“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்” – Part 5

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம:

லக்ஷ்மி

க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம்

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்” – Part 5

* காணபத்ய தந்த்ர மந்திரங்கள் *

வக்ரதுண்டகணேஷ யந்த்ர விதானம்

சாஸ்திரங்கள் யந்திரங்களை இரு வகைப்படுத்தியிருக்கின்றன. ஒன்று உபாஸனா யந்திரங்கள். இரண்டாவது ப்ரயோக யந்திரங்கள்.

உபாஸனா யந்திரங்கள் சுத்திகரித்து, ஜீவனூட்டி, புஷ்டீகரணம் செய்யப்பட்டபின், நித்ய பூஜைக்காக விதிப்படி உபயோகிக்கவும், ப்ரயோக யந்திரங்கள் ப்ரயோகம் முடிந்தவுடன் விதிப்படி விசர்ஜனம் செய்யப்படவேண்டியது

இவற்றிலும் இருவகை உள்ளன. அவை ஸ்த்ரீ யந்திரம் எனவும் புருஷ யந்திரம் என்றும், அவற்றின் அமைப்பு வரைக்கோடுகள் மற்றும் அவற்றில் பதியப்படும் எழுத்துக்கள் ஆடியவை மேடாக இருப்பின் அவை புருஷ எந்திரம் எனவும், வரைக்கோடுகள் மற்றும் எழுத்துக்கள் ஸ்த்ரீ யந்திரத்தில் பள்ளமாகவும் இருத்தல் வேண்டும். மாறாக ஸ்த்ரி யந்திரம் மேடாக இருப்பினும், புருஷ யந்திரம் பள்ளமாக இருப்பினும் அபீஷ்ட பலன் தராது எனவும் விவரிக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக, யந்திரங்கள் – உதாரணத்திற்கு இந்த கணேஷ யந்திரத்தையே எடுத்துக்கொள்வோம். இங்கு கொடுக்கப்பட்டுள்ள யந்திரம் உண்மையானதும் பொதுவானதும் ஆகும். ஆயின், இது ஒவ்வொருவருக்கும், அவர் அவர் நட்சித்திரப்படி ஒரு குறிப்பிட்ட நாளில், நட்சத்திரத்தில், ஹோரையில் செய்யப்பட வேண்டும். இதற்கு விலக்கு க்ரஹணகாலத்தில் வரையப்படும் யந்திரங்கள் எல்லோருக்கும் பலனளிக்கும். அதுபோலவே உயிரூட்டலும் ஒரு குறிப்பிட்ட நாளில் செய்யப்பட வேண்டும். அதன் பின்னர் அந்த ய்ந்திரோ தெவதைக்கு குறிப்பிட்ட அளவு உருவிடவும் வேண்டும். இப்படியெல்லாம் விதிப்படி யந்த்ரொத்தாரம், சுத்தீகரணம், ஆவாஹனம், ப்ராணப்ரதிஷ்டா, புஷ்டீகரணம் எல்லாம் செய்யப்பட்ட யந்திரங்கள் அபேக்ஷித்த பலங்களை நிச்சயமாக அளிக்கும். (இதற்கு மாறாக செய்யப்பட்ட யந்திரங்கள் சாபக்ரஸ்தமானதாகவும், விபரீத பலனளிப்பையாகவும் அல்லது நிஷ்பலகாரியாகவும் இருக்கும்)

பொதுவாக எல்லா யந்திரங்களுக்கும் நித்ய ஆராதனைகள் அதற்குறிய விதிப்படி செய்தல் வேண்டும்.

இனி வக்ரதுண்ட கணேஷ யந்திரத்தின் யந்த்ரோத்தாரம் கீழ் கண்டபடி உளது.

“மத்தியில் பிந்துவும், அதை சுற்றி ஷட்கோணமும், இதை சுற்றி அஷ்ட தளமும், அதன் புறமே நான் மூலைகளிலும் பூபுரமும், அதன் மத்தியில் வாயிலும் இருத்தல் வேண்டும்”. வரைதல் இதற்கு ப்ரயோகனுசாரே விதிக்கப்பட்ட எழுத்தாணியாலும், அஷ்டகந்தக் கலவையாலும் இருத்தல் வேண்டும்.

ஒவ்வொரு யந்திரத்திற்கும் அதற்கே உரிய ஆவரண பூஜையும் முறையாக செய்யப்படல் வேண்டும்.

இந்த யந்திரம் மந்திராக்ஷர மாற்றங்களுடன் இன்னொரு விஷேஷமான மந்திரத்திற்கும் உபயோகப்படும். அந்த மந்திரம் மற்றும் மாற்றங்கள் அடுத்த பகுதியில் பார்ப்போமே.

இந்த வழிபாட்டுக்கு கணேச மாத்ருகா ந்யாசம், யந்திரமும், யந்திர பூஜா விதானமும், யந்திரத்தின் ஆவரண பூஜா விளக்கமும், மற்றும் விரிவான வழிபாடு முறையும் தொடர்புகொள்பவர்க்கு, வழங்கப்படும் என்பதை பணிவோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்” – Part 4

“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்” – Part 3

“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்” – Part 2

“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்”– Part 1.

ஒம்

சுபம்

இந்த வலைப்பூவில் குறிப்பிட்டிருக்கும் செய்முறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்

ஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan@yahoo.com, அலைபேசி:- 92454 46956

This entry was posted in அக்ஷய தனப்ராப்தி, ஜெப விதி, மந்த்ர ஸ்வரூபம், யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம், ராஜதனம், வக்ரதுண்டகணேஷ யந்த்ர விதானம், Mantra Derivation, Uncategorized and tagged , , , . Bookmark the permalink.