Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | கவனிக்க | Take Note

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

ஸ்ரீ லலிதாம்பிகை

ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம:

க எ இ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம்

வலைப்பூ அன்பர்களுக்கு,

கடந்த மூன்று வருடங்களாக நடந்த திருவலம் அருட் திரு வில்வ வன நாதர் (வில்வநாதர்) ஆலய திருப்பணிகள் இறையருளால் இனிதே முடிவுற்று 16, 17, 18 – 11 – 2012 அன்று மஹா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடந்தேறியது.

18 – 11 – 2012 அன்று ஒரு லட்சத்திற்கு மேல் அன்பர்கள் கலந்துகொண்டு இவ்விழாவினை சிறப்பித்தருளினர். அன்பர்களுக்கு அனேகனேக நலன் களையும் வில்வநாதன் அருள்வாராக.

இந்த க்ஷேத்திரத்தின் சில சிறப்புக்கள். இங்குள்ள மூலவரை “விதியோடு பெருக்கன்று பெருக்கின், பெருக்கெடுக்கும்” என்ற  அருளாசிக்கிடங்க, கடந்த மூன்று வருடங்களாக நீர்வளம் செழித்து இந்தப்பகுதி பசுமையாக உளது. விளை நிலங்களில் புற்றீசலாக பெருத்திருந்த செங்கல் சூளைகள் இப்போது காணக்கிட்டவில்லை.

மற்ற அருள் வாக்கு சிறப்புகள் அடியேனுக்கு இங்கு கிட்டியது.

கனி பெற்றவர்:

விதியோடு தாழ்பணிவோர் விதி மாற்றி அருள்வோம்!

வில்வ நாதர்.

விதியோடு செவ்வாயன்று முதல் ஆரத்தி கண்டு, தேவைகளை முறையிட்டு, நற்-சந்தணக்காப்பு இடுவதாக வேண்டினால், சடுதியில் எக்குறையும் தீர்த்தருளுவேன்!

அம்பிகை

விதியுடன் வெள்ளிதோரும் ஸஹஸ்ர ரஹஸ்யம் பாராயணம் செய்ய, ஈரேழு பிறவி கடன் தீருவதுடன், சகல சௌபாக்யமும் பெற்று, இறுதியில் சான்னித்ய சாயுஜ்யமும் அடைவீரே!

சண்முகன்.

சன்னதியில் பாங்கோடு எட்டிரு நாமமோத எட்டியும் அமுதாகும், பாலையும் சோலையாகும்மே!

ஆதி வில்வநாதர்.

விதியோடு ஆதியின் அடிதொழுது அட்டமாசித்தாடுவாய்!

கடந்த மூன்று வருடங்களில் அடியேனுக்கு அருளியதை, மற்றவர்க்கு எடுத்துறைத்து அவர்கள் பலன் பெற்றதை விந்தையோடு கண்ணுற்றேன். இவ்விதிகளை அணுகுவோர் அனைவர்க்கும் உசிதமாக பகிர்ந்தளிக்க கடமைப்பட்டுள்ளேன்.

இப்பெருமையை இவ்வெழியோனுக்கு அருளிய காமேஷ்வர சமேத காமேஷ்வரி தேவி பொற்பாதம் பணிந்து – சிவன் T.

 

 

This entry was posted in ஆலய வழிபாடு, உக்ர தெய்வ வழிபாடு and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.