Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | மந்த்ரமாத்ருகா புஷ்பமாலா ஸ்தவம் | பாகம் – 15

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||

ஒம்

|| க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

மந்த்ரமாத்ருகா புஷ்பமாலா ஸ்தவம் | मन्त्रमातृकापुष्पमालास्तवः

பாகம் – 15

 

ह्रींकारात्रयसंपुटेन मनुनोपास्ये त्रयीमौलिभिः

वाक्यैर्लक्ष्यतनो तव स्तुतिविधौ को वा क्षमेताम्बिके।

सल्लापाः स्तुतयः प्रदक्षिणशतं संचार एवास्तु ते

संवेशो नमसः सहस्रमखिलं त्वत्प्रीतये कल्पताम्॥

***

hrīṁkārātrayasaṁpuṭena manunopāsye trayīmaulibhiḥ

vākyairlakṣyatano tava stutividhau ko vā kṣametāmbike |

sallāpāḥ stutayaḥ pradakṣiṇaśataṁ saṁcāra evāstu te

saṁveśo namasaḥ sahasramakhilaṁ tvatprītaye kalpatām ||

***

ஹ்ரீங்காரத்ரயஸம்புடேன மனுனோபாஸ்யே த்ரயீமௌலிபி:

வாக்யைர்லக்ஷ்யதனோதவ  ஸ்துதிவிதௌ கோவாக்ஷமேதாம்பிகே |

ஸல்லாபா: ஸ்துதய: ப்ரதக்ஷிணசதம் ஸஞ்சாரஏவாஸ்துதே

ஸம்வேசோமனஸ: ஸமாதிரகிலம் த்வத்ப்ரீதயேகல்பதாம் ||

***

ஸ்ரீ திரிபுராம்பிகையின் அதிரஹஸ்யமான பஞ்சதஸியின் சக்தி கூடம் (எ) கடைசி வரியின் நான்காம் எழுத்து – ஹ்ரீம்

மூன்று ஹ்ரீங்காரங்கள் கூடிய மந்திரத்தால் உபாசிக்கப் படுபவளே! வேதாந்த வாக்கியங்களின் லட்சியமானவளே! என்னுடைய பேச்செல்லாம் உனக்கு தோத்திரங்களாகவும், என் சஞ்சாரங்களெல்லாம் உனக்குப் பிரதட்சிணமாகவும், நான் படுப்பதெல்லாம் உனக்கு நமஸ்காரங்களாகவும்  இருக்கட்டும்.

உபனிஷத்களின் சூக்ஷம  திருவே, உமையே, ஹ்ரீங்காரங்கள் மூன்றுடைய மந்திரத்தால் வழிபடப்படுபவளே, உன்னைப்போற்றி பாட்டெழுத யாரால் இயலும்? தாயே, என்னால் பேசப்படுபவை யாவும் நின் புகழே ஆகட்டும். எனது அங்க அசைவுகள் எல்லாம், நின் ப்ரதக்ஷிணங்களாகட்டும். கிடந்துறங்குவது, தாயே நின் பதகமலங்களுக்கு, என் ஸஹஸ்ர ஷாஷ்டாங்க நமஸ்காரங்களாக உன் அருளால் ஏற்றுக்கொள்ளப்படட்டும், என்று சங்கரர் இந்த 15வது ஸ்லொகம் செய்கிறார் என்றால், அவர் அம்பிகையின் ப்ராபவத்தை நன்கு புரிந்துகொண்டுள்ளார்.

எவராலும் விவரிக்க முடியாத ஒரு ஒளி ப்ரவாளத்தை எதோடு ஒப்பிட்டு வர்ணிப்பது? பரிணாமமே இல்லாத பொருளை எந்த பரிமாணத்தோடு ஒப்பிட்டு வர்ணிப்பது? அளவற்ற அழகை எந்த அளவை வைத்து எடை போடுவது? எல்லையில்லா கருணையுடையவளை கருணைக்கடலே என்று வர்ணிப்பது தகுமோ? கடலுக்குத்தான் எல்லையுண்டே!

இங்கு அம்பிகைக்கு நாம் சமர்ப்பித்ததெல்லாம் நாம் அவளிடமிருந்து பெற்றவைகளே. இடம், நிழல், நீர், உடை, உணவு, உணவளிக்கும் பாத்திரங்கள் என எல்லாமே அவளிடமிருந்தே வந்தவை அன்றோ?

எல்லவற்றையும் அவளாலேயே அருளப்பட்டபின், யாம் அவளுக்கு அளிப்பதுதான் ஏது? என்றம் எண்ணம் தோன்றும்போது, யாம் செய்யும் தவறுகள் நமக்கு புரிய ஆரம்பிக்கிறது. பீடங்கள் எதற்கு? அம்மை அமர்வதற்கா? அவள் அமர்ந்த பின்னேயல்லவோ அது நமக்கு மரமாக கண்டது. ரத்தினங்களே அவளேயன்றோ, பின்னர் எப்படி அவற்றை அவளுக்கு அளிப்பது? நமது, நாம் அளிக்கின்றோம் என்று.  அம்பிகையை சகுண ப்ரம்மமாக வணங்கப் போய், நிர்குண ப்ரம்மமாக அல்லவோ அவளை காணவேண்டியதாயிற்று! இங்கு த்வைதம் மறைந்து அத்வைதம் உதிக்கிறது!

இனி நான் என்பது ஏது? எல்லாமே அவளேயன்றோ! என்ற எண்ணம் உதிக்கிறது.

“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |

ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||

சுபம்

இந்த வலைப்பூவில் குறிப்பிட்டிருக்கும் ப்ரயோகம், செய்முறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்

ஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு தேவையான மந்திரம், யந்திரம், தந்திரத்தை தகுதி அனுசரித்து அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan [at] yahoo [dot] com, அலைபேசி:- +91 92454 46956, whatsapp:- +91 96774 50429

This entry was posted in मन्त्रमातृकापुष्पमालास्तवः, குண்டலினி, மந்த்ர மாத்ருகா புஷ்பமாலாஸ்தவம், மந்த்ரமாத்ருகா புஷ்பமாலா ஸ்தவம், மந்த்ரமாத்ருகாபுஷ்பமாலாஸ்தவம், ஸ்ரீ வித்யா தந்த்ரம்,, Uncategorized and tagged , , , , , , , , , , , , . Bookmark the permalink.