“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்” – Part 11 – ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி மந்திரங்கள் – 2

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம:||

bala

|| க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்” – Part 11

***ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி மந்திரங்கள் – 2***

பரமேஸ்வரன், பரமேஸ்வரியுடன் தனிமையிலிருக்கையில், பரமேஸ்வரிக்கு கீழ்க்கண்டவண்ணம் அருள்கிறார்.

இப்பொழுது ஸ்ரீ பாலா வித்யை பற்றி சொல்கிறேன்! இந்த மந்திரத்தை ஸேவை செய்யும் உபாஸகன், வித்யையில் ப்ரஹஸ்பதிக்கு சமமானவாகவும், தன சம்பத்தில் குபேரனுக்கு சமமானவனாகவும் ஆகிறான்!

இந்த மந்திரமானது “ஐம் க்லீம் சௌ:” எனும் முப்பீஜ மந்திரமாகும். இதற்கு பராசக்தி தேவியின் சாபம் மற்றும் கீலனம் உளது. அதுகாண் இது சித்தியாகாது. இதை சாபோத்தாரணம் மற்றும் உத்கீலனம் செய்தே உபயோகிக்கவேண்டும்.

இப்பொழுது சாப விமோசனா மந்திரத்தை விவரிக்கிறேன்!

“ஐம் ஐம் சௌ: க்லீம் க்லீம் ஐம் சௌ: சௌ: க்லீம்”. இது ஒன்பது பீஜங்களை கொண்டது ஆகும், இதை 108 முறை உச்சரிக்க, பாலா திரிபுரசுந்தரி மந்திரம் சாப விமோசனம் அடைகிறது.

இனி உத்கீலனா மந்திரத்தை கவனிப்போம்! “ஓம் க்லீம் நம:” எனும் மந்திரத்தை 108 முறை ஜெபிக்க, மந்திரம் உத்கீலனமாகிறது.

சாபம் மற்றும் கீலனத்தால் ப்ரகாஸமிழந்த மந்திரத்தை ப்ரகாசிக்க செய்யவேண்டிய தீபான மந்திரமும் விதியும் உபதேஸிக்கிறேன்.

“ஐம்” எனும் பீஜத்தை ப்ரகாஸிக்க “வத வத வாக்வாதினி ஐம்” எனும் மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்யவேண்டும்.

“க்லின்னே க்லேதினி மஹாக்ஷோபம் குரு” எனும் மந்திரத்தை 108 முறை உச்சரித்து “க்லீம்” எனும் காமராஜ பீஜத்தை தீபானம் செய்யவும்.

“ஓம் மோக்ஷம் குரு” என 108 முறை ஜெபித்து “சௌ:” எனும் பீஜத்தை ப்ரகாசிக்க செய்யவும்.

இப்படியாக சாப மோக்ஷம், உத்கீலனம் தீபானம் செய்தபின் புரஸ்சரணம் செய்துகொள்ளவும்

அடுத்த பதிவில் வினியோகம், ந்யாசங்கள், த்யானங்கள் இத்யாதி!

“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்” – Part 10 – ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி மந்திரங்கள், Part 9, Part 8, Part 7, Part 6, Part 5, Part 4, Part 3, Part 2, மந்த்ர ஸ்வரூபம்

“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |

ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||

சுபம்

இந்த வலைப்பூவில் குறிப்பிட்டிருக்கும் ப்ரயோகம், செய்முறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்

ஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு தேவையான மந்திரம், யந்திரம், தந்திரத்தை தகுதி அனுசரித்து அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan [at] yahoo [dot] com, அலைபேசி:- +91 92454 46956, Whats App:- +91 96774 50429

This entry was posted in “யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்”, மந்த்ர ஸ்வரூபம், யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம், ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி, ஸ்ரீ பாலாம்பிகை, Dasa Maha-Vidhya, Uncategorized and tagged , , , , , , . Bookmark the permalink.