Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | பஞ்சதஸி / ஸோடஸி | PANCHADASI / SHODASI

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||

ஸ்ரீ லலிதாம்பிகை

|| க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

பஞ்சதஸி / ஸோடஸி | PANCHADASI / SHODASI

சில தினங்களுக்குமுன் நமது வலைப்பூவில் திரு. குமார் அவர்கள் ஒரு கேள்வி கேட்டிருந்தார். அது கீழே:

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம்,,

ஐம் க்லீம் சௌஹு:

க ஏ இ ல ஹ்ரீம்,, ஹசகஹலஹ்ரிம், சகஹலஹ்ரிம், ஸ்ரீம்

என்பது முழுமையான ஷோடஷி என்கிறேன் நான்

காரணம்

முதலில் மூலமந்திரம்

பின்னர் அம்பாள்

அதற்கு பின்னர் ஷோடஷி , ரகசிய முடிவோடு

 இது சரியா?????

கொஞ்சம் பதில் சொல்லுங்களேன் (kumarvennavasal@gmail.com ) 16/10/2012

எனது பதிலாவது:

மேலும் பஞ்சதஸி / ஸோடஸிகள்.

இந்த பஞ்சதஸி வித்யாவில் பல பிரிவுகள் காணக்கிடைக்கின்றன. அவை:

1. காதி வித்யா வர்ண க்ரமம் அல்லது மன்மதவித்யா (பொது) – அம்பிகைக்கு (க எ இ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம்)

காதி வித்யா அல்லது மன்மதவித்யையின் உட்பிரிவுகள்:-   ஷோடசி,   சௌபாக்ய ஷோடசி, சிந்தாமணி ஷோடசி, மஹா வித்யா ஷோடசி, தஸ மஹா வித்யா ஷோடசி, த்ரிலோக மோஹன கவசம்   என பல பிரிவுகள் உள்ளன.

2. ஹாதி வித்யா வர்ண க்ரமம் அல்லது லோபாமுத்ரா வித்யா வர்ண க்ரமம், இதனுடன் குஹ்ய பஞ்சதஸி, ஸோடஸியும் உண்டு  – அம்பிகைக்கு,

3. ஸ்கந்த வித்யா வர்ண க்ரமம்

4. கணேச வித்யா வர்ண க்ரமம்

5. மனு வித்யா வர்ண க்ரமம்

6. பஞ்சவக்த்ர-பரசிவ-வித்யா வர்ண க்ரமம் அல்லது நித்யக்லின்ன வித்யா வர்ண க்ரமம்

7. திரிபுரசுந்தரி வித்யா வர்ண க்ரமம் என்பனவாகும் (இவை யான் அறிந்தவை மட்டுமே, இன்னும் எவ்வளவு உளதோ! எனது குருவே எனக்கு விளக்கவேண்டும்)

பஞ்சவக்த்ரத்திலும், திரிபுரசுந்தரியிலும், 8 பைரவரும் உண்டு, ஆயின் எல்லா 16 நித்யாக் களையும் த்யானிப்பதில்லை. இவை இரண்டிலுமே வாராஹி எனப்படும் தண்டனாதா வழிபாடு உண்டு.

திரிபுரசுந்தரி வித்யையை, திருமூலர் சுந்தரநாதரும் தனது திருமந்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். அவர் அதில் ஸக்திபீட-திரிபுரசக்கிரம் என்று கூறுவார்.

அம்பிகையின் அருள் இருந்தால் மட்டுமே பஞ்சதஸி வரை ஸாதகனை குருவால் வழி நடத்த இயலும். ஷோடசி மஹா மந்திரத்தை ஸ்மரித்த உடனேயே ஸாதகனின் சர்வ மலங்களும், வினைப்பயனும் ஒழிக்கப்பட்டு சிவ-சக்தி ஸாயுஜ்யத்திற்கு அருகதை பெற்றுவிடுகிறான். ஆகையினாலேயே அது அம்பிகையின் பரிபூரண அருளினால் மட்டுமே கிட்டும்.

ஸாதகனின் தகுதிக்கேற்ப ஓரிரு இடங்களில் ரஹஸ்ய பீஜங்கள் – அம்பிகையின் பேரருளால் – குருவால் இணைத்தே ஷோடஸி அருளப்படும்.  இந்த பீஜங்கள் சரியானவையாக இருந்தால், ஸாதகன் மகோன்னத நிலையை அடைவான், இல்லையெனில் சொல்லொணா துன்பத்தில் மூழ்குவான்.

இவை எல்லாவற்றிர்க்கும் மிக மிக மிகக்கடினமான அனுஷ்டானங்கள் உண்டு. அனுஷ்டிக்க விரும்பும் ஸாதகர்கள் தயைகூர்ந்து குருவின் வழிகாட்டுதலோடு, முறையாக இவைகளை அனுஷ்டிக்கும்படி பணிவன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிரார்கள்.

இவையெல்லாம் “கேவலம் மோக்ஷ ஸாதனம்” என்றே ஏடுகளில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

 

“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |

ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||

சுபம்

இந்த வலைப்பூவில் குறிப்பிட்டிருக்கும் ப்ரயோகம், செய்முறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்

ஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு தேவையான மந்திரம், யந்திரம், தந்திரத்தை தகுதி அனுசரித்து அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan [at] yahoo [dot] com, அலைபேசி:- +91 92454 46956, whatsapp:- +91 96774 50429

This entry was posted in குண்டலினி, திருவிளக்கு பூஜை, தேவி மூகாம்பிகை, பஞ்சதஸி / ஸோடஸி, ஸ்ரீ வித்யா தந்த்ரம்,, PANCHADASI / SHODASI, Uncategorized and tagged , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | பஞ்சதஸி / ஸோடஸி | PANCHADASI / SHODASI

 1. kumar says:

  இது எனது சுருதி (SCANING &RECEIVING)
  சோடசிக்கு முன்னால் அம்பாளின் மூலமந்திரம்A (சங்கரர் சொல்கிறார் ஒம்காரத்தையும்,ஐங்காரத்தையும், ஹ்ரீம்காரத்தையும், ரகசியமாய் இருக்கும் அந்த ———-காரத்தையும் விளக்கும் குருவின் திருவடிக்கு வணக்கம் என்று)
  B பாலாதிரிபுரசுந்தரி
  C சோடசி
  இந்த கூட்டு எனது சுருதியில் வந்தது

Comments are closed.