Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | அக்ஷய தனப்ராப்தி – 1 | UNCOUNTABLE WEALTH – 1.

அருட்திரு வில்வநாதீஸ்வரர், மூலவர்

அருட்திரு வில்வநாதீஸ்வரர், மூலவர்

வலைப்பூ அன்பர்கள் அனைவருக்கும் மகர சங்க்ரமணம் (அ) பொங்கல் நல் வாழ்த்துக்கள். Sivan T

தனுர் மாதத்தில் அனுஷ்டானம் மட்டுமே என்ற அறிவுரைக்கு பின் இன்று பதிவிடுகிறேன். இன்றிலிருந்து மற்றேல்லா பூஜை முறைகளையும் வெளியிட எல்லாம் வல்ல இறைவன் அருள்வாராக.

அருளும் பொருளும் அள்ளி வழங்கும் அக்ஷயனான, பண்டைய காலத்து திரு வில்வ வன நாதனான, வல்லவ ராயர்கள் வம்ஸ குலதெய்வமான திருவல்ல நாதனான இன்றைய திருவல நாதன் (அதாவது 1950க்கு பின்) தாழ் பணிந்து சில க்ஷேத்ர விஷேஷங்கள் இங்கே. (வல்லவராயன், வந்தியத்தேவனும் ராஜராஜ சோழனும் சமகாலத்தியர் அன்றோ!)

இந்த க்ஷேத்ரம் முக்தி ஸ்தலம் என பெயர் பெற்றது. அக்ஷயனான சிவனின் க்ஷேத்ரம் முக்தி அருளுகிறது என்றால், எதிலிருந்து?

மனித ஜென்மத்தின் தேவைகள் அனைத்திலிருந்தும் முக்தி. அப்படியென்றால், ஒரு பக்தன் ஏழை என்று எடுத்துக்கொள்வோம். அந்த பக்தன் தனது ஏழ்மைக்கு முக்தியை வேண்டினால், அவன் ஏழ்மை நிலை முக்தியடைந்து செல்வந்தனாவான் அன்றோ!

அல்லது ஒரு பக்தனுக்கு வியாதிகளில் அவஸ்தை என்றால், அவன் அந்த வேதனைக்கு முக்தி வேண்டி வியாதிகள் நீங்கி, ஆரோக்கியமாக இருக்கலாம் அன்றோ!

இப்படியே, சந்தான பாக்யம், சம்ஸார பாக்யம், சுக-சௌக்யம், நில – புலன், சொத்து – சுதந்திரம் என அடுக்கிக்கொண்டே போகலாம்.

இகலோகத்திலும், பரலோகத்திலும் வேண்டும் அனைத்திலும் முக்தியை வாரி வழங்கும் க்ஷேத்திரம் இது.

இந்த க்ஷேத்திரத்தில் சிறிது வித்தியாசமாக வேண்டினால் போதுமானது, அக்ஷயனின் அருளும், அம்பிகையின் பேரருளும் ஒருங்கே வந்து சேரும்.

 

–இன்னும் வரும்

 

சுபம்

This entry was posted in அக்ஷய தனப்ராப்தி, ஆலய வழிபாடு, உக்ர தெய்வ வழிபாடு, குண்டலினி, சிவ மானஸ பூஜை, திருவிளக்கு பூஜை, தேவி மூகாம்பிகை, நிகழ்வுகள், லகு ஷோடசோபசார பூஜை, ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம், ஹோமங்கள், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.