Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | முதுமையிலும் இளமை – 1

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||

ஸ்ரீ லலிதாம்பிகை

ஸ்ரீ லலிதாம்பிகை

|| க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

”முதுமையிலிருந்து இளமை”

 

முன் பதிவில் கூறியவை யாவும் முதுமையிலிருந்து இளமையை உடல் ரீதியாக அடையும் வழியாகும்.

நாம் குறைவின்றி, நிறைவோடு வாழ முதலாவது நோயற்ற உடல், உற்சாகமான உடல் நமக்கு அமையவேண்டும். நோய் கண்டிருப்பின் அது பின் – விளைவிகளில்லாது குணப்படுத்துதல் வேண்டும்.

இப்பதிவில் நோய் கண்டபின் அதை போக்கிக்கொள்ளும் விதம் பற்றி சிறிது சிந்திப்போமா!

நமது உடலின் கிரியைகளின் பிரதிபலிப்பு நமது உயிர் நாடிகளிலும், அதன் சந்திப்புகளிலும் சில பேதங்களை உண்டாக்கிவிடும். ஒரு வழியில் அது நமது உடலின் செயல் தன்மையையும் மாற்றிவிடும். இதன் விழைவாகவே பிணிகள் நமது உடலை பாதிக்கின்றன.

ஆகையால் நமது உடலை பேண, உயிர் நாடியையும் பேணவேண்டியுள்ளது.

ஒரு சிறு மருத்துவம், மிக எளிமையான மருத்துவம்: வியாதி எதுவாக இருப்பினும், என்னிலையில் இருப்பினும் இதை அனுசரிக்கலாம்.  இது ஒரு மூலிகை தேனீர் என்று கூட கூறமுடியாது. இந்த தேனீரை காலையும் மாலையும் சுமார் 30 மில்லி லிட்டர் அளவு உட்கொண்டால் போதுமானது.

உடலை பாதிக்கும் எல்லா நோய்களும் – தலை முடியிலிருந்து கால் நகம் வரை – இந்த தேனீர் அருந்துவதால் விலகும். நம்பிக்கையும், விடாமுயற்ச்சியும் இருந்தால் போதுமானது.

 செய்முறை:

சம அளவு வில்வ இலை, சுக்கு, மற்றும் இதனோடு ஒரு நாவல் இலை, சிறிது வேப்பிலை இவற்றை ஒன்றாக எடுத்து இடித்து சுமார் 200 மில்லி லிட்டர் நீர் விட்டு (சுனை நீராக இருப்பின் மிக நல்லது) சுனை நீர் அல்லது, சுத்தமான க்ளோரின் அல்லது ஃப்ளோரின் கலப்பில்லாத நன்னீர் சேர்த்து சிறு தீயில் கொதிக்க வைத்து 100 மில்லியாக வற்றியபின் பருகும் சூட்டில் 30 மில்லி அருந்துவது. கவனம்: அதிக சூட்டில் கொதித்த தேனீரில், தாவரங்களின் இயற்கை எண்ணைகள் ஆவியாகிவிடும்.

இந்த தேனீரின் குணமானது, தங்களின் எல்லா நோய்களையும் உ: ரத்த அழுத்தம், நீரிழிவு, தாங்கொணா தலைவலி, பெண்களின் தாங்கொணா இடுப்புவலி, நெஞ்சு வலி, இதய நோய், முட்டி வீக்கம், நீர்க்கட்டி, நீரிழிவில் அல்லது கால்களின் நீர் தங்குவது போன்ற பல வியாதிகளை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரலாம் அல்லது குணப்படுத்தலாம்.

நம்பிக்கை உள்ளவர் செய்து பாருங்கள், உங்கள் அனுபவத்தை இவ்வலைப்பூவில் பகிர்ந்துகொள்ளுங்கள்

அடுத்த பதிவில் ஒரு முறை பங்கெடுத்து உங்கள் முன்-வினைப் பயன்களை போக்கும் முறையும், ஒருவர் தமது இறுதி காலம் வரை பிணியின்றி நலமுடன் வாழும் வழிகள் பற்றி தெரிவிக்க இருக்கிறேன் என்பதை இதன் மூலம் பணிவன்புடன் தெரிவிக்கிறேன்

 

“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |

ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||

சுபம்

இந்த வலைப்பூவில் குறிப்பிட்டிருக்கும் ப்ரயோகம், செய்முறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்

ஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு தேவையான மந்திரம், யந்திரம், தந்திரத்தை தகுதி அனுசரித்து அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan [at] yahoo [dot] com, அலைபேசி:- +91 92454 46956, whatsapp:- +91 96774 50429

This entry was posted in முதுமையிலிருந்து இளமை, முதுமையிலும் இளமை, Uncategorized and tagged , , , . Bookmark the permalink.