Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | சூலினி துர்கா தந்த்ரம் | SHOOLINI DURGA TANTRAM

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||

goddess-durga

|| க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

துர்கா என்ற வடசொல்லின் தமிழ் வடிவமே துர்க்கை ஆகும். துர்க்கம் என்றால் மலை, அரண், மலைக்கோட்டை, அகழி என பொருள்படும். எதிரிகள் ஒரு நாட்டிற்குள் புகமுடியாதபடி தடுப்பவை இவை. அதுபோல மனிதர்களுக்கு வரும் துன்பங்களை துர்காதேவி தடுத்து நிறுத்துகிறாள். எனவே இவர் துர்க்கை என பெயர் பெற்றாள். வீரத்திற்கு எடுத்துக்காட்டான தெய்வம் இவள். பெண்கள் தைரியத்துடன் இருக்க வேண்டும். என்பதை சுட்டிக் காட்டுவதற்காக இவள் வடிவமைக்கப்பட்டாள்.

துர்கா என்ற வடசொல்லை த், உ, ர், க், ஆ என்ற ஐந்து எழுத்துக்களாக பிரிப்பர்.

த் என்றால் அசுரர்களை அழித்தல் அல்லது தீய எண்ணங்களை அழித்தல்

உ என்றால் பக்தர்களுக்கு ஏற்படும் இடைஞ்சல்களை நீக்குதல்.

ர் என்றால் ரோகங்களை குணமாக்குதல்.

க் என்றால் பாவங்களை நீக்குதல்.

ஆ என்றால் பயத்தையும், எதிரிகளையும் அழித்தல்.

இந்த ஐந்து கடமைகளையும் செய்கிறாள் துர்காதேவி. அதர்வண வேதத்தில் துன்பங்களிலிருந்து நம்மை காப்பவள் என்பதால் துர்கா என பெயர் வந்ததாக சொல்லப்பட்டுள்ளது. இக்கட்டான நிலையில் சிக்கித் தவிப்பவர்களையும், தீராத துன்பங்களால் விரக்தி அடைந்து இருப்பவர்களையும் இவள் காப்பாற்றுவாள். ஜெய் ஸ்ரீதுர்கா என யார் கூறினாலும் அவர்களுக்கு வெற்றி கிடைக்கும். துர்க்கையை, வனதுர்கா, சூலினி துர்கா, ஜாதவேதோ துர்கா, சாந்தி துர்கா, சபரி துர்கா, ஜ்வால துர்கா, தீப துர்கா, லவண துர்கா, ஆசூரீ துர்கா என ஒன்பது வடிவங்களாக நவதுர்கா என்ற பெயரில் வணங்குகின்றனர்.

 

”சூலினி துர்கா தந்த்ரம்”

 

அஸ்ய ஸ்ரீ  சூலினி துர்கா மஹா மந்த்ரஸ்ய  தீர்க்தமா ருஷி:, ககுப் சந்த:, ஸ்ரீ  சூலினிதுர்கா தேவதா,  ஹூம் பீஜம், ஸ்வாஹா சக்தி:   மம ஸர்வா பீஷ்ட ஸித்யர்தே  ஜபே விநியோக: ||

சூலினி துர்க்கே தேவஸித்த சூபூஜிதே நந்தினி மாம் ரக்ஷ ரக்ஷ மஹா யோகேச்வரி ஹும் பட்  –  அங்குஷ்டா / ஹ்ருதயாய

சூலினி துர்க்கே தேவஸித்த சூபூஜிதே நந்தினி மாம் ரக்ஷ ரக்ஷ மஹா யோகேச்வரி ஹும் பட்  –  தர்ஜனீப்யாம் /  சிரசே

சூலினி துர்க்கே தேவஸித்த சூபூஜிதே நந்தினி மாம் ரக்ஷ ரக்ஷ மஹா யோகேச்வரி ஹும் பட்   – மத்யமாப்யாம்  /  சிகாயை

சூலினி துர்க்கே தேவஸித்த சூபூஜிதே நந்தினி மாம் ரக்ஷ ரக்ஷ மஹா யோகேச்வரி ஹும் பட்  –  அனாமிகாப்யாம்  /  கவசாய

சூலினி துர்க்கே தேவஸித்த சூபூஜிதே நந்தினி மாம் ரக்ஷ ரக்ஷ மஹா யோகேச்வரி ஹும் பட்  –  கனிஷ்டி / நேத்ரத்ரயாய

சூலினி துர்க்கே தேவஸித்த சூபூஜிதே நந்தினி மாம் ரக்ஷ ரக்ஷ மஹா யோகேச்வரி ஹும் பட்  –  கரதல  / அஸ்த்ராய

பூர்புவஸ்ஸுவரோம் இதி திக் பந்த:

 

த்யானம்

 

பிப்ராணா சூலபாணாஸ்யரி ஸதர கதா சபா பாசான் கராப்ஜை:

மேகச்யாமா கிரீடோல்லிகித ஜலதரா பீஷணா பூஷணாட்யா

ஸிம்ஹஸ் கந்தாதிரூடா  சதஸ்ருபிரஸிகேடான் விநாவி: பரீதா

கன்யாபி: பின்னதைத்யா பவது பவபயத்வம் ஸினி சூலினீயை:

 

பஞ்சோபசார பூஜா

 

லம்        ப்ருதிவ்யாத்மநே கந்தம் கல்பயாமி நம:

ஹம்      ஆகாஸாத்மனே புஷ்பாணீ கல்பயாமி நம:

யம்         வாய்வாத்மனே தூபம் கல்பயாமி நம:

ரம்          அக்ன்யாத்மனே தீபம் கல்பயாமி நம:

வம்       அம்ருதாத்மனே அம்ருதம் மஹா நைவேத்யம் கல்பயாமி நம:

ஸம்      ஸர்வாத்மனே சர்வோபசாரான் கல்பயாமி நம:

 

 மூல மந்த்ரம்

 

ஓம் ஸ்ரீம்  ஹ்ரீம் க்லீம்  க்ரௌம் தும் ஜ்வல ஜ்வல சூலினீ துஷ்டக்ரஹ ஹும்பட்  ஸ்வாஹா ||

 

ஹ்ருதயாதி நியாஸம்: பூர் புவஸ்வரோமிதி  திக் விமோக:

 த்யானம் –  லமித்யாதி பூஜா  – சமர்ப்பணம்

***

“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |

ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||

சுபம்

இந்த வலைப்பூவில் குறிப்பிட்டிருக்கும் ப்ரயோகம், செய்முறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்

ஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு தேவையான மந்திரம், யந்திரம், தந்திரத்தை தகுதி அனுசரித்து அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan [at] yahoo [dot] com, அலைபேசி:- +91 92454 46956, Whats App:- +91 96774 50429

***

|| ஸ்ரீ தேவி பத்மாத்மிகாவின் மஹா ஸோடசி மந்திரம் ||

devi_laxmi


இனிய காலை வணக்கம், சீர்மிகு வாழ்வு சிறப்புடனும் செழிப்புடனும் அமையவே!

ஒம் ஹ்ரீம் ஹ்ரெய்ம் ஹ்ஸ்க்லீம் ஸ்ரீம் பத்மே நம: 108 உரு

இது ஸ்ரீ லக்ஷ்மியின் உருவேயான ஸ்ரீ தேவி பத்மாத்மிகாவின் மஹா ஸோடசி மந்திரம் ஆகும். நித்ய பாராயணம் நிஷ்டையுடன் செய்துவர சர்வ ஸம்பத்ப்ரதாயகரமாகும்!

படித்தவர் பகிரவும், முடிந்தவர் முயற்சிக்கவும்!

 

This entry was posted in சூலினி துர்கா தந்த்ரம், தஸ மஹா வித்யா, ஸ்ரீ வித்யா தந்த்ரம்,, Dasa Maha Vidhya, SHOOLINI DURGA TANTRAM, Uncategorized and tagged , , , , , . Bookmark the permalink.