Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | பஞ்சதஸி / ஸோடஸி 2 | PANCHADASI / SHODASI 2

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||

ஸ்ரீ லலிதாம்பிகை

|| க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

 

பஞ்சதஸி / ஸோடஸி  2 | PANCHADASI / SHODASI   2

 

இன்றைய பதிவில் அம்பிகையின் இன்னும் சில பூஜை முறைகளை விளக்கலாம் என்றிருந்தேன், அதற்கு முன் சில விபரங்களை நம் அன்பர்களுக்கு தெரிவிக்கவும் கடமைப்பட்டிருக்கிறேன்.

தனியே பஞ்சதஸி / ஷொடஸி ஸ்மரிக்கும் பொழுது என்ன ஆகும் என்று பார்ப்போமா!

குருவின் அருளால் கிடைக்கப்பேற்ற பஞ்சதஸி / ஷோடஸியில், குருவானவர் தனது ஆசிகளோடு, அதன் முறையையும், எங்கு எதை நீட்டி உச்சரிக்கவேண்டும், எதை சுருக்கி உச்சரிக்கவேண்டும் என்றெல்லாம் உபதேஸிப்பார்.

பதிவாக நாம் இதுவரை செய்து வந்த நாடி சுத்தியிலேயே, நமக்கு இயல்பாகவே, மௌன மந்திரம் என்று சொல்லப்படும் ஹம்ஸ மந்திரமானது சித்தித்திருக்கும். சித்தியாக வேண்டும், இல்லையெனில் இயல்பாகவே மற்ற மந்திரங்கள் எதுவும் சித்திக்காது.

இதற்கும் மேலே, எல்லோரும் மந்திரத்தின் ப்ரயோகங்களை கற்று தேர்ந்துவிட்டால், சமுதாயத்தில் தவறு நடக்க வழிகோலியதாகிறது அன்றோ, ஆதலின், பல முக்கிய மந்திரங்களை உபாசிக்கும் முன், அவற்றின் விதி அறிவது அவசியம்.  ஆகையினாலே குருவானவர், முழுமையாக மந்திரத்தை உபதேஸித்தாலும், அதன் பலன் சாதாரணமாகவே நிக்ரஹக்கிப்பட்டிருக்கும். இதன் பயனாக, தவறு செய்யின், கடுமையாக உபாஸகனை உபாஸனா மந்திரம் தண்டிக்காது.

இப்படியாக சிலகாலம் எடுத்து முறையை பரிபூரணமாக தெரிந்து, தெளிந்து, தேர்ந்த பின்னரே குருவானவர், அந்த தடையை நீக்கும் மந்திரத்தை உபதேஸிப்பார். அப்பொழுது முதல் எந்த உபதேஸிக்கப்பட்ட மந்திரத்திற்கும், அதற்குண்டான முழுப்பலனும் ஸாதகனுக்கு கிட்டும்.

இந்த விதி ஸ்தோத்திரங்களுக்கு பொருந்தாது. ஸ்தோத்திரங்களில் உபயோகிக்கப்படும் மந்திர சொற்களுக்கு, உண்டான பலன் முன்னமே, அதை ஆக்கியவர் நிர்ணயித்து, அந்த முறையில் ஸ்தோத்திரம் அருளியிருப்பர்.

அதுகாண் அந்த ஸ்தோத்திர கர்த்தாவே அங்கு குருவாகி நிற்ப்பார். நமது குல பெரியோர்களையும், குலதெயவத்தையும், கணபதியையும், குரு வந்தனா ஸ்லோகத்தையும் ஸ்மரித்து அந்த ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்தாலே அப்பாராயணத்தின் முழுப்பலனையும் அடையலாம்.

மேலும் விபரங்கள் அடுத்த பதிவில் !

 

“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |

ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||

சுபம்

இந்த வலைப்பூவில் குறிப்பிட்டிருக்கும் ப்ரயோகம், செய்முறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்

ஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு தேவையான மந்திரம், யந்திரம், தந்திரத்தை தகுதி அனுசரித்து அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan [at] yahoo [dot] com, அலைபேசி:- +91 92454 46956, whatsapp:- +91 96774 50429

This entry was posted in பஞ்சதஸி / ஸோடஸி, ஸ்ரீ வித்யா தந்த்ரம்,, PANCHADASI / SHODASI, Uncategorized and tagged , , , , , . Bookmark the permalink.

1 Response to Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | பஞ்சதஸி / ஸோடஸி 2 | PANCHADASI / SHODASI 2

  1. உலகின் அரும்பெரும் இரகசியங்களை ஸ்ரீ சக்கரம் தன்னகத்தே உள்ளடக்கி வைத்துள்ளது. அதன் பஞ்சதசி/சோடசி மந்த்ரங்கள் மிகப்பெரிய பிரம்ம இரகசியம்.. இதுவே மிகபெரிய யோகரகசியம், பிரம்ம வித்தை. இதற்கு மேலான உயரிய தேவரகசியம் வேறு ஏதுமில்லை என்கிறேன் நான்….. எந்த மகாவாக்கியத்தை கடந்து போனாலும்,, மனசு சோடசியிலேதான் நிற்கிறது. அண்ணா இதுபற்றி கொஞ்சம் தெளிவு படுத்துங்கள்….

    அன்புடன் kumarvennavasal@gmail.com/kumarvennavasal@facebook.com

Comments are closed.