Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | INCREDIBLE TRUTHS | அதிசய உண்மைகள்

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||

தேவி லலிதாம்பிகை

|| க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

 

“INCREDIBLE TRUTHS | அதிசய உண்மைகள்”

 

இதுபோலவே, மேலை நாடுகள் விஷம் அல்லது மிகக்கொடிய உயிர் கொல்லி என்று அழைக்கும் ARSENIC & COMPOUNDS OF ARSENIC, நமது முன்னோர்களால், பக்குவப்படுத்தப்பட்டு, உயிர் காக்கும் மருந்துகளாக மாற்றப்பட்டு, VERY BROAD SPECTRUM ANTI BACTERIAL, ANTI FUNGAL, ANTI VIRAL, GENETIC DEFECTS மற்றும் பல தீய, கொடிய நோய்களுக்கு மருந்தாக, மாற்றப்பட்டு, நவபாஷாணம் என்று அழைக்கப்பட்டு, அவற்றில் இறைவனின் திரு உரு செய்து, மக்கள், அதன் அபிஷேக நீர் அருந்தினால் போதும், வியாதி, பெருவியாதி யாவும் தீரும் என்றுறைத்து, ஆன்மீகத்திர்க்கும், நீண்ட நோயற்ற வாழ்வு பெறவும் வழிவகை செய்தனர்.

இன்றும் மேலை நாட்டு மருத்துவத்தில், இம்முறையே பின்பற்றப்படுகிறது. உதாரணமாக. மிக மிக கொடிய நோய்களுக்கு, தடுப்பூசியாக, அந்த நோயின், கிருமிகளே, கொல்லப்பட்டு, அல்லது செயலிளக்க செய்து, நமது உடலில் மிக குறைந்த அளவு செலுத்தினாலே போதும், நமது உடல் அந்த நோய்க்கான எதிர்ப்பு சக்தியை தானே உண்டாக்கிக்கொள்கிறது.

ARSENIC மட்டுமல்ல, SULFUR எனப்படும் கந்தகம், MERCURY எனப்படும் சூதப்பாஷாணம் மற்றும் இவற்றின் கலவைகள் எல்லாமே, மேலை நாடுகளிலும் நம் நாட்டிலும் விஷம் என்று அறியப்பட்டாலும், நமது முன்னோர்கள், அவற்றின் தன்மையை மாற்றியமைக்கும் வித்யையை அறிந்து அறிவித்து சென்றுள்ளனர்.  நமக்குத்தான் அவை தெரியவில்லை, ஏனெனில் நமக்கு அவர்கள் உபயோகித்த காட்டுமிராண்டி மொழி தெரியாது. நமக்கு தெரிந்ததெல்லாம், அயலார், அன்னியர், நம் நாட்டை ஆள வந்தவர்கள், அவர்கள் தேவைக்கு, நம்மை அடக்கியாள, நமக்கு கற்றுக்கொடுத்த அவர்கள் மொழியும், அவர்களது கலாச்சாரமேயாகும்.

நம் முன்னோர்கள், இன்று கதிர்வீச்சு என்று உணரப்படுகிர RADIATION ஐ பற்றியும் நன்கு அறிந்திருந்தனர் என்பதற்கு உதாரணமாக, அக்காலத்திய இறைவ இறைவியரின் திரு வடிவங்கள் வடிக்கப்பட்ட கற்களே எனலாம்.  ஒரு குறிப்பிட்ட வகை திருமேனிக்கு, ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து கல் எடுக்கப்பட்டு, அவை வடிவமைக்கப்பட்டன. ஏனெனில், இயற்கையிலேயே, கல்கள் கதிர்வீச்சு உடையது என இன்றைய விஞ்ஞானிகள் ஆராய்ந்து கண்டு வியக்கிறார்கள் (அ) விளக்குகிறார்கள்.  இதுவும் நம் முன்னோர்களின் காட்டுமிராண்டித்தனமன்றோ!

ஒலி அலைகளின் செயல்பாடுகள், மேலை நாட்டில் முதலாம் உலகப்போர் நிகழ்ந்த பொழுது தான், சில பல வியக்கத்தகு நிகழ்வுகளாலேயே வெளிக்கொணரப்பட்டது.  படைவீரர்கள், பயணிக்கும்போது, பாலங்கள் இடிந்தன, பல ஆராய்ச்சிக்குப்பின் அவை படை வீரர்கள் நடக்கும்பொழுது ஏற்ப்பட்ட ஒலி அதிர்வுகளால் என அறியப்பட்டது. இன்று அதே ஒலியலைகள், SONOGRAPH எனப்படும் கருவிகளால், உடலினுள் உள்ள உறுப்புகளை சோதிக்கவும், மூத்திரப்பை கல் உடைக்கவும், இன்னும் பலவாராகவும், பலவிதமாகவும் கையாளப்படுகின்றன.  ஆயின், நமது முன்னோர்களான காட்டுமிராண்டிகள், அவற்றை மந்திரமாக உபயோகித்து அதன் பயனாக பல வித பலன் பெற்றனர்.

இத்தொடரில், ஒலி அலைகளை நம் சான்றோர் கையாண்ட முறைகளையும், வடிவையும், பலனையும் எனது சிற்றறிவிற்கு அறிந்ததை தங்கள் முன் வைக்கிறேன்.  சோதித்து, சாதித்து நலம் பெருவீரே.

 

“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |

ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||

சுபம்

இந்த வலைப்பூவில் குறிப்பிட்டிருக்கும் ப்ரயோகம், செய்முறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்

ஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு தேவையான மந்திரம், யந்திரம், தந்திரத்தை தகுதி அனுசரித்து அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan [at] yahoo [dot] com, அலைபேசி:- +91 92454 46956, whatsapp:- +91 96774 50429

This entry was posted in அக்ஷய தனப்ராப்தி, அதிசய உண்மைகள், ஆலய வழிபாடு, உக்ர தெய்வ வழிபாடு, குண்டலினி, சிவ மானஸ பூஜை, மந்த்ர மாத்ருகா புஷ்பமாலாஸ்தவம், முதுமையிலும் இளமை, INCREDIBLE TRUTHS, Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.