Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | ரதிப்ரியா தனதேஸ்வரி மந்த்ர | रतिप्रिया धनदेश्वरी मन्त्र

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||

Ratipriya copy

|| க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

“ரதிப்ரியா தனதேஸ்வரி மந்த்ர”

“रतिप्रिया धनदेश्वरी मन्त्र”

இந்த மந்திரம் குப்பைமேட்டை கோபுரமாக்கும் வல்லமை உடையது ஆகும்.

மனிதனுக்கு தாரித்ரயம் ஒரு மிகப்பெரிய சாபமாக அமைந்துளது! எங்கெல்லாம் தாரித்ரய தேவி வசிக்கிராளோ, அங்கு தெய்வ ஆராதனைகளான ஹோமங்கள், வ்ரதங்கள், பண்டிகைகள் போன்றவைகள் நடந்து தெய்வசக்தியின் ப்ரஸன்னத்தை மனிதன் அடைய முடிவதில்லை. அது காண், மனிதனும் வாழ்வில் சுகம் அனுபவிப்பதில்லை, தேவர்களும் அவர்கட்கு கிட்டும் குறைவான அவிர்பாகத்தினால் வலிமை குன்றி இருப்பர். அவர்களது இச்சையும் மனிதர்கள், செரிவுடன் சிறப்பாக வாழவேண்டும் என்பதே.

எல்லோருக்கும் மஹாலக்ஷ்மியின் கடாட்சத்தை பெற அவளை முறைப்படி, விதிப்படி ஆராதிக்க இயலுவதில்லை. ஆகையால், இந்த எளிய மந்திரத்தை ப்ரம்மனால் குபேரனுக்கு தெளிவிக்கப்பட்டதாகவும், குபேரனால் உலகிற்கு உபதேசிக்கப்பட்டதாக பரமேஸ்வரன் பார்வதிக்கு உணர்த்துகிறார். ஆகையால் இந்த மந்திரத்திற்கு குபெரனே ரிஷி ஆகிறார்.

இதில் அம்பிகை தனதேஸ்வரி, எவர் ஒருவர் என்னை நித்யமும் ஸ்மரிக்கிறாரோ, அவர்தம் தரித்ரத்தை துடைக்க அவர்க்கு தாஸியாக இருந்து உருதுணை புரிவேன், அவர் அதனால் தனவாகிவிடுவார். பின்னர் அங்கு தரித்ரத்ரயம் இருக்குமா! என வினவி ஆசீர்வதித்துள்ளார்.

இது யக்ஷிணி தந்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. யக்ஷ யக்ஷிகளின் தலைவன் குபேரன் ஆகும்.

வினியோக:

कुबेर ऋशिः – पंक्तिश्छंदः –  श्री धनेश्चरी देवता – धं  बीजं – स्वहा शक्तिः  – श्रीं कीलकं .

குபேர ரிஷி:, பங்க்திஸ்ச்சந்த:, ஸ்ரீ தனேஸ்வரீ தேவதா:, தம் பீஜம், ஸ்வாஹ சக்தி:, ஸ்ரீம் கீலகம்.

 ரிஷ்யாதி ந்யாசம்

श्रां – श्रीं – श्रूं – श्रैं – श्रौं – श्रः

ஸ்ராம், ஸ்ரீம், ஸ்ரூம், ஸ்ரோம், ஸ்ரௌம் ஸ்ர: எனும் பீஜங்களால் ந்யாசம் செய்க.

 த்யானம்:

ॐ हेमप्राकारमध्ये सुरविटपितटे रक्तपीठाधिरूढां ध्यायेत्तां यक्षिणीं वै  परिमल कुसुम उद्भासिध मिल्लाभाराम्।

पीनोत्तुंग स्तनाढ्यां कुवलयनयनां रत्नकांचीं कराभ्यां भ्राम्यदु रक्तोत्पलाभ्यां नवरवि वसनां रक्तभूषांग रागाम्॥

ஓம் ஹேமப்ராகாரமத்யே சுரவிடபிதடே ரக்தபீடாதிரூடாம் த்யாயேத்தாம் யக்ஷிணி வை பரிமள குசும உத்பாசித மில்லாபராம் |  பினோத்துங்க ஸ்தனாட்யாம் க்வலயனயனாம் ரத்னகாஞ்சீம் கரப்யாம் ப்ரம்மயுது ரக்தோத்பலாப்யாம் நவரவி வஸனாம் ரக்தபூஷாங்க ராகாம் ||

மந்திரம்:

ॐ रं श्रीं ह्रीं धं धनदे रतिप्रिये स्वाहा।

ஓம் ரம் ஸ்ரீம் ஹ்ரீம் தம் தனதே ரதிப்ரியே ஸ்வாஹ |

இரு விதங்களில் இந்த மந்திரத்தை சித்தி செய்து கொள்ளலாம். ஒன்று வழக்கமான புர்ஷ்சரணமார்கம். ஒரு லட்சம் உரு, அதன் த்சாம்சம் ஹோமம், அதன் தசாம்சம் தர்பணம், அதன் தசாம்சம் மார்ஜனம், அதன் தசாம்சம் ப்ராம்மண போஜனம், பின்னர், குரு, பெற்றோர்கள், வம்ச முதியோர்களிடம் ஆசீர்வாதம் முதலியன. இரண்டாம் விதி ஏழு நாட்கள் தொடர்ந்து இரவில் நிஷ்டையுடன் 1008 உரு ஜெபிப்பின் உடனே சித்தியாகும்.

 (मन्त्रमहार्णवः)

***

“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |

ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||

சுபம்

இந்த வலைப்பூவில் கொடுக்கப்படும் முன்னோர்கள் அருளிய வேதம், வேத தழுவல், வேத மந்திரங்கள், உபனிஷத், பாஷ்யம், பாஷ்ய தழுவல், விரிவுரைகள், ஸ்லோகம், ஸ்தோத்ரம், அவற்றின் யந்திரங்கள், அதற்குறிய தந்திரங்கள் முதலியன, எவர் ஒருவடைய தனிப்பட்ட சொத்தும் அல்ல. நமது மூதாதையர்கள் அவர்தம் தவ பலத்தால் அறிந்ததேயாகும். அவர்கள் லோக கல்யாணத்திற்காக அவையெல்லாவற்றையும் நமக்கு அளித்தனர். இவற்றின் ப்ரயோக விதி, வழிபாடுமுறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” அவள் அனுக்ரஹத்தால், வழிகாட்டுதலால் கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்

ஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு தேவையான எளியோன் அறிந்த மந்திரம், யந்திரம், தந்திரம், விதிமுறைகள், வேண்டுபவரின் தகுதி அனுசரித்து அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan [at] yahoo [dot] com, அலைபேசி:- +91 92454 46956, Whats App:- +91 96774 50429

***

 

 

This entry was posted in रतिप्रिया धनदेश्ररी मन्त्र, ரதிப்ரியா தனதேஸ்வரி மந்த்ர, Uncategorized and tagged , , , . Bookmark the permalink.