Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | புரோஹிதம் | Purohitham

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||

Sri Chakra

Sri Chakra

|| க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

“புரோஹிதம்”

பகலும் இரவும் எப்படி ஒரே தினத்தின் இரு பகுதிகளோ அது போலவே மந்திரத்தின் இரு பகுதிகளாம் நற்பலனும், தீப்பலனும். மந்திரங்கள் ஸ்வர சஞ்சார ரூபத்தால் ஆனது. ஸ்வரத்தோடு அனுஸ்வரம் சேரும்பொது உண்டாகும் அதிர்வலைகளின் விளைவுகளே மந்திரப்பயன். ஸ்வர்த்தோடு அபஸ்வரம் சேரும்போது விபரீத பலனையே தரும்.

இதனாலேயே கருணாமயனான இறைவன், ஸப்தகோடி மந்திரங்களையும் உணர்த்தி, அவைகளுக்கு எல்லாம், தனித்தனியே ஒரு கீலகம் எனும் பூட்டிட்டு, அதற்கு உத்கீலனம் எனும் சாவியையும் நம்மிடமே கொடுத்துள்ளான்.

அது மட்டுமா! அதற்கும் மேல் ஸஞ்சீவனம் எனும் முறையால், உபாசிக்கும் மந்திரங்கள் என்றுமே தோல்வியடையாமல் இருக்க வழி செய்துள்ளான்.

இவ்வளாவோடு இறைவன் தன் பணியை நிருத்திக் கொள்ளவில்லை. இந்த ஸப்தகோடி மந்த்ரங்களையும் பலிதமடைய செய்ய ஒரே ஒரு மாஸ்டர் திறவுகோலாக “சர்வ மந்த்ர யந்த்ர தந்த்ர உத்கீலனம், சஞ்சீவனம்” என்று ஒரு மஹா மந்திரத்தையும், விதியையும் அருளியுள்ளான்.

அதுவுமல்லாமல், மந்திரங்களுக்கு புரஸ்சரண விதி என்று ஒன்றும் உளது, மந்திரத்தை உத்கீலனம் செய்தால் மட்டும் போதாது, சாதனை செய்து அதில் தேர்வும் பெற வேண்டும். அதுவே புரஸ்சரண விதிமுறையாகும். அப்படி தேர்வடைந்தவர் செய்யும் மந்திரக் கிரியைகள் தான் உடனே பலன் கொடுக்கும். மற்றவர் ஒரு வேதிய குடும்பத்தவரானாலும் சித்திக்காத மந்திரங்களை பழகிய தோஷத்தால், விதிமுறைகளை அனுஷ்டிக்க கூடியவருக்கும் கூட மந்திரங்கள் பலிதமாகா! இன்று அது தான் நடந்துகொண்டு வருகிறது என்பது வருத்தமாக உளது.

மந்த்ரோத்கீலனம் செய்யாத மந்திரத்தினால் எப்பயனும் விளையாது, நல்லதும் சரி கெட்டதும் சரி.

மந்திர உத்கீலனம் செய்த மந்திரங்கள் அதற்குண்டான பலனை வெகு விரைவாக அருளும். அந்த மந்திரத்திற்குண்டான தேவ தேவதைகள் ப்ரசன்னமாகும், அபீஷ்ட பலன் நல்கும்.

குருவிடமிருந்து மந்திரம் பெற்றாலும், புரஸ்சரணம் எனும் முறைப்படி ஜெபம், ஹோமம், தர்ப்பணம், மார்ஜனம், மற்றும் ப்ரம்ம போஜனம் (ப்ராம்மண போஜனம்) ஸ்ரத்தையோடு, முறையோடு செய்வித்தாலே மந்திரம் சித்தியடையும். இதன் பிறகு, மந்திர ப்ரயோகம் செய்யும் பொழுதும் மந்திர ஜெபம், விதி, கவசம், சஹஸ்ரம், ஸ்தோத்ரம் என்று முறையோடு செய்யின், இஷ்ட கார்யங்கள் அனைத்தும் நிறைவேரும்.

மந்திரத்தினால் ஒருவருக்கு தீங்கு செய்ய முடியுமா என்றால் ஒரு விதத்தில் முடியும் என்றே சொல்ல வேண்டும். ஓருவர் தன் நலத்திற்காக ஒரு மந்திரத்தை பிரயோகம் செய்யும் பொழுது, அம்மந்த்ர உபாஸகர், எனக்கு, இவரால் கேடு உண்டாகிறது, அதை நிவர்த்திக்க என மந்திர ப்ரயோகம் செய்யும் பொழுது, மந்திரம் அருளாமல் என்ன செய்யும். இது நாமாக நமக்கு செய்து கொள்ளும் வினை. இதன் பயன் நம்மை பிற்காலத்தில் கண்டிப்பாக தாக்கும். ஏனென்றால், இங்கு நமது ஸ்வாதீனத்தால் நமக்கு எது நல்லது என்று நாமன்றோ தீர்மானிக்கிறோம், முக்காலமும் உணர்ந்த இறைவனல்லவே.

இன்று நாம் காணும் வைதீக விற்பன்னர்கள், எவ்வளவு பேர், அது தான் நமக்கு கார்யங்கள் செய்ய உதவும் புரோஹிதர்கள் இப்படி தேர்ந்தவர்கள் என்பது யான் அறியா ஒன்றாகும்.

யான் கண்டதில் சில. ஒரு புரோகிதர், பகுதி நேர புரோகிதர். பகலில் ஒரு அரசாங்க நிறுவனத்தில் பணி. விடுமுறை அல்லது விடு எடுத்துக்கொண்டு புரோகிதம் செய்வார். அவர் நமது சாஸ்திரங்களை ஒரு ஜெர்மானியரிடம் படித்திருப்பர் போலும். அவர் திருவாய் மலர்ந்தருளினால், கடா முடாவை விட்டால் வேரு ஒன்றும் வெளி வரா!.

இன்னும் சில இடங்களில் ஸ்ரீ ருத்ரம் தெரியாத சிவாச்சாரியர்களும் உண்டு. இவர்கள் எல்லாம் “பரம்பரை” சிவாச்சார்யார்கள்.

இன்னொருவர் ஆவணியில் அவிட்டம் வந்து பூணூல் மாற்ற அவரை அணுகினால், அவர்க்கு, “யக்ஞ்சோபவீதம் ப்ரம்மம் பவித்ரம்” (கவனிக்க – பரமம் அன்று) என்று மட்டும் சொல்லி தக்ஷிணை ரூ. 250 தலைக்கு என்று சுமார் 50 பேரிடம் இரு மணி நேரத்தில் கல்லா கட்டிவிடுவர். மற்றவற்றை இங்கு சொல்ல வேண்டாமே! இவர்கள் எல்லாம் “பர ஹித”த்திர்கு எப்படி அதிகாரிகளாவர்? “ஸ்வ ஹித”மே இன்றய விதி. ஸ்வஹிதரே இன்றய வைதீக வணிகர், புரோஹிதம், பர ஹிதமன்றோ!

நமது புரோஹிதர்களே “ரோஹிதர்களாக” இருக்கும்பொழுது, நமக்கு தீங்குகளுக்கு என்ன குறைச்சல் – அல்லவா? தயை கூர்ந்து சிந்திக்க கோருகிறேன்

சில வேத வித்துக்கள் இன்றும் பண்டைய பரிபூரணத்துவத்துடன், வித்வத்தாக, விதிவத்தாக கார்யங்களை நடத்துவர், ஆயின் அவர்களிடம் படாடோபமோ, பகட்டோ இருக்காது, அவர்களின் ஒரே பூஷணம் தேஜஸ் ஒன்றே, இவர்கள் அர்த்த ஆஸ்திக்காக வைதீகம் செய்வதில்லை, வைதீகத்திற்க்காக வைதீகம் செய்வர். (இந்த சில வேதவித்துக்களுக்கு எனது சத சஹஸ்ர கோடி ப்ரணாமங்கள் சமர்ப்பணம்) – ஆயின் அதை நம்மவர் தெரிந்துகொள்வதில்லை. INSTANT HOMA, INSTANT POOJA, INSTANT எல்லாம் என்பவரன்றோ நாம்.

 

“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |

ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||

சுபம்

இந்த வலைப்பூவில் குறிப்பிட்டிருக்கும் ப்ரயோகம், செய்முறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்

ஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு தேவையான மந்திரம், யந்திரம், தந்திரத்தை தகுதி அனுசரித்து அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan [at] yahoo [dot] com, அலைபேசி:- +91 92454 46956, whatsapp:- +91 96774 50429

This entry was posted in புரோஹிதம், மந்திரங்கள், ஒரு எச்சரிக்கை, மந்த்ர ஸ்வரூபம், ஸ்ரீ வித்யா தந்த்ரம்,, Uncategorized and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.