Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | INCREDIBLE TRUTHS | அதிசய உண்மைகள்

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||

தேவி லலிதாம்பிகை

|| க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

”INCREDIBLE TRUTHS | அதிசய உண்மைகள்”

இந்த பதிவுகளை வாசிக்குமுன் ஒரு சிறு முன்னுரை.

ஆதியில் பிறந்தது ஓசைகள் / சப்தங்கள் எனும் அதிர்வு / ஒலி அலைகளேயாகும்.  இந்த ஒலிகளை உருவகப்படுத்த அல்லது உணர்விக்க பிறந்ததே படக்குறியீடுகள் எனும் ஒருவகை லிபிகளாகும்.  ஆதி மனிதன் இக்குறியீடுகளை வரைபடங்களாகவே உருவகப்படுத்தினான். அவனது காலத்தில், அவனின் அன்றய சமூகத்திற்கு அவை போதுமானதாக இருந்தது. காலப்போக்கில், வரைபடங்களின் எல்லைக்குள் உள்ளவைகள், ஒருவனின் விகசித்த எண்ணங்களை முழுவனுமாக வெளிப்படுத்த போதுமானதாக இருக்கவில்லை. காரணம், அக்கால மனிதனின் வளர்ச்சியடைந்த ஒலி அதிர்வு உணர்வுகள் அல்லது வளர்ந்த ஒலி அதிர்வு உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டிய தேவைகள், வரை படங்களின் எல்லைக்குள் அடங்கவில்லை.  ஆகையால், வேறு குறியீடுகள் தேவையானது, இந்த தேவைகளிலிருந்து பிறந்ததே லிபி அல்லது குறியீடுகள் என்பதாகும். இப்படியாக ஸ்வரம் அல்லது ஒலியின் அதிர்வுடளிலிருந்து அவற்றை குறிக்கும் லிபி, மொழி என்பவைகள் வளர்ச்சியடைந்தன.

ஸ்வர / சப்த / ஒலி அலைகள் ஒரு குறிப்பிட்ட வரையரைக்குள் இருக்கும்பொழுது மனிதர்க்கு, மானிடகுலத்திர்க்கு நலம் நல்குவதாகவும், அக்குறிப்பிட்ட எல்லை மீறிய ஒலிகள் நலமின்மையையும் நல்குவதை நம் முன்னோர்கள் தமது அனுபவ மூலமாக கண்டறிந்தனர். அவற்றை அவர்கள் இசை மற்றும் ஓசை என பெயரிட்டு அழைத்தனர். இவற்றில், மிக வேகமாக பயனளிக்கும் ஒலி அதிர்வுத்தொடரை மந்திரங்கள் என்றும், தாமதமாக பயனளிப்பவை ஸ்தோத்திரங்கள் அல்லது பாமாலை எனவும், மற்றவை தகவல் பரிமாற்ற மொழி என்றும் பெயரிடப்பட்டன எனவும் அறியலாம். இவ்வகை சப்தங்களில் அடங்காத இயல்பை மீறிய ஒலிகளை ஓசைகள் என அழைக்கப்பட்டன.

இதில் இன்னொரு விஷேடம் என்னவெனில், எல்லா மொழிகளிலுமே மந்திரங்கள் எனும் வெகு விரைவாக பலனளிக்கும் ஒலி அதிர்வுக் கோவைகள் உண்டு. இதனையெல்லாம் கண்டறிந்து முதன் முதலில் உலகிற்கு அறிவித்தவர்கள், இறைவனின் தூதுவர்கள், முனிவர்கள், சித்தர்கள், தீர்க்க தரிசிகள் என பலவாரான பெயர்களில் அவர், அவர்தம் மொழிகளில் அழைக்கப்பட்டனர். ஏன், இறைவன் என்றே கூட அழைக்கப்படும் பெரும் பேறும் பெற்றனர்.

நம் பாரதத்தில், முன்னோர்கள், ஒலி அதிர்வு மற்றும் அவற்றின் விளைவு / தன்மையை மட்டும் ஆராயவில்லை, இயற்கையியல், கணிதவியல், வானவியல், வேதியல், மருத்துவ இயல் என எல்லா வகை பிரிவிகளிலுமே, கை தேர்ந்த வித்தகராயினர். அவர்கள், தமது கண்டுபிடிப்புகளை மனித குல நன்மைக்காக பிற்கால மனித குல வாரிசுகளுக்கும் உதவும் வண்ணம் அவற்றை திறன் படைத்த செய்யுள்களாக அவர் அவர்கால வழக்கப்படி சுவடிகளாகவோ அல்லது வாய் மொழியாகவோ, அம்மொழியை அக்கால இலக்கண மறபுப்படி நன்கு அறிந்த எவரும் அறிந்துகொள்ளும் வண்ணமே விட்டுச்சென்றுள்ளனர்.

இன்று நாம், அக்கால மொழி, நடையுடை, கருத்துப்பரிமாற்றம் மற்றும் வாழ்க்கை முறை பற்றி அறியாது, அவற்றின் முக்கியத்தை அறியாது, ஏதோ காட்டுமிராண்டித்தனம் என்று நம்மை நாமே முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறோம்.

உதாரணத்திற்கு, ஆங்கிலத்தில் ATOM எனும் கூற்றினை கவனிப்போம்.  பொதுவாக ஒரு பொருளின் (அணு) ATOM என்பது PROTON, NEUTRON மற்றும் ELECTRON என்பவைகளின் கூட்டமைப்பாகும். அதையே நமது முன்னோர்கள் கூற்றில் ப்ரம்மா, விஷ்ணு, மஹேஷ்வரன் என்று ஏன் அழைத்திருக்க கூடாது.  ATOM என்பதை பராசக்தி என்று அழைத்தால், PROTON ஆக்கும் கடவுளென அழைக்கப்படும் பிரம்மமாகும், NEUTRON காக்கும் கடவுளான விஷ்ணுவுமாகவும், ELECTRON சக்தியான (சம்ஹார சக்தியான) சிவனாகவும் கொள்ளலாமன்றோ!  இரண்டு அணுக்கள், தமது இணைப்பிலுள்ள ELECTRON என்று அறியப்படும் வெளிச்சுற்றில் உள்ள சக்தியை மாற்றியமைக்கும்போது அப்பொருள் வேறு பொருளாக அமைகிறது. உதாரணத்திற்கு, இரண்டு OXYGEN அணுவும், ஒரு HYDROGEN அணுவும் கூடும்போது நமக்கு WATER எனப்படும் நீர் கிடைக்கப்பெறுகிறோம்.

அணுக்களை சேர்க்கும்போதும், பிளக்கும்போதும் மிக அதிக வேகத்தன்மையுள்ள சக்தி வெளிப்படுவதையே இன்று அழிவுபூர்ண ஆயுதங்களாகவும், ஆக்கபூர்வமான அணு உலைகளாகவும் உபயோகிக்கின்றனர்.

அடுத்த பதிவில் முன்னுரையை முடித்து பல ஸ்வரத்தொடரையும், உபயோகிக்கும் முறையையும், அதன் பலனையும் இயன்ற அளவில் விளக்குகிறேன்

 

“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |

ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||

சுபம்

இந்த வலைப்பூவில் குறிப்பிட்டிருக்கும் ப்ரயோகம், செய்முறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்

ஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு தேவையான மந்திரம், யந்திரம், தந்திரத்தை தகுதி அனுசரித்து அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan [at] yahoo [dot] com, அலைபேசி:- +91 92454 46956, whatsapp:- +91 96774 50429

This entry was posted in அதிசய உண்மைகள், ஸ்ரீ வித்யா தந்த்ரம்,, INCREDIBLE TRUTHS, Uncategorized and tagged , , , , . Bookmark the permalink.

1 Response to Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | INCREDIBLE TRUTHS | அதிசய உண்மைகள்

  1. Sridhar. N says:

    Miga miga sreshtamaana thagaval.

Comments are closed.