Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | அக்ஷய தனப்ராப்தி

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||

ஸ்ரீ லலிதாம்பிகை

ஸ்ரீ லலிதாம்பிகை

|| க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

“அக்ஷய தனப்ராப்தி”

சில வருடங்களுக்குமுன், என்னை ஒருவர் அணுகி, தனக்கு ஏற்பட்ட அனானுகூலங்களையும், தோல்விகளையும், அதனால் தான் வாழ்க்கையில் விரக்தியடைந்ததையும், வேறு வழியின்றி வாழ்க்கையை முடித்துக் கொள்ள எண்ணுவதாகவும், முடிவில் என்னை அணுகியதாகவும் கூறினார்.

நானும் அவரிடம் அவரது ஜாதகத்தை கணித்து, ஏதாவது எளிமையான பரிகாரம் இருப்பின், அதை உபதேசிப்பதாக கூறி, அவரது விபரங்களை பெற்றுக்கொண்டேன்.

அவருடைய ஜாதக பரிசோதனை என்னை மிகவும் துயரத்தில் ஆழ்த்தியது, அவருடய பாவ சங்க்யை மிக அதிகம் எனவும், முன்னேரும் வாய்ப்புகள், ஜாதகப்படி அவருக்கு இல்லை எனவும் கணிப்புகள் உணர்த்தின.

ஆயினும், அவர்பால் ஏற்பட்ட அனுதாபத்தாலும், அவர்தம் நற்குணங்களாலும் ஈர்க்கப்பட்டு, அவருக்கு ஏதாவது நன்மை பயக்கவேண்டும் என, அம்பிகையை வேண்டி உபாசிக்கலானேன். 9 நாட்கள் ஆயின, 9ம் நாள் கனவில் எனது குருநாதரின் உபதேசம் அருளப்பெற்றேன். அப்படி உபாசித்த யந்திர பிரசாதத்தை அணிபவர் எவ்வளவு தாழ்வாக இருந்தாலும், அவருடைய பிறவிப்பயன் பரிவர்த்தனைக்குள்ளாகும், நாளடைவில் அவர் எல்லாவிதத்திலும் மேன்மையடைவார் என்று அருளப்பட்டேன்.

இந்த யந்திரம் நம்மை சகல கிரக தோஷ உபாதையிலிருந்தும் விடுவித்து இஷ்ட கார்ய சித்தி ஏற்படுத்தித்தரும், மேலும் செய்தொழிலில் மேன்மை. தன-சம்விருத்தி, பெரும்புகழ், பதவி, அனுகூலம், வியாபாரம், உத்தியோகம் ஆகிய எல்லாத்துறைகளிலும் தனலாபத்தையும், மன ஆசைகளையும் மிக சுலபமாக நாம் அடைய வழிவகை செய்யும், துர்மரணம். தீய ஆவிகளின் தொல்லை. செய்வினை தோஷம். முன்னோர்களின் சாபம். கர்ம வியாதி ஆகிய சகலமும் இந்த யந்திரத்தால் தீரும், இதில் உள்ள மகா விஜய தன ஆகர்ஷண மஹாமந்திர பிரயோகத்தின் மகிமை, பணம். பதவி அந்தஸ்து ஆகியவற்றை ஈர்த்து தரவல்லது, இதை எந்த வயதினரும் எந்த பாலினரும் உபயோகப்படுத்தலாம் என்றும் அருளப்பட்டேன்.

அதன்படி, தேவையான பலவிதமான திரவியங்களையெல்லாம் சேகரித்து, உபாசனைக்கு உபதேசிக்கப்பட்ட நாளில், வேளையில் ஹோமித்து, அதன்பின், 90 நாட்கள், காலை மாலை இரு வேளையிலும், ஸ்னான வந்தன இத்யாதிகள் முடித்து, உபதேஸிக்கப்பட்ட மந்திரத்தை உருவிட்டு, பின்னர் புரஸ்சரணை செய்து, அவருக்கும், அவர்போல் மற்றும் சிலருக்கும் அணியக்கொடுத்தேன்.

மீண்டும் அவர்கள் என்னை சந்திக்க வந்த சமயம், ஒருவர், தம் புது மனை புகுவிழாவிற்கு அழைப்புடனும், இன்னொருவர், தமக்கு ஒரு மாதத்திலேயே தாம் விரும்பிய பணி வேறு ஊரில் கிட்டியதாகவும், இன்னொருவர் தமது தொழிலிலும் அரசியலிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும், இன்னும் பலர் பலவிதமான வியக்கத்தகு நற்செய்திகளுடன் வந்தனர்.

அதன்பின்தான் யந்திரங்களுக்கு இருக்கின்ற முழு சக்தியை நான் உணர்ந்து கொண்டேன், குடும்பத்திலோ. அரசியலிலோ. பொருளாதார பலத்திலோ. ஏன்? ஜாதக அமைப்பிலும் கூட எந்த விதமான பின்பலமும் இல்லாவிட்டாலும் வெறும் மந்திரம், யந்திரம் இவைகளின் சரியான பிரயோகத்தால் / உபயோகத்தால் ஒரு நரியைக்கூட பரியாக்கிவிடலாம் என்ற அம்பிகையின் அனுக்கிரக சக்தியை எண்ணி எண்ணி வியக்கிறேன்.

“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |

ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||

சுபம்

இந்த வலைப்பூவில் குறிப்பிட்டிருக்கும் ப்ரயோகம், செய்முறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்

ஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு தேவையான மந்திரம், யந்திரம், தந்திரத்தை தகுதி அனுசரித்து அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan [at] yahoo [dot] com, அலைபேசி:- +91 92454 46956, whatsapp:- +91 96774 50429

This entry was posted in அக்ஷய தனப்ராப்தி, ஸ்ரீ வித்யா தந்த்ரம்,, Uncategorized and tagged , , , , . Bookmark the permalink.