|| க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||
* * *
வலைப்பூ அன்பர்களுக்கு,
”மந்த்ர தீக்ஷை | Mantra Deeksha”
தீக்ஷையின் க்ரமங்கள் சிலது மட்டும்.
முதல் நாள் குருபக்தியுடன், வினாயகனின் மஹா மந்த்ரமும், பின் தேவி காயத்ரியுடன் மூல மந்திரமும் ஜெபிக்கவேண்டும். சாதகர் தான் பிறந்த நன்னாளில், சுப சமயத்தில் குருவின் அனுக்ரஹத்தோடு, தீக்ஷை பெறவும். ஸ்ரீ வித்யா உபாஸனை, தீக்ஷையற்றதாக இருந்தால், அது உபாஸிப்பவனை நரகத்தில் ஆழ்த்தும் என க்ரந்தங்களிலும் அனுபவ பூர்ணமாகவும் அறியப்படுகிறது.
அதோடு, 22 அக்ஷரமுள்ள காளீ மூலமும், ஸ்யாமாவித்யையும் அனுஷ்டித்தவராக சாதகர் இருக்கவேண்டும் என்கிறது க்ரந்தங்கள். காளி தாமஸ குணகாரி என்றும், ஷோடஸீ ரஜஸ குணகாரி என்றும் மஹா ஷோடஸி சாத்வி என்றும் கூறப்பட்டுள்ளது. ஸ்யாமா வித்யை அனுஷ்டிப்பதாலேயே ஸ்ரீவித்யா சித்தியடையும் எனவும் கூறப்பட்டுள்ளது.
Sri Chakra
ஹோமாக்னியின் முன், தீக்ஷா யந்திரத்தின் முன், கணபதி மந்திரமும், தேவி காயத்ரியும், ஸ்யாமா மந்திரமும், பின்னர் ஸ்ரீ வித்யா மந்திரமும் உபதேஸிக்கப்பட்டு, அதற்குண்டான ஹோம கார்யங்களையும் செய்யவேண்டும் என்கிறது க்ரந்தங்கள். உபதேஸம் பெற்றவர் அன்றிலிருந்து சிவ அம்ஸம் பொருந்தியவராவார் என்றும், சிவனுடய சான்னித்த்ய சக்தியின் உதவியாலேயே ஸ்ரீவித்யா அனுஷ்டிக்கப்படும் என்றும், அப்படியில்லாவிடில், உபாஸகர் / சாதகர் ஈடொணா கஷ்டங்களை அனுபவித்து நரகத்தில் விழுவார் என்றும் அறியப்படுகிறது.
இந்த வலைப்பூவில் குறிப்பிட்டிருக்கும் ப்ரயோகம், செய்முறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்