“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்” – Part 2

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||

லக்ஷ்மி

|| க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்” – Part 2

 

* காணபத்ய தந்த்ர மந்திரங்கள் *

அன்பர்களுக்கு தெரிவிக்க இருக்கும் மந்திரத்தின் ரிஷிகளில் முதலாமவர் கணபதியாவர் என்று முந்தய பதிவில் தெரிவித்திருந்தோம். இவரது சிறப்பு என்ன என்று பார்ப்போம்!

கணேஷ புராணப்படி இவர் யுகம் தோரும் அவதாரம் எடுக்கிறார்.

1. “மஹோத்கடர்” எனும் அவதாரத்தில் கஸ்யபருக்கும் அதிதி தேவிக்கும், 10 கைகளுடன், சிம்ஹ அல்லது யானை வாகனத்தில் சூரியகாந்தியுடன் க்ருதயுகத்தில் அவதரித்து அசுரர்கள் நராந்தகனையும், தேவாந்தகனையும் அழிக்கிறார்.

2. “மயூரேஸ்வர”ராக த்ரேதாயுகத்தில் சிவன், பார்வதிக்கு மகனாக 6 கைகளுடன், வெள்ளை நிறமுடையவராகவும், சிகி வாகனராக அவதரித்து சிந்து எனும் அரக்கனை வதைக்கிறார். அவதார நோக்கம் முடிந்தவுடன் தனது வாகனமான மயிலை தனது சகோதரர் ஆன சுப்ரமண்யனுக்கு கொடுத்தருள்கிறார்.

3. “கஜானனாக” சிவன் பார்வதிக்கு த்வாபர யுகத்தில், 4 கைகளுடனும், சென்னிர மேனியுடனும், மூஷிகவாகனாரூடராய் அவதரித்து சிந்தூராசுரனை வதித்து, கணேஷ கீதையையும் அரசன் வரேண்யனுக்கு அருளுகிறார்.

4. “தூம்ரகேதுவாக” கலியுகத்தில் புகை அல்லது சாம்பல் வர்ணத்துடன், நீலாஸ்வாரூடராக இரு அல்லது 4 கரங்களுடன் அவதரித்து பல அசுரர்களை அழிப்பார் என அருளப்பட்டுள்ளது.

“முத்கல” புராணப்படியும், “ஸ்ரீதத்வநிதி”ப்படியும் 32 கணபதி அவதாரங்கள் தெளிவாக்கப்பட்டுள்ளன. இவற்றில் பன்னிரு அவதாரங்கள் 12 ராசிக்கு உடையவர் என்றும் அவர் தம் ஆராதனையால் அந்த அந்த ராசிக்கு நற்பயன் சித்திக்கும் எனபது நாரதர் (நாரதமுனி) அருள் வாக்கு.

தந்திர க்ரந்தங்களில் இவரை விதிப்படி ஆராதித்தாலே ராஜதனம், ராஜ ஐஸ்வர்யம், சர்வ விக்னஹரம், சர்வ சத்ரு ஸ்தம்பனம் முதலியன லபிக்கும் என விளக்கப்பட்டுள்ளது.

இவை எல்லாவற்றிர்லும் மேல் “விக்னேஸ்வரி” என்று ஒரு அவதாரமும் உளது.

அடுத்த பதிவில் இவருடைய சில மந்திரங்களையும் ப்ரயோக முறைகளையும் கவனிப்போமாக.

ஒம்

“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |

ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||

சுபம்

இந்த வலைப்பூவில் குறிப்பிட்டிருக்கும் ப்ரயோகம், செய்முறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்

ஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு தேவையான மந்திரம், யந்திரம், தந்திரத்தை தகுதி அனுசரித்து அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan [at] yahoo [dot] com, அலைபேசி:- +91 92454 46956, Whats App:- +91 96774 50429

This entry was posted in அக்ஷய தனப்ராப்தி, அதிசய உண்மைகள், யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம், INCREDIBLE TRUTHS, Uncategorized. Bookmark the permalink.