ஆனாலும் ஹிந்துக்கள் அனைவரும் எல்லாக் கோவில்களுக்கும் அவரவர் விருப்பம் போல போகிறார்கள்.

சிலை, உருவ வழிபாடு முறையை ஹிந்துக்கள் மட்டும்தான் பின்பற்றுகிறார்கள் என்று இல்லை.  முஸ்லிம்கள் மெக்காவைக் குறித்த ஒரு காபாவையும், கிருஸ்தவர்கள் சிலுவையையும் ஒரு உருவம் / idol ஆக வரித்துக் கொண்டுதான் தத்தம் தொழுகைகைகளையும், பிரார்த்தனைகளையும் செய்கிறார்கள். படங்களும், ஓவியங்களும், சிலைகளும் இதைப் போன்ற தனி நபர் மன உருவங்களின் வெளிப்பாடுதான்.

மனிதர்கள் தவறுகிறார்கள். சட்டங்கள் / தர்மங்கள் தவறுவதே இல்லை. மனிதர்களின் தவறுகளுக்கு தர்மங்களை குறை கூறுவது, அல்லது நம் சௌகரியத்துக்கு ஹிந்து தர்மத்தை மதிப்பு குறைத்து கூறி வருவதால் எந்த மாற்றமும் பாதிப்பும் வேதங்களுக்கோ ஹிந்து தர்மத்துக்கோ ஏற்படப்போவதில்லை.

நான் படித்து அறிந்த வரை, வேதங்கள் அல்லது ஹிந்து தர்மம் என்றும் யாரையும் இப்படித்தான் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதில்லை. இப்படி வாழ்தல் நன்மை என்று கூறியுள்ளதே தவிர இப்படித்தான் வாழவேண்டும் என்று சொல்வதில்லை. தினசரி கோவிலுக்குப் போனால் தான் அவன் ஹிந்து என்று கட்டாயம் செய்வதில்லை. இந்தக் கட்டற்ற சுதந்திரம் மட்டுமே ஹிந்து தர்மத்தின் பலமாகும். காலங்காலமாய் வேதங்களையும் ஹிந்து தர்மத்தையும் அவதூறுகள் செய்து வந்தாலும், கட்டாயத்தாலோ பிறப்பாலோ அல்லாமல் “உண்மையாகவே ஹிந்து தர்மத்தை வேதங்கள் மூலம் அறிபவர்கள், ஹிந்து தர்மத்தை மட்டும் இல்லை, எல்லா தர்மங்களையும் மதங்களையும் ஒன்றாகவே பாவித்து மதிப்புக் கொடுப்பார்கள்”.

நம் முன்னோர்களில் யாரோ மனம் பிழன்ற ஒரு சிலர், ஆங்கிலேயரை மகிழ்விக்கச் செய்த தவறுகளுக்கு வேதங்களைப் பழிப்பது தவறு.

***

This entry was posted in ஸ்ரீ மங்கள சண்டிகா ஸ்தோத்ரம்!, ஸ்ரீ வித்யா தந்த்ரம்,, Uncategorized and tagged , , , . Bookmark the permalink.