Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | திருஷ்டி துர்கா தந்திரம்

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||

goddess-durga

|| க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

துர்கா என்ற வடசொல்லின் தமிழ் வடிவமே துர்க்கை ஆகும். துர்க்கம் என்றால் மலை, அரண், மலைக்கோட்டை, அகழி என பொருள்படும். எதிரிகள் ஒரு நாட்டிற்குள் புகமுடியாதபடி தடுப்பவை இவை. அதுபோல மனிதர்களுக்கு வரும் துன்பங்களை துர்கா தேவி தடுத்து நிறுத்துகிறாள். எனவே இவர் துர்கை என பெயர் பெற்றாள். வீரத்திற்கு எடுத்துக்காட்டான தெய்வம் இவள். பெண்கள் தைரியத்துடன் இருக்க வேண்டும். என்பதை சுட்டிக் காட்டுவதற்காக இவள் வடிவமைக்கப்பட்டாள்.

துர்கா என்ற வடசொல்லை த், உ, ர், க், ஆ என்ற ஐந்து எழுத்துக்களாக பிரிப்பர்.

த் என்றால் அசுரர்களை அழித்தல் அல்லது தீய எண்ணங்களை அழித்தல்

உ என்றால் பக்தர்களுக்கு ஏற்படும் இடைஞ்சல்களை நீக்குதல்.

ர் என்றால் ரோகங்களை குணமாக்குதல்.

க் என்றால் பாவங்களை நீக்குதல்.

ஆ என்றால் பயத்தையும், எதிரிகளையும் அழித்தல்.

இந்த ஐந்து கடமைகளையும் செய்கிறாள் துர்காதேவி. அதர்வண வேதத்தில் துன்பங்களிலிருந்து நம்மை காப்பவள் என்பதால் துர்கா என பெயர் வந்ததாக சொல்லப்பட்டுள்ளது. “துர்கா துர்கதி நாசினி”, இக்கட்டான நிலையில் சிக்கித் தவிப்பவர்களையும், தீராத நோய், துன்பங்களால் விரக்தி அடைந்து இருப்பவர்களையும் இவள் காப்பாற்றுவாள். “ஜெய் ஸ்ரீ துர்கா” என யார் கூறினாலும், அவர்களுக்கு வெற்றி சந்தேகமில்லமல் கிடைக்கும். துர்க்கையை, வனதுர்கா, சூலினி துர்கா, ஜாதவேதோ துர்கா, சாந்தி துர்கா, சபரி துர்கா, ஜ்வால துர்கா, தீப துர்கா, லவண துர்கா, ஆசூரீ துர்கா என ஒன்பது வடிவங்களாக நவதுர்கா என்ற பெயரில் வணங்குகின்றனர்.

“திருஷ்டி துர்கா தந்திரம்”

அஸ்ய ஸ்ரீ  திருஷ்டி துர்கா மஹாமந்த்ரஸ்ய   பிரம்மா ருஷி: காயத்ரி சந்த: ஸ்ரீ திருஷ்டிதுர்கா தேவதா ஹரீம் பீஜம் தும் ஸக்தி   ஸ்வாஹா கீலகம் ஸ்ரீ திருஷ்டி துர்கா பிரசாத ஸித்யர்த்தே மம சகல திருஷ்டி தோஷ நிவர்த்யர்த்தே  ஜபே விநியோக:

கர ந்யாசம்.

ஓம் ஹ்ராம்             அங்குஷ்டாப்யாம் நம:

ஓம் ஹ்ரீம்              தர்ஜநீப்யாம் நம:

ஓம் ஹ்ரூம்              மத்யமாப்யாம் நம:

ஓம் ஹ்ரைம்            அனாமிகாப்யாம் நம:

ஓம் ஹரௌம்           கனிஷ்டிகாப்யாம் நம:

ஓம் ஹர:               கரதலகரப்ருஷ்டாப்யாம் நம:

அங்க ந்யாசம்

ஓம் ஹ்ராம்             ஹ்ருதாய நம:

ஓம் ஹ்ரீம்              ஸிரசே ஸ்வாஹா

ஓம் ஹ்ரூம்             சிகாயைவௌஷட்

ஓம் ஹ்ரைம்           கவசாய ஹூம்

ஓம் ஹ்ரௌம்        நேத்த்ரத்தராய வௌஷட்

ஓம் ஹர:               அஸ்த்ராய பட்

பூர்புவஸ்ஸுவரோம் இதி திக் பந்த:

த்யானம்

வித்யுத்தாம ஸமப்ராம் ம்ருகபதிஸ் கந்தஸ்திதாம் பீஷாணாம்

கன்யாபி: கரவாள கேடவிலசத் தஸ்தாபிரா ஸேவிதாம்

ஹஸ்தைஸ்சக்ர கதாஸிகேட விஸிகாம்ச் சாபம் குணம் தர்ஜனீம்

பிப்ராணாமனலாத்மிகாம் சசிதராம் துர்க்காம் த்ரிநேத்ராம் பஜே

பஞ்சோபசார பூஜா

லம்         ப்ருதிவ்யாத்மநே கந்தம் கல்பயாமி நம:

ஹம்       ஆகாஸாத்மனே புஷ்பாணீ கல்பயாமி நம:

யம்         வாய்வாத்மனே தூபம் கல்பயாமி நம:

ரம்          அக்ன்யாத்மனே தீபம் கல்பயாமி நம:

வம்       அம்ருதாத்மனே அம்ருதம் மஹா நைவேத்யம் கல்பயாமி நம:

ஸம்        ஸர்வாத்மனே  சர்வோபசாரான் கல்பயாமி நம:

மூல மந்த்ரம்

“ஓம் ஹ்ரீம் தும் துர்கே பகவதீ மனோக்ரஹம் மதமத ஜிஹ்வா பிசாசீ ருத்ஸாதயோ ருத்ஸாதய: ஹித திருஷ்டி அஹித திருஷ்டி பர திருஷ்டி சர்ப திருஷ்டி சர்வ திருஷ்டி விஷம் நாசய ஹும்பட் ஸ்வாஹா”

ஹ்ருதயாதி நியாஸம்  :

ஓம் ஹ்ராம்                 ஹ்ருதாய நம:

ஓம் ஹ்ரீம்                   ஸிரசே ஸ்வாஹா

ஓம் ஹ்ரூம்                   சிகாயைவௌஷட்

ஓம் ஹ்ரைம்                கவசாய ஹூம்

ஓம் ஹ்ரௌம்             நேத்த்ரத்தராய வௌஷட்

ஓம் ஹர:                       அஸ்த்ராய பட்

பூர் புவஸ்வரோமிதி  திக் விமோக:

த்யானம்

வித்யுத்தாம ஸமப்ராம் ம்ருகபதிஸ் கந்தஸ்திதாம் பீஷாணாம்

கன்யாபி: கரவாள கேடவிலசத் தஸ்தாபிரா ஸேவிதாம்

ஹஸ்தைஸ்சக்ர கதாஸிகேட விஸிகாம்ச் சாபம் குணம் தர்ஜனீம்

பிப்ராணாமனலாத்மிகாம் சசிதராம் துர்க்காம் த்ரிநேத்ராம் பஜே

லமித்யாதி பூஜா

லம்         ப்ருதிவ்யாத்மநே கந்தம் கல்பயாமி நம:

ஹம்        ஆகாஸாத்மனே புஷ்பாணீ கல்பயாமி நம:

யம்         வாய்வாத்மனே தூபம் கல்பயாமி நம:

ரம்         அக்ன்யாத்மனே தீபம் கல்பயாமி நம:

வம்       அம்ருதாத்மனே அம்ருதம் மஹா நைவேத்யம் கல்பயாமி நம:

ஸம்        ஸர்வாத்மனே  சர்வோபசாரான் கல்பயாமி நம:

சமர்ப்பணம்

குஹ்யாதி குஹ்யகோப்த்ரீ த்வம் க்ருஹணாஸ்மாத்க்ருதம் ஜபம் |

ஸித்திர்பவது மே தேவி தவத்ப்ரசாதான்மயி ஸ்திரா ||

யானி கானி ச பாபானி ஜன்மாந்தர க்ருதானி ச |

தானி தானி விநச்யந்தி ப்ரதக்ஷிணே பதே பதே ||

அபராத ஸஹஸ்ரானி க்ரியந்தே ஹர்னிஸம் மயா

தாஸோயமிதி மாம் மத்வ க்ஷமஸ்வ பரமேஷ்வரீ ||

மந்த்ர ஹீனம் க்ரியா ஹீனம் பக்தி ஹீனம் மஹேஷ்வரீ |

யத்பூஜிதம் மயா தேவி பரிபூர்ணம் ததஸ்து மே ||

அன்யதா சரணம் நாஸ்தி த்வமேவ சரணம் மம: |

தஸ்மாத் காருண்ய பாவேன லோக க்ஷேமம் சதா குரு ||

காமேஷ்வரீ ஜனனி, காமேஷ்வரோ ஜனக:, தவ சரணௌ மமசரணம் |

காமேஷ்வரீ ஜனனீ தவ சரணௌ மம சரணம். ||

காமேஷ்வர ஜனக காமேஷ்வரீ ஜனனி, குரு லோகே க்ஷேமம் |

காமேஷ்வரீ ஜனனீ குரு லோகே ஸாந்திம் ||

***

“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |

ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||

சுபம்

இந்த வலைப்பூவில் கொடுக்கப்படும் முன்னோர்கள் அருளிய வேதம், வேத தழுவல், வேத மந்திரங்கள், உபனிஷத், பாஷ்யம், பாஷ்ய தழுவல், விரிவுரைகள், ஸ்லோகம், ஸ்தோத்ரம், அவற்றின் யந்திரங்கள், அதற்குறிய தந்திரங்கள் முதலியன, எவர் ஒருவடைய தனிப்பட்ட சொத்தும் அல்ல. நமது மூதாதையர்கள் அவர்தம் தவ பலத்தால் அறிந்ததேயாகும். அவர்கள் லோக கல்யாணத்திற்காக அவையெல்லாவற்றையும் நமக்கு அளித்தனர். இவற்றின் ப்ரயோக விதி, வழிபாடுமுறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” அவள் அனுக்ரஹத்தால், வழிகாட்டுதலால் கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்

ஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு தேவையான எளியோன் அறிந்த மந்திரம், யந்திரம், தந்திரம், விதிமுறைகள், வேண்டுபவரின் தகுதி அனுசரித்து அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan [at] yahoo [dot] com, அலைபேசி:- +91 92454 46956, Whats App:- +91 96774 50429

This entry was posted in திருஷ்டி துர்கா தந்திரம், ஸ்ரீ வித்யா தந்த்ரம்,, Uncategorized and tagged , , , , . Bookmark the permalink.