“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்”– Part 1.

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||

லக்ஷ்மி

|| க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்” – Part 1.

இந்த தொடரில், “எவர் எவர் எதை எதை விரும்புகிறார்களோ அவை அவை அவர்கட்கு நிச்சயம் கிட்டும்” என்ற தலைப்பில் சில ரகசிய மந்த்ர, யந்திர தந்திர வழிபாடு முறைகளை விவரிக்க உள்ளேன். இந்த வழிபாடு முறைகள் “அதர்வண” வேதத்தில், “சௌபாக்யகாண்ட”ம் பகுதியில் விரிவாக உரைக்கப்பட்டுள்ளது.

இந்த மந்திரங்களை வைவஸ்வத மனுவிற்கு, அவர் தம் சமாதி நிலையில் ப்ரசன்னமானது என்றும், இந்த மந்திரங்கட்க்கு ஆனந்த பைரவர், கணகர், அங்கீரர், கஸ்யபர், வஷிஷ்டர், விஸ்வாமித்திரர் மற்றும் சம்வர்த்தனர் ரிஷிகளாவார். கணேசர், சிவன், பாலா, சம்வர்த்தனர் மற்றும் ஸ்ரீவித்யா பஞ்சதஸி போன்றவர் இம்மந்திரத்தின் தேவதைகளாவர்.

இந்த மந்திரங்கள் இருவகையாக பயன் தரும். அவையாவன, ப்ரதிகூலத்தை அனுகூலமாக மாற்றியும், அனுகூலத்தை வசீகரணமாக்கவும் செய்யும் என்பர்.

இவற்றின் பல ஸ்ருதியில் எவரொருவர் நித்யம் விடிகாலையில் விதிகட்குட்பட்டு பாராயணம் செய்கின்றனரோ அவர்க்கு விஸ்வத்தின் எல்லா ஐஸ்வர்யங்களும் வந்தடையும் என்றும், எல்லா வேதங்களின் பாராயண பலனும் கிட்டும் எனவும் அருளப்பட்டுள்ளது.

இத்தொடரில் வரும் சில மந்திரங்களுக்கு ஹோமம், தர்பணம் போன்ற விதிகள்  உண்டு. சில மந்திரங்களுக்கு ஜெபம் மட்டுமே போதுமானது.

இதை பாராயணம் அல்லது அனுஷ்டானம் செய்பவர், ஸ்ரீ வித்யா பஞ்சதசி உபதேசம் பெற்றவராக இருத்தல் வேண்டும் என்பது அவசியம்..

மந்திரங்களில் சொல்லப்பட்ட அளவு எண்ணிக்கையும் சொல்லப்பட்ட நாட்களிலும் முடித்தல் வேண்டும்.

ஒம்

“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |

ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||

சுபம்

இந்த வலைப்பூவில் குறிப்பிட்டிருக்கும் ப்ரயோகம், செய்முறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்

ஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு தேவையான மந்திரம், யந்திரம், தந்திரத்தை தகுதி அனுசரித்து அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan [at] yahoo [dot] com, அலைபேசி:- +91 92454 46956, Whats App:- +91 96774 50429

This entry was posted in அக்ஷய தனப்ராப்தி, யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம், ஹோமங்கள் and tagged , , , , , . Bookmark the permalink.