Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | மந்திரங்களும் அவற்றின் பேதங்களும்!

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||

om-1

|| க ஏ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

”மந்திரங்களும் அவற்றின் பேதங்களும்!”

ஒரு மந்திரம் என்று இருப்பின் அதற்கு பேதங்கள் அதாவது தழுவல்கள் அல்லது அதை சார்ந்த, சார்புடைய பல மந்திரங்கள் உருவாகும். ஓர் அளவிற்கு மந்திர சாஸ்த்ரம் படித்தோருக்கு இந்த விஷயம் நன்றாக புரியும். அது ஒரு மந்திரம் சக்தி வாய்ந்ததாக இருப்பின், அதை கண்டவரோடு மற்றவர்களும் அதன் சித்தி சக்தியையும், அதுபோன்றே சித்தியளிக்கும், அல்லது அதை விட சக்தியளிக்கும் அதன் மருவல்களையும் கண்டு உலகிற்கு உணர்த்துவர். அப்படியாகும் பொழுது மந்திரம் சிறிது மாற்றமடைகிறது!  அவற்றையே மந்திர பேதம் என தெரிவிக்கப்படுகிறது.

கணபதிக்கு பல ரூபங்கள், விஷேஷங்கள் உளது, அவற்றை 32 விதமாக கூறுகின்றனர். அவற்றில் முதலாக வருவது ‘கம்’ என்ற ஏக பீஜமாகும். சிவனின் தெரியக்கூடிய 5 முகங்களிலிருந்தும், மற்றும் ஞானியர்க்கே தெரியும் அதோ முகமும் சேர்ந்து 6 முகமாகிறது. அந்த 6 முகத்தின் ஒருமித்த ரூபமே சரவணன், முத்துக்குமரன், வடிவேலன் என்றெல்லாம் அழைக்கப்படும் முருக பெருமான். அவருடைய பீஜமோ ‘சௌம்’ அதாவது சர்வ சௌபாக்யம் தரும் மந்திர சொல்லாக அமைந்திருக்கிறது.

அடுத்ததாக பாலாம்பிகையின் மூல வித்யா என்பது ‘ஐம் க்லீம் சௌ:’ என்பதாகும். அதன் பேதங்களோ, அதிகம். உதாரணம் கீழே.

1aஇதுபோல் நாம் வணங்கும் தேவ தேவைதகளுக்கும் அப்படியே, பலவான மந்திர பேதங்கள் உள. பாலாம்பிகையின் த்ரியக்ஷரி விரிவடையும் பொழுது பஞ்சதஸியாகி அதிக பலமுள்ளதாகிறது.  ஆதேபோல் அதன் பேதங்களாக பல பீஜங்கள் கூட்டியோ, கழித்தோ பஞ்சதஸி பல பெயரில் அழைக்கப்படுகிறது. அதுபோலவே ஷொடஸி மந்திரமும். அதற்கு எண்ணிலடங்கா பேதங்கள்.  ஆகையால், இதனை கண்ணுரும் பக்தர்கள், இந்த வித்யாசங்களின் சூக்குமத்தை அவர் அவர் ஸ்வகுருமார்களின் ஆசிகளோடு, அவர்களிடம் விளக்கம் கேட்டு அவர் அனுமதியோடு, அவரிடத்தில் உபதேசம் பெற்று உபாசிப்பதே முறையாகும்.

ஒரு மந்த்ர்ம் மாத்திரமே உளது, அதன் பேதங்கள் இல எனில், இவ்வளவு மந்திர சாஸ்திரங்களுக்கு அவசியமில்லை அல்லவா! இவ்வளவு மந்திர சாஸ்திரங்கள் உருவானதே இந்த மந்திர பேதங்களாலும் அந்த அந்த மந்திரங்களின் உத்க்ருஷ்ட சக்தியாலும் பயனாலுமே!

***

“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |

ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||

சுபம்

இந்த வலைப்பூவில் கொடுக்கப்படும் முன்னோர்கள் அருளிய வேதம், வேத தழுவல், வேத மந்திரங்கள், உபனிஷத், பாஷ்யம், பாஷ்ய தழுவல், விரிவுரைகள், ஸ்லோகம், ஸ்தோத்ரம், அவற்றின் யந்திரங்கள், அதற்குறிய தந்திரங்கள் முதலியன, எவர் ஒருவடைய தனிப்பட்ட சொத்தும் அல்ல. நமது மூதாதையர்கள் அவர்தம் தவ பலத்தால் அறிந்ததேயாகும். அவர்கள் லோக கல்யாணத்திற்காக அவையெல்லாவற்றையும் நமக்கு அளித்தனர். இவற்றின் ப்ரயோக விதி, வழிபாடுமுறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” அவள் அனுக்ரஹத்தால், வழிகாட்டுதலால் கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்

ஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு தேவையான எளியோன் அறிந்த மந்திரம், யந்திரம், தந்திரம், விதிமுறைகள், வேண்டுபவரின் தகுதி அனுசரித்து அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan [at] yahoo [dot] com, அலைபேசி:- +91 92454 46956, Whats App:- +91 96774 50429

This entry was posted in மந்திரங்களும் அவற்றின் பேதங்களும்!, ஸ்ரீ வித்யா தந்த்ரம்,, Uncategorized and tagged , , , . Bookmark the permalink.