Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | மந்த்ரமாத்ருகா புஷ்பமாலா ஸ்தவம் | பாகம் – 13

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||

ஒம்

|| க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

 

மந்த்ரமாத்ருகா புஷ்பமாலா ஸ்தவம் | मन्त्रमातृकापुष्पमालास्तवः

பாகம் – 13

कन्याभिः कमनीयकान्तिभिरलङ्गारामलारार्तिका

पात्रे मौक्तिकचित्रपङ्क्तिविलसत्कर्पूरदीपालिभिः।

तत्तत्तालमृदङ्गगीतसहितं नृत्यत्पदाम्भोरुहं

मन्त्राराधनपूर्वकं सुविहितं नीराजनं गृह्यताम्॥

***

kanyābhiḥ kamanīyakāntibhiralaṅgārāmalārārtikā

pātre mauktikacitrapaṅktivilasatkarpūradīpālibhiḥ|

tattattālamṛdaṅgagītasahitaṁ nṛtyatpadāmbhoruhaṁ

mantrārādhanapūrvakaṁ suvihitaṁ nīrājanaṁ gṛhyatām||

***

கன்யாபி: கமனீய காந்திபிர் அலங்காராமலாராத்ரிகா

பாத்ரே மௌக்திக சித்ர பங்க்தி விலஸத் கர்ப்பூரதீபாலிபி:

தத்தத் தால ம்ருதங்க கீத ஸஹிதம் ந்ருத்யத் பதாம்போருஹம்

மந்த்ராரான பூர்வகம் ஸுவிஹிதம் நீராஜனம் க்ருஹ்யதாம்

***

ஸ்ரீ திரிபுராம்பிகையின் அதிரஹஸ்யமான பஞ்சதஸியின் சக்தி கூடம் (எ) கடைசி வரியின் இரண்டாம் எழுத்து –

அழகு மிகு கன்னியர்களால் பல விதமாக முத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட தட்டில் கற்பூரம் ஏற்றி அம்பிகே, பாட்டும், நாட்டிய நடனமும், மேளதாளமும் முழங்க, வேதகோஷத்துடன் கூடிய மந்திரங்களுடனும் தாயே உன் திருப்பாதங்களுக்கு கற்பூர நீராஜனம் காட்டுகிறேன் அம்மா! ஏற்றுக்கொள்வீராக

இந்த நீராஜனம் எனும் பதத்தை அழகு குறையாமல் இன்னொரு பாஷையில் எடுத்துச்சொல்ல மிக கடினமாக உள்ளது. ஆரத்தி என்றால் அது சுமாரான அர்த்தத்தையே கொடுக்கும், ஆயினும் அதையே உபயோகிக்கிறேன்.

நீராஜனம் / ஆரத்தி செய்யும்போது, சங்கு, மேளதாளம், வேதகோஷம், ந்ருத்யம், மணியடித்தல் முதலானவையோடு செய்வதே முறை.  இது மனதை இறைவியிடத்தில் அல்லது இறைவனிடத்தில் நிலைக்கச்செய்யும், அல்லாமல் மனதில் ஒருவகை கிளர்ச்சியை உண்டாக்கும், சில நேரம் உடம்பு புல்லரிக்க கூடும். அம்பிகைக்கு நீராஜனம் / ஆரத்தி செய்யும்போது, நாம் நீராஜன / ஆரத்தி ஒளியில் அம்பிகையின் சுய ஒளியைக்காணலாம்.

நீரஜன சமயத்தில் ‘கதோபனிஷத்’தின் ||.ii.15 –ல் காணப்படும் ஸ்லோகம் இசைக்கப்படும், அதன் அர்த்தம். ப்ரம்மம் ஒன்றே தன்னொளி கொண்டது, மற்ற சூரியன், சந்திரன், நக்ஷத்திரங்கள், அக்னி யாவும் ப்ரம்மத்தின் ஒளியையே ப்ரதிபலிக்கின்றன என்று. இங்கு ப்ரம்மமாக கூறுவதை அம்பிகை என்று கொள்க.

ஸ்ரீ லலிதா ரஹஸ்ய ஸஹஸ்ரம் நாமம் 806-ல் அம்பிகையை ‘பரஞ்ஜோதி’ என்றே குறிப்பிடுகிறது.

ஆதி சங்கரரின் பேரருளால், அவருடனிருந்து அவருடைய அம்பிகையின் ஆராதனை முறையை கண்டோமல்லவா, அடுத்த பதிவுகளில், உபசாரங்களையும், இந்த ஸ்தவம் விதிப்படி உபயோகித்து, அம்பிகையை ஆராதித்தால் எப்படிப்பட்ட பலன் கிட்டிடும் என்பதையும், இதில் ஸ்ரீ சங்கரர் அடைத்துள்ள ரஹஸ்யத்தையும் பார்ப்போமா!

 

“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |

ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||

சுபம்

இந்த வலைப்பூவில் குறிப்பிட்டிருக்கும் ப்ரயோகம், செய்முறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்

ஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு தேவையான மந்திரம், யந்திரம், தந்திரத்தை தகுதி அனுசரித்து அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan [at] yahoo [dot] com, அலைபேசி:- +91 92454 46956, whatsapp:- +91 96774 50429

This entry was posted in मन्त्रमातृकापुष्पमालास्तवः, குண்டலினி, மந்த்ர மாத்ருகா புஷ்பமாலாஸ்தவம், மந்த்ரமாத்ருகா புஷ்பமாலா ஸ்தவம், மந்த்ரமாத்ருகாபுஷ்பமாலாஸ்தவம், ஸ்ரீ வித்யா தந்த்ரம்,, Uncategorized and tagged , , , , , , , , , . Bookmark the permalink.