Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | தமிழும் மந்திரமும் | Mantra and Tamil

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

தேவி காமாக்ஷி அம்மன்

ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம:

க ஏ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம்

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

நமது ஹிந்து மதம் மிகவும் புராதனமானது என்கிறோம். அதை கட்டிக்காக்க நாம் என்ன செய்தோம்? உண்மையை உள்ளதை மறைப்பது மட்டுமே அன்றோ!

நமது மதம் புராதனமானதினாலேயே நமக்கு, பல ஸாதகர்கள், பல காலகட்டங்களில் செய்த ஸாதனைகளின் பயனாக, தாம் கண்டறிந்த ஸ்வரங்களை வகைப்படுத்தும் மொழி – ஆம் மொழி, தமிழாகட்டும், ஸமஸ்க்ருதமாகட்டும் உருவானது. அதன் மூலம், பல பல விஷயங்கள், வாய் மொழியாக, வழி வழியாக நம்மை வந்தடைந்தது, அதற்கும் முன், குருவானவர், தனது தவ வலிமையால், இன்று ஆங்கிலத்தில் TELEPATHY என்று அறியப்படுகின்ற எண்ண அலைகள் பரிமாற்றம் மூலமாகவே தமது எண்ணங்களை தமது சிஷ்ய பரிவாரத்திற்கு உணர்த்தியுள்ளனர். உதாரணம், குரு தக்ஷிணாமூர்த்தி மவுனமாகவே வேதம் உணர்த்தியது. ஆப்படி மவுனமாக வேதம் உறைத்தவர், கும்ப சம்பவராம் அகத்திய முனிக்கு – வடக்கிலிருந்து, தெற்கிற்கு புலம் பெயர்ந்தவருக்கு – தமிழ் மொழியை உபதேஸிக்க காரணம் எதுவாக இருக்க முடியும்? யாராவது விளக்க பணிவுடன் வேண்டுகிறேன்.

அந்த கும்ப முனியார், தமிழுக்கென லிபி, தமிழ் இலக்கியம் என்று எவ்வளவோ தமிழ் மொழிக்கும் தமிழ் மட்டும் அறிந்தோருக்கும் வேதம் விரிய வழி வகுக்கவில்லையா?

பின்னர் அவரே ஸ்வரமும், எழுத்தும் (குறியீடு), உச்சரிப்பும், பலனும் என மந்திரமாக தமிழையும் மாற்றவில்லையா?

திருமூலர் திருமந்திரமும், சொல்லும், பொருளும், எழுத்தும், அதன் இயல்பையும், உபயோகத்தையும் தமிழில் தானே விவரித்திருக்கிறது!

பர சிவனின் ஞானக்கண்ணின் ஞானப்பொறியாம், தக்ஷிண மூர்த்தி மூலமாக காமேஷ்வரனே தமிழை உருவாக்கி அகிலத்தில் அரங்கேற்றினார் என்றல்லவா பொருள் கொள்ளவேண்டும். இந்த அளவிர்க்கு தமிழின் மீதும் தமிழ் மக்களின் மீதும் வாஞ்சையுள்ள இறைவனின் கருணை எல்லோரையும் சென்று அடையவேண்டாமா!

உதாரணத்திற்க்கு: வாலை வணக்கம் எனும் பாலாம்பிகையின் தமிழ் செய்யுளில் முதல் பகுதியிலேயே, ஐம் க்லீம் சௌ என்ற பாலா பீஜம் உள்ளது, அதன் ந்யாசமும் உள்ளது. இதயத்தில் ஐம் என்றும், புருவ மத்தியில் க்லீம் என்றும், சிரஸில் சௌ எனவும் குறிப்பிட்டுள்ளதை காண்க.

ஐந்தரியெ ழிற்குமரி முந்துரவி செஞ்சுடர்

உந்தனித யத்திலுயர

இந்திரவில் சிந்துமொளி இதகிலீங் காரமென

இருபுருவ நடுவில்வளர

சந்திரனின் பாலொளிச்சௌமியத் தண்சுடர்

சுந்தரிநின் சிரசில்விரிய

வந்தருள்க முப்பீஜ மந்திரம தானதிரு

வாலைதிரி புரையழகியே!

இரண்டாவதில் அம்மையின் யந்திரம் விளக்கப்பட்டுள்ளது.

அட்டவிதழ்முளரியுள் எண்கோணவலயமிடை

ஆதிபரைகோணமொன்றின்

நட்டநடுவேஞான நிட்டையொடுவளர்யோக

நங்கைசிவ மங்கைபரையே

மட்டவிழ்க்கந்தமிகு மரவிந்தமலரிலமர்

மங்கலை சிவானந்தியே

இட்டமுடன் வரமருள் சிட்டருக்கெளிய திரு

வாலைதிரி புரையழகியே!

இந்த வாலை வணக்கப்பாடலின் பல ஸ்ருதி என்னவெனில்,

ஆயிநின் மூவெழுத் தாதிமந்திரமுமுன்

அருளொளிருமழகு முகமும்

தூயநிட்களையுனது  துயரறுகடாட்சமும்

தெளிவொடுன்னுபவர் வாழ்வில்

நோயறும் வறுமைகெடும் செல்வம் செழிக்குமதி

ஞானமும் நலமும் வளரும்

ஓயுமடியோடு கொடு வினைகளும், வாழ்கதிரு

வாலைதிரிபுரையழகியே!

இதுபோன்று எவ்வளவோ என் ஊனக்கண்ணிற்கு புலப்படுகின்றன.

நம்மால் இயன்றவரை நம்மவர்க்கெல்லாம் இவ்வொளியை பரப்புவோமே, அதன் காண் பிற மத ஆதிக்கத்திற்கு அணை போடுவோமே.

எண்ணத்திலும் எழுத்திலும் உள்ள பிழை அடியேனையே சாரும். பெருமையெல்லாம் இறைவனையே சாரும்.

மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ஜானி ஸ்துதிமஹோ;

ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ஜானே ஸ்துதிகதா: |

ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ஜானே விலபனம்;

பரம் ஜானே மாதா ஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||

சுபம்

This entry was posted in Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.