“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்” – Part 3

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||

லக்ஷ்மி

|| க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்” – Part 3

* காணபத்ய தந்த்ர மந்திரங்கள் *

நம் எல்லா கார்யங்களும் விக்னமின்றி நிறைவேர கணபதியை நினைக்கவேண்டியது, வணங்க வேண்டியதே! மனிதனின் கண்ணுக்கு தெரியாத விரோதி என்றால்; காம க்ரோத லோப மோஹம் இத்யாதி மனிதனின் உள்ளிருந்தே மனிதனை அழிக்கும்.

“வக்ரதுண்டராக” சிம்ஹ வாகனத்தில் தனுர்தரராக மத்சாசுரனை அழித்தார், “ஏகதந்தராக” மூஷிக வாஹனத்தில் மதாசுரனை அழித்தார். “மஹோதரராக” மூஷிக வாஹனத்தில் மோஹாசுரனை வதித்தார். கஜானனாக லோபாசுரனையும், லம்பொதரனாக க்ரோதாசுரனையும், விகடாவதாரனாக காமாசுரனையும், விக்ன ராஜனாக ஷேஷ வாகனத்தில் மமதாசுரனையும், தூம்ரவர்ணராக அபிமானாசுரனையும் வதைத்தருளினார். மற்றும் பரப்ரம்மமான இவர் வக்ரதுண்டராக வேத ப்ரம்மனாகவும், ஏகதந்தராக தேஹி ப்ரம்மனாகவும், மஹோதரராக ஞானப்ரம்மனாகவும், கஜானனாக சாங்க்ய ப்ரம்மனாகவும், லம்போதரனாக ஷக்தி ப்ரம்மனாகவும், விகடாவதாரராக ஸௌர ப்ரம்மனாகவும், விகனராஜனாக விஷ்ணு ப்ரம்மனாகவும், தூம்ரவர்ணராக சிவ ப்ரம்மனாகவும் போற்றப்படுகிறார்.

இத்துணை மகிமைபெற்ற இவர் நான்கு வண்ணங்கள் உடையவர் ஆவார். அவையாவன, வெள்ளை, மஞ்சள், சிவப்பு மற்றும் நீல நிறம். இவருக்கென நிறைய மந்திரங்கள் உண்டு. அவற்றில் சிலவற்றை அவற்றின் பலன்களை கண்டபின் காண்போமா!

இனி விவரிக்கும் பலன்கள்

1. அஷ்ட த்ரவ்யங்கள் நிவேதித்து, சுத்த நெய் அன்னம் முதலியன ஆஹுதி, ராஜதனம், ராஜ ஐஸ்வர்யம், சர்வ விக்னஹரம், சர்வ சத்ரு ஸ்தம்பனம் முதலியன லபிக்கும் வழியாகும்.

2. அவல் அல்லது தேங்காயுடன் நித்யமும் 1008 ஆஹுதி கொடுக்க 1 மாதத்தில் ராஜதனம், ராஜ ஐஸ்வர்யம், சௌபாக்யம், சர்வ விக்னஹரம், சர்வ சத்ரு ஸ்தம்பனம் முதலியன லபிக்கும்.

3. ஜீரகம், சைந்தவ லவணம், மிளகுடன் அஷ்ட திரவியம் சேர்த்து தினமும் 100 ஆஹுதியிட ஒரு பக்ஷத்தினுள் ராஜதனம், ராஜ ஐஸ்வர்யம், சர்வ விக்னஹரம், சர்வ சத்ரு ஸ்தம்பனம், சௌபாக்யம் முதலியன லபிக்கும் வழியாகும்..

4. தினமும் 444 முறை மூல மந்த்ர தர்பணம் செய்து வர, நினைத்தது எல்லாம் நிறைவேரும்.

மேற்கண்ட பலன் அருளும் மந்திரம், கணபதியின் இந்த ஷடாக்ஷர மந்திரமாகும்.

“ஓம் வக்ரதுண்டாய ஹூம் |”

இம்மந்திரம் மூலமாக மேற்கண்ட பலன்களுடன் இன்னமும் பல சுப பலன் பெற தேவையான ப்ரயோக முறையை அடுத்தபதிவில் காண்போமாக.

முந்தய பதிவுகள்:

“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்” – Part 2

“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்” – Part 1

ஒம்

“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |

ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||

சுபம்

இந்த வலைப்பூவில் குறிப்பிட்டிருக்கும் ப்ரயோகம், செய்முறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்

ஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு தேவையான மந்திரம், யந்திரம், தந்திரத்தை தகுதி அனுசரித்து அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan [at] yahoo [dot] com, அலைபேசி:- +91 92454 46956, Whats App:- +91 96774 50429

This entry was posted in “யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்” – Part 3, ராஜதனம், Uncategorized and tagged , , , , , , . Bookmark the permalink.