Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | முதுமையிலும் இளமை

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||

ஸ்ரீ லலிதாம்பிகை

|| க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

“முதுமையிலும் இளமை”

 

சித்திரை நன்னாளில் எனது இனிய நல்வாழ்த்துக்கள் எல்லோருக்கும் உரித்தாகுக.

கடந்த சில மாதங்களாக உபாஸனையில் என்னை அதிகம் ஈடுபடுத்திக்கொண்டு சில கேள்விகளுக்கு பதில் தேடினேன், விடையும் கிட்டியது. அவற்றில் சில இங்கு சில பகுதிகளாக இடுகிறேன்.

இன்றய மனித வாழ்வில் சில இன்றியமையாதவையாகிவிட்டன.  அவைகளை நாம் இன்றய கலாச்சாரம் அல்லது கால கட்டம், பரிணாமம் என்கிறோம்.

இவற்றில் ஒன்று தான் வியாதி. மற்றொன்று யான் அறிந்தவரை தேவைகளுக்கு ஈடுகொடுக்க தேவையான சம்பாத்தியம், பணமோ பொருளோ அல்லது மற்றொன்றோ!

 

முதல் பிரிவு:- வியாதி இருவகைப்படும்.

 

வினைப்பயன், உடலின் உள்ளிருந்து உண்டாவது, உடலுக்கு வெளியிலிருந்து உண்டாகுவது. உதாரணம்: சர்க்கரை நோய் எனும் டையாபெடிக்ஸ், உள்ளிருந்து உண்டாகும் நோய். அடிபட்டு காயம் வெளியிலிருந்து உண்டாகுவது, அது போல் கட்டிகள் எனப்படுபவை உள்ளிருந்து உண்டாகுவதே, அதன் ஒரு வகையே புற்று என்றும் கூறலாம்.

மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே என்றும் இளமையாக இருக்க வழிகளை தேடியிருக்கிறான். சிலர் அதில் வெற்றியும் அடைந்துள்ளனர், பலர் தோற்றும் உள்ளனர்.

 

வெற்றி பெற்றவர்கள், இரு வழிகளை பின் பற்றினர்.

 

ஒன்று நாதரூபம், மற்றொன்று ந்யாச ரூபம், இங்கு ந்யாச ரூபம் என்பது இந்திய வழி யோகமார்க்கத்தை குறிக்கும். மற்றொன்று ஒலி அலைகள் மூலமாக – இதை மந்திரங்கள் மூலமாக எனலாம்.

ஓரளவிற்கு இரண்டாவது வழியில் வெற்றி கிட்டியதால் அவற்றை இவ்வலையில் இடுகிறேன்.

நோய் விரட்டுவதில் வெற்றி நிச்சயம் உள்ளது, நோய் வராமல் தடுப்பது, பண அல்லது பொருள் வரவு இவற்றிலும் வெற்றி நிச்சயம் உள்ளது.

உதாரணம்: கேச்சரி முத்திரை, இதை உபயோகித்து நமது தேகத்தில் உள்ள உறைந்து போன பினியல் சுரப்பியை சிறிது சிறிதாக பணியெடுக்க வைப்பது, இது யோகா முறையாகும். வெகு நாள் பயிற்ச்சிக்குப்பின் இதில் ஒரளவிற்கு வெற்றியடையலாம்

வெற்றியடைந்த யோகிகள் / யோகினிகள் / முனிகள் / ரிஷிகள் சோமரசம் எனும், பினியல் சுரப்பியின் அமிர்தத்தை உண்டு பல ஆயிரம் ஆண்டுகள் உடலோடு, உயிரோடு, பிணியின்றி, பசியின்றி, குறையின்றி இருப்பர்.

க என்றால் ஆகாசம், சரி என்றால் சஞ்சரிப்பது என்று பொருளாகும். இந்த முத்திரையை உபயோகிக்கும் பொழுதும் சரி, நாம் கூறும் வழியிலும் சரி சில உணவுக் கட்டுப்பாடுகள் அவசியம் உள்ளன. இவை பின்னர் விளக்கப்படும்.

இரண்டாவது வழி: சப்த அல்லது ஒலி அலைகளின் தன்மை, அதிர்வுகள் மூலம் நமது தேகத்தில் உள்ளடைந்த நச்சு பொருட்களை வெளியேற்றுவதும், உடலை பேணுவதும், உயிர் சக்கிரங்களை தூண்டுவதும், கடைசியில் பினியல் சுரப்பியை முழுவனும் தூண்டி என்றும் இளமையை பேணுவதும் ஆகும்.

மிக உன்னத நிலையை அடைந்தால், நமது உடலானது, தன்னை தானே புதுப்பித்துக்கொண்டு நமது முதுமையை விரட்டி இளமையை திருப்பித் தரும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. 

இந்த கோணத்தில் எனது முயற்ச்சிகள் ஆரம்ப முதலே அதாவது கடந்த 50 ஆண்டுகளாக தொடர்ந்தன.  அவற்றில் சிலவற்றை வரும் பதிவுகளில் தங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.

இந்த பதிவுகளில் தங்களிடம் பகிர்ந்துகொள்ளும் சாதனைகளை என்னோடு சேர்ந்து இலவசமாக சாதித்து பயனடைய விரும்புபவர்கள், தயைகூர்ந்து என்னை மின்னஞ்சல் மூலமாக தொடர்புகொள்க, அல்லது இவ்வலைப்பூவில் COMMENT ஆக எழுதுக.

 

“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |

ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||

 சுபம்

இந்த வலைப்பூவில் குறிப்பிட்டிருக்கும் ப்ரயோகம், செய்முறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்

ஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு தேவையான மந்திரம், யந்திரம், தந்திரத்தை தகுதி அனுசரித்து அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan [at] yahoo [dot] com, அலைபேசி:- 92454 46956, whatsapp:- 96774 50429

 

This entry was posted in அக்ஷய தனப்ராப்தி, குண்டலினி, முதுமையிலும் இளமை, ஹோமங்கள், Uncategorized and tagged , , , , , , . Bookmark the permalink.

1 Response to Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | முதுமையிலும் இளமை

  1. swarnamalya says:

    very different and interesting to read. May be a modern version of kayakalpam I think.

Comments are closed.