“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்” – Part 13 – ஸ்ரீ வித்யா தந்த்ரம் – 1

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம:

bala

க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம்

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்” – Part 13

***ஸ்ரீ வித்யா தந்த்ரம் – 1***

“ஸ்ரீ வித்யா” வழிபாடின் முதலும் முக்கியமான தேவியும் ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரி ஆவாள். இந்த தேவியானவள், அபிரிமித தனம், ஐஸ்வர்யம், போகம் மற்றும் முடிவில் மோக்ஷமும் அருள்பவளாவாள். மற்ற வித்யைகளில் மோக்ஷம் தனியாகவும், இன்னமும் சிலவற்றில் போகமும் காணப்படும் ஆயின், இந்த தேவியின் உபாசனையானது சதுர்வித பல புருஷார்த்தமும் ஒருங்கே வழங்கும் ஒரே சன்னதியாகும். ஆகையாலே, ஸ்ரீவித்யா உபாசனை சிறந்தது என சான்றோர் அருளினர்.

இந்த தேவியின் உபாசனையாகப்பட்டது மிக ரஹஸ்யமானதும், பூர்வஜென்மத்தில் விஷேஷ சம்ஸ்காரங்களை செய்த சாதகனாக இருந்திருந்தாலே, இந்த ஜென்மத்தில் ஸ்ரீவித்யா தீக்ஷையின் யோகமே கிட்டும் என ஸ்ரீ திரிபுராம்பிகை பல சந்தர்பங்களில் அருளியுள்ளாள்!

இந்த ஸ்ரீவித்யையானது மூன்று ஸ்வரூபங்களில் வழிபட தக்கது. ஒன்று 8 அல்லது 9 வயது உள்ள சிறுமியாக, இரண்டு, 16 வயது குமரியாக (கன்யை) மூன்றாவது ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரி எனும் பெண் வடிவாகவும் முடிவில் ஸ்ரீ ராஜராஜேஸ்வரியாகவும் வழிபடவும்  என க்ரந்தங்கள் தெரிவிக்கின்றன.

சாதகன், க்ரமமாக ஸ்ரீ பாலாம்பிகை, ஸ்ரீ திருபுராம்பிகை மற்றும் ஸ்ரீ லலிதாம்பிகையின் தீக்ஷைகளை பெறவேண்டும். சிலர் நேராக ஸ்ரீ லலிதாம்பிகையின் தீக்ஷை பெற்று ஆரம்பத்தில் சொல்லொணா (செல்வ வளம்) துயரம் அடைந்து பின்னர் நலமடைந்துள்ளனர். அதுகாண் உபாசகர்கள் க்ரமமாக தீக்ஷை பெற்று உபாசனை / அனுஷ்டானம் / ஆராதனை செய்து நற்பயனடைவீரே!

ப்ருஹுன்னீலா தந்திரத்தில், ஸ்ரீ தக்ஷிண காளியை க்ருஷ்ண வர்ணி என்றும், ஸ்ரீ திரிபுரையை ரக்தவர்ணி என்றும் விவரிக்கப்படுகிறது. அப்படியென்றால், ஸ்ரீ திரிபுராம்பிகை காளீ-ரக்தவர்ணியுமாவாள். ஆகையாலேயே ஸ்ரீ திரிபுராம்பிகை வழிபாடு போக மோக்ஷ ப்ரதாயினியாகிறது.

காம்ய ப்ரயோகங்களில், யந்திரத்தின் முக்கியத்வம் அதிகம். ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி யந்திரத்தின் வின்யாசமும், ஆவரண பூஜா விளக்கமும், முறையும், காம்ய ப்ரயோகங்களுக்குண்டான த்யான ஸ்லோகங்களும் இங்கு கொடுக்கப்படவில்லை. தவிற்கப்பட்டுள்ளது.

சர்வ கார்ய சித்தியும், தாரித்ர்ய தஹனமும், பெரும் செல்வம் அளிப்பதும், அபரிமித ஞானம் கருணிப்பவையும், சர்வ ரோக நாஷனமும், நிவாரணமும், சர்வ லோக வஷீகரணமும், ஸ்ரீ பாலாம்பிகையின் மிக உத்க்ருஷ்ட காம்ய ப்ரயோகங்களாகும்.  

பீஜ ரூப த்யானம்: ஐம் (ऐं)

வித்யாக்ஷமாலா சுகபாலமுத்ரா ராஜாத்கரம் குந்தசமான காந்திம் | முக்தாபலாலக்ருதி ஷோபிதாங்கீம் பாலாம் ஸ்மரேத் வாக்மயசித்திஹேதோ: ||

வெள்ளை வஸ்த்ரம், வெண்கந்த தாரணம், வெண்முத்துமாலை தரித்து பாலாவின் பீஜமந்திரத்தை 3 லட்சம் உரு, தஸாம்சம் ஹோமம் இத்யாதி

பீஜரூப தயானம் க்லீம் (क्लीं)

பஜேத் கல்பவ்ருக்ஷாத் உத்திப்தி ரத்னாசனே சத்ரிஷண்ணாம் மதாதூர்ணிதாக்ஷீம் |

கரைர்பீஜாபூரம் கபாலேஷு சாபாம், சபாஸாங்குஷாம் ரக்தவர்ணம் ததானம் ||

சிகப்பு வஸ்த்ரம், ரக்த சந்தன திலகம், சென்னிர ஆபூஷணம், 3 லட்சம் உரு, தஸாம்சம் ஹோமம் இத்யாதி. சர்வ லோக வசீகரணம்.

பீஜரூப தயானம் சௌ: (सौ:)

வ்யாக்யானமுத்ராம்ருத கும்பவிதயாமக்ஷஸ்த்ரஜம் சந்ததீம் கராக்ரை: | சித்ரூபிணீம் ஷரதசந்த்ர காந்திம் பாலாம் ஸ்மரேன் மௌக்திகபூஷிதாங்கீம் ||

வெள்ளை வஸ்த்ரம், வெண்சந்தனம், தன்னையே தேவஸ்வரூபமாக எண்ணி, 3 லட்சம் உரு, தஸாம்சம் ஹோமம், இத்யாதி, லக்ஷ்மீவானாகவும், கீர்த்திமானாகவும், வித்யாபதியாகவும் திகழ்வது திண்ணம்.

மேலும் சிலவற்றை அடுத்தபதிவில் காண்போமே!

“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்” – Part 12, Part 11, Part 10, Part 9, Part 8, Part 7, Part 6, Part 5, Part 4, Part 3, Part 2, Part 1,

இந்த வழிபாட்டுக்கு தேவையான மாத்ருகா ந்யாசம், யந்திரம், யந்திர பூஜா, ஆவரண பூஜா விதானமும், விரிவான வழிபாடு, புரஸ்சரண விதியும், முறையும் தொடர்புகொள்பவர்க்கு, வழங்கப்படும் என்பதை பணிவோடு தெரிவித்துக்கொள்கிறேன்

சுபம்

இந்த வலைப்பூவில் குறிப்பிட்டிருக்கும் செய்முறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்

ஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan@yahoo.com, அலைபேசி:- 92454 46956

This entry was posted in அக்ஷய தனப்ராப்தி, யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம், ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி, ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி மந்திரங்கள்,, ஸ்ரீ பாலாம்பிகை, ஸ்ரீ வித்யா தந்த்ரம்,, Dasa Maha-Vidhya, Uncategorized and tagged , , , , . Bookmark the permalink.