Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | மந்த்ரமாத்ருகா புஷ்பமாலா ஸ்தவம் | பாகம் – 14

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||

ஒம்

|| க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

 

மந்த்ரமாத்ருகா புஷ்பமாலா ஸ்தவம் | मन्त्रमातृकापुष्पमालास्तवः

பாகம் – 14

 

लक्ष्मीः मौक्तिकलक्षकल्पितसितच्छत्रं तु धत्ते रसात्

इन्द्राणी च रतिश्च चामरवेर धत्ते स्वयं भारती।

वीणामेणविलोचनाः सुमनस्सां नृत्यन्ति तद्रागवद्भावैः

आङ्गिकसात्विकैः स्फुटरसं मातस्तदाकण्यर्ताम्॥

***

lakṣmīḥ mauktikalakṣakalpitasitacchatraṁ tu dhatte rasāt

indrāṇī ca ratiśca cāmaravera dhatte svayaṁ bhāratī |

vīṇāmeṇavilocanāḥ sumanassāṁ nṛtyanti tadrāgavadbhāvaiḥ

āṅgikasātvikaiḥ sphuṭarasaṁ mātastadākaṇyartām ||

***

லக்ஷ்மீர்மௌக்திகலக்ஷகல்பிதஸிதச்சத்ரம்துதத்தேரஸாத்

இந்த்ராணீசரதிச்சசாமரவேரே தத்தேஸ்வயம்பாரதீ |

வீணாமேணவிலோசனா: ஸுமனஸ்ஸாம் ந்ருத்யந்திதத்ராகவத்ராவை

ஆங்கிகஸாத்விகை: ஸ்புடரஸம் மாதஸ்ததாகண்யர்தாம் ||

***

ஸ்ரீ திரிபுராம்பிகையின் அதிரஹஸ்யமான பஞ்சதஸியின் சக்தி கூடம் (எ) கடைசி வரியின் மூன்றாம் எழுத்து

எண்ணிலடங்கா லக்ஷோபலக்ஷ நன்முத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட  வெண்குடையை நின் அருகிலிருந்து ஸ்ரீலக்ஷ்மி அழகுடனும், கர்வத்துடனும் பிடிக்க, இந்திராணியும் ரதியும் நின் இருபுரமும் நின்று சுவாஸனையுடய மூலிகைகளால் செய்யப்பட்ட சாமரம்வீச, சரஸ்வதி தேவி நின் எதிரில் அமர்ந்து ‘கச்சபி’ எனும் தேவ வீணை வாசிக்க, அந்த தேவ வீணையின் இசைக்கு ஏற்ப தேவமகளிர் நாட்டியம் ஆட, இசையுடன் கூடியபாட்டும், நடனமும் உன்னால் ஏற்க்கப்படட்டும் அம்பிகே.

அம்பிகை, பாகம்-1ல் அளிக்கப்பட்ட ரத்தின ஸிம்ஹாஸனத்தில் அமர்ந்திருக்க, ஸ்ரீ லக்ஷ்மி அன்னை, அம்பிகைக்கு வெகு அருகில் நின்று பல, பல லக்ஷோபலக்ஷ வெண் முத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட குடையை அன்னைக்கு வெகு அருகில் தாம் இருக்கிறோம் என்ற பூரிப்பிலும், கர்வத்திலும், தனக்கே உரிய நளினத்துடனும் குடை பிடிக்க, தேவகுல அரசனான இந்திரனின் ஸஹதர்மணியான இந்த்ராணி, தேவர் தேவிகள் எல்லோருடைய ப்ரதினிதி யாக ஒருபுரம் வெண் சாமரம் வீச, மறுபுரம் காமதேவனின் பத்தினியான ரதி தேவி இன்னொரு வெண் சாமரம் வீச, ரதிதேவிக்கு ஏன் இந்த சிறப்பு என்றால், அம்பிகைக்கு, மன்மதன் எனும் காமதேவன் ப்ரியமானவன். அம்பிகைக்கு காமதேவனுடைய செயல்களும், காமதேவனும் மிக விருப்பமானவைகள். இறைவியை இறைவனிடம் சேர்க்க தன்னையே விலையாக கொடுத்தவனன்றோ. அதுவுமல்லாமல், அம்பிகையை ஆராதிப்பவனும் கூட, லலிதா ரஹஸ்ய ஸஹஸ்ரத்தில் நாமம் 375 “காமபூஜிதா” என்றும் நாமம் 586 ல் “காமஸேவிதா” என்கிறது. அதுவுமல்லாமல், அம்பிகையே காருண்யமூர்த்தியன்றோ! நாமம் 376-ல் ஸ்ருங்கார ரஸ ஸம்பூர்ணா என்றும், நாமம் 863 “காமகேளீதரங்கிதா” என்றல்லவா பகர்கிறது.

ஸ்ரீ சரஸ்வதி, தேவ வீணையாம் கச்சபியை இசைத்து, தன் வீணையை விட மதுரமான த்வனியால் கீர்த்தனமிசைக்க (நாமம் – 27), இதையே தான் ஸ்லோகம் 66 சௌந்தர்யலஹரியும் எடுத்துறைக்கிறது.

இவையெல்லாம் அம்பிகைக்கு மிகவும் பிரியமான 64 உபசாரங்களில் ஒன்றாகும். இதைப்பற்றி மேல் விபர்ங்கள் மிக விரிவாக தந்த்ர ஸாஸ்திரங்களில் விவரிக்கப்படுகிறது.  லலிதா ரஹஸ்ய ஸஹஸ்ரமும் நாமம் 235 இந்த 64 வித உபசாரங்களையே எடுத்துறைக்கிறது.

இப்படியாக சங்கர பகவத்பாதாள் அம்பிகைக்கு அர்ப்பித்த சகல உபசாரங்களையும் அருகிலுருந்து அவருக்கு உதவி நாமும் பங்கு கொண்டோம் அல்லவா! எப்பிறவியில் என்ன புண்யம் செய்திருந்தோமோ, இப்பிறவியில், அம்பிகையை மானஸீகமாக, ஆதி சங்கராச்சாரியாருடன் ஆராதிக்க ஒரு அவகாசம் கிட்டி நம்மை பாவனனாக்கியது!

அந்த அகிலாண்ட கோடி ப்ரம்மாண்ட ஜனனேஸ்வரி, நாம் பணிவுடன் அளித்த உபசாரங்களை அங்கீகரித்து ஏற்று அருளுவாளாக!

 

“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |

ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||

சுபம்

இந்த வலைப்பூவில் குறிப்பிட்டிருக்கும் ப்ரயோகம், செய்முறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்

ஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு தேவையான மந்திரம், யந்திரம், தந்திரத்தை தகுதி அனுசரித்து அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan [at] yahoo [dot] com, அலைபேசி:- +91 92454 46956, whatsapp:- +91 96774 50429

This entry was posted in குண்டலினி, மந்த்ர மாத்ருகா புஷ்பமாலாஸ்தவம், மந்த்ரமாத்ருகா புஷ்பமாலா ஸ்தவம், மந்த்ரமாத்ருகாபுஷ்பமாலாஸ்தவம், ஸ்ரீ வித்யா தந்த்ரம்,, Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.