Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | மந்த்ரமாத்ருகா புஷ்பமாலா ஸ்தவம் | பாகம் – 16

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||

ஒம்

|| க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

மந்த்ரமாத்ருகா புஷ்பமாலா ஸ்தவம் | मन्त्रमातृकापुष्पमालास्तवः

பாகம் – 16

 श्रीमन्त्राक्षरमालया गिरिसुतां यः पूजयेच्चेतसा

संध्यासु प्रतिवासरं सुनियतस्तस्यामलं स्यान्मनः।

चित्ताम्भोरुहमण्टपे गिरिसुता नृत्तं विधत्ते रसाद्वाणी

वक्त्रसरोरुहे जलधिजा गेहे जगन्मङ्गला॥

***

śrīmantrākṣaramālayā girisutāṁ yaḥ pūjayeccetasā

saṁdhyāsu prativāsaraṁ suniyatastasyāmalaṁ syānmanaḥ |

cittāmbhoruhamaṇṭape girisutā nṛttaṁ vidhatte rasādvāṇī

vaktrasaroruhe jaladhijā gehe jaganmaṅgalā ||

***

ஸ்ரீ மந்த்ராக்ஷர மாலயா கிரிஸுதாம் ய: பூஜயேத் சேதஸாஸந்த்யாஸு ப்ரதிவாஸரம் ஸுநியதஸ்தஸ்யாமலம் ஸயான்மன: | சித்தாம்போருஹ மண்டபே கிரிஸுதா ந்ருத்தம் விதத்தே ரஸாத்வாணீ வக்த்ர ஸரோருஹே ஜலதிஜா கேஹே ஜகன் மங்களா ||

***

இந்த மந்திர அட்சர மாலையினால் அம்பிகையை காலை, மதியம் மாலையில் நிஷ்டையுடனும் பக்தியுடனும் யார் துதிக்கிறார்களோ, அவர்கள் சித்த சுத்தி அடைவார்கள்; அவர்கள் மனதில் தேவி நர்த்தனம் புரிவாள்; வாக்கில் சரஸ்வதியும் அவர்களின் இல்லங்களில் லக்ஷ்மியும் வாசம் செய்வார்கள்.

இந்த பகுதி ஸ்ரீம் என்று ஆரம்பிக்கிறது, இதை முன்பு பார்த்த பஞ்சதஸியுடன் சேர்த்தால் அது ஷோடஸாக்ஷரி மஹா மந்திரமாகிரது.

இந்த மந்திரமாத்ருகா ஸ்தவமானது, 15 பீஜங்களால் (க ஏ ஈ ல ஹ்ரீம் – ஹ ஸ க ஹ ல ஹ்ரீம் – ஸ க ல ஹ்ரீம்) ஆரம்ப எழுத்துக்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டது. மத்ருகா பொதுவாக ஸமஸ்க்ருத உயிர் எழுத்துக்களை குறிக்கும், சில சமயம் எல்லா எழுத்துக்களையும் குறிக்கவும் பயன்படுத்துவது உண்டு. மந்த்ர மாத்ருகா – அம்பிகைக்கே உறிய மந்திர எழுத்துக்களால் கோர்க்கப்பட்ட பூ மாலையாக, அம்பிகை அணியும் பொருட்டு அமைந்துள்ளது. லலிதா ரஹஸ்ய ஸஹஸ்ரத்தில் நாமம் 577 ல், “மாத்ருகா வர்ண ரூபிணி” அதாவது 51 எழுத்துக்களால் அலங்கரிக்கப்பட்டவள் என்றும், நாமம் 489 ல் “அக்ஷமாலாதி தரா” என்றும் அம்பிகையை போற்றுகின்றது. ஆதி சங்கரர், தீர்கதரிஸியன்றோ, ஆகையினாலேயே இந்த ஸ்தவத்தை பஞ்சதஸி மஹா மந்திரத்தின் எழுத்துக்களால் துவக்கி எல்லோரும் இன்புற்றிருக்க, அம்பிகையின் பேரருள் கிடைக்க வழி செய்துள்ளார்

இனி ஒரு விஷேஷம் கூட, அம்பிகையின் பூஜா முறைகளையும் இதில் தெளிவாக விளக்கியுள்ளார். ஆசனம், ஆயுதம், கிரீடம், அர்க்யம், பாத்யம், ஆசமனீயம், ஸ்நபநம், வஸ்த்ரம், ஆபரணங்கள், புஷ்பம், தூபம், தீபம், நைவேத்யம், பழவகைகள், கற்பூரவீடிகா கலந்த தாம்பூலம், நீராஜனம், மற்றும் உபசாரங்கள் போன்றவற்றை முதல் 14 ஸ்லோகங்களில் முடித்து 15 ஆம் ஸ்லோகத்தில் ஆத்ம நிவேதனத்தையும் செய்து காட்டிவிட்டாரே!

இந்த 16 ஆம் ஸ்லோகத்தில் இப்படி உபாஸிப்பதினால் உண்டாகும் பயனையும் உரைக்கிறார்.

இந்த உபாஸனை மார்கத்தில் “வைதீக வணிகர்” தேவையில்லை, ஏனெனில் நாம் அம்பிகையின் சன்னதியில் நின்று ஒரு பாட்டையன்றோ மனமுருகி பாடுகிறோம். கடின தீக்ஷை தேவையில்லை, அக்னியில்லா வேள்வி செய்து ஆத்மார்ப்பணம் கூட செய்துவிட்டோமே.

இந்த பாடலின் இனியோர் பகுதி அடுத்த பதிவிலும், பின்னர் இதை முறைப்படி உபயோகிக்கும் வழிகளையும் சிறிது அலசுவோமா!

பர சிவனின் அம்ஸமாக கருதப்படுகின்ற ஆதிசங்கரர் பதமலர் பற்றி, அம்பிகையின் பாதாரவிந்தங்களைப் மெத்தப்பணிவுடன் பணிந்து இன்றய பதிவை முடிக்கிறேன்.

“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |

ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||

சுபம்

இந்த வலைப்பூவில் குறிப்பிட்டிருக்கும் ப்ரயோகம், செய்முறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்

ஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு தேவையான மந்திரம், யந்திரம், தந்திரத்தை தகுதி அனுசரித்து அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan [at] yahoo [dot] com, அலைபேசி:- +91 92454 46956, whatsapp:- +91 96774 50429

This entry was posted in मन्त्रमातृकापुष्पमालास्तवः, ஆலய வழிபாடு, குண்டலினி, மந்த்ர மாத்ருகா புஷ்பமாலாஸ்தவம், மந்த்ரமாத்ருகா புஷ்பமாலா ஸ்தவம், மந்த்ரமாத்ருகாபுஷ்பமாலாஸ்தவம், ஸ்ரீ வித்யா தந்த்ரம்,, Uncategorized and tagged , , , , , . Bookmark the permalink.