Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | மந்த்ரமாத்ருகா புஷ்பமாலா ஸ்தவம் | பாகம் – 11

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||

ஒம்

|| க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

 

மந்த்ரமாத்ருகா புஷ்பமாலா ஸ்தவம் | मन्त्रमातृकापुष्पमालास्तवः

பாகம் – 11

ह्रींकारेश्वरि तप्तहाटककृतैः स्थालीसहस्रैर्भृतं

दिव्यान्नं घृतसूपशाकभरितं चित्रान्नभेदं तथा।

दुग्धान्नं मधुशर्करादधियुतं माणिक्यपात्रे स्थितं

माषापूपसहस्रं अम्ब सफलं नैवेध्यमावेदये॥

***

hrīṁkāreśvari taptahāṭakakṛtaiḥ sthālīsahasrairbhṛtaṁ

divyānnaṁ ghṛtasūpaśākabharitaṁ citrānnabhedaṁ tathā|

dugdhānnaṁ madhuśarkarādadhiyutaṁ māṇikyapātre sthitaṁ

māṣāpūpasahasraṁ amba saphalaṁ naivedhyamāvedaye||

***

 ஹ்ரீங்காரேஸ்வரிதப்தஹாடகக்ருதை: ஸ்தாலீஸஹஸ்ரைர்ப்ருதம்

திவ்யான்னம்க்ருதஸூபசாகபரிதம் சித்ரான்னபேதம்ததா |

துக்தான்னம்மதுசர்க்கராததியுதம் மாணிக்யபாத்ரேஸ்திதம்

மாஷாபூபஸஹஸ்ரம்அம்பஸபலம் நைவேத்யமாவேதயே ||

***

ஸ்ரீ திரிபுராம்பிகையின் அதிரஹஸ்யமான பஞ்சதஸியின் காமராஜ கூடம் (எ) மத்யகூடத்தின் கடைசி எழுத்து – ஹ்ரீம்

ஹ்ரீங்காரேஸ்வரியே, தாயே பல பொற்பாத்திரங்களில் பசுவின் நெய், பருப்பு, கறிவகைகள் கலந்த திவ்யான்னம், சித்ரான்னங்கள், தேன், பாற்சோறு, பலவிதமான பழங்கள், வடைகள் முதலியவற்றை மாணிக்கப்பாத்திரங்களில் நைவேத்தியமாக சமர்ப்பிக்கின்றேன்.

‘ஓம்’ என்ற ப்ரணவம் எப்படி சக்திவாய்ந்ததோ, அதேபோல் சக்தி ப்ரணவம் எனும் ‘ஹ்ரீம்’ அற்புத சக்திவாய்ந்த பீஜ மந்திரமாகும். இதை புவனேஸ்வரி பீஜம் என்றும், மாயா பீஜம் என்றும் குறிப்பிடப்படுகிறது.

லலிதா ரஹஸ்ய ஸஹஸ்ரத்தில் 301வது நாமம் ஹ்ரீங்காரீ என்பதாகும். ஆகையினாலேயே, பன்சதஸியின் ஒவ்வொரு கூடத்தின் முடிவிலும் ‘ஹ்ரீம்’ என்ற சக்தி ப்ரணவம் உள்ளது.   ஹ்ரீம் என்பது ஹ + ர + ஈ + ம மற்றும் பிந்து எனப்படும் புள்ளியால் ஆனது ஆகும். மந்திரங்களில் பிந்து எனும் புள்ளியானது மிகவும் சக்திவாய்ந்தது ஆகும். உதாரணத்திற்கு, ‘ஹ’ (ह) என்பது எழுத்தாகவும், ‘ஹம்’ (हं) என்பது மந்திரமாகிறது. இந்த ‘ஹம்’ என்பது ஹ என்பது ஷ்ருஷ்டியையும் அ என்பது ஸ்திதியாகவும், ம் என்பது லயத்தை குறிப்பதாகவும் அமைகிறது. இந்த மந்திரம் பற்றி விரிவாக இன்னொரு பதிவில் பார்ப்போமாக. சில ஏடுகளில் இதையே சிவ-சக்தி பீஜம் என்றும் குறிப்பிடப்படுகிறது.

ஸாதகன், பொற்கிண்ணங்களில் நிவேதன பொருட்கள் அர்ப்பணிக்கப்படுகிறது. ஏன் என்றால் அவளே பொன்னிர மேனியள் அன்றோ, (ரஹஸ்ய ஸஹஸ்ர நாம த்யான ஸ்லோகம் அம்பிகையை ‘ஹேமாபாம்’ எனில் பொன்னிறமேனியள் என்றே குறிக்கிறது) பொதுவாகவே இறைவன் – இறைவியருக்கு அர்ப்பணிக்கப்படும் பொருள்கள் அனைத்துமே பொன்னால் ஆன பாத்திரங்களிலேயே அர்ப்பணிக்கப்படுகின்றன. இதன் காரணம் இரண்டு எனலாம், ஒன்று தங்கமானது மிக சுத்தமானது, எந்த பொருளும் சுலபமாக பொன்னோடு ரஸாயனக்கூட்டு ஏற்ப்படுத்திக்கொள்வதில்லை, ஆதலின், களிப்படிக்காது. இரண்டாவது அது ஒரு உயர் ரக தாதுவாகும்.

அம்பிகை, பாயஸ அன்னத்தை விரும்புபவள், அதுகாண், அரிசி, பால், சர்க்கரை கலந்து, குங்கமப்பூ, ஏலம், கற்பூரம் சேர்த்து பாயஸம் செய்து அம்பிகைக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. இதை அர்ப்பணிக்கும்போது சங்கரர், மாணிக்கத்திலான பாத்திரத்தில் அர்ப்பணிப்பாதக கூறுகிறார். (ரஹஸ்ய ஸஹஸ்ர நாம த்யான ஸ்லோகம் அம்பிகையை ‘மாணிக்ய மௌளி ஸ்புரத்’ எனில் மாணிக்கத்திலான மகுடம் சூடியவள் என்றே குறிக்கிறது)

இப்படியாக அம்பிகைக்கு, சங்கரர் அளித்த விஷேஷ நிவேதனங்களை அவருடன் சேர்ந்து நாமும் அளித்து அம்பிகையை ஏற்றுக்கொள்ள வேண்டுவாமாக!

 

“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |

ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||

சுபம்

இந்த வலைப்பூவில் குறிப்பிட்டிருக்கும் ப்ரயோகம், செய்முறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்

ஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு தேவையான மந்திரம், யந்திரம், தந்திரத்தை தகுதி அனுசரித்து அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan [at] yahoo [dot] com, அலைபேசி:- +91 92454 46956, whatsapp:- +91 96774 50429

This entry was posted in मन्त्रमातृकापुष्पमालास्तवः, மந்த்ர மாத்ருகா புஷ்பமாலாஸ்தவம், மந்த்ரமாத்ருகா புஷ்பமாலா ஸ்தவம், மந்த்ரமாத்ருகாபுஷ்பமாலாஸ்தவம், ஸ்ரீ வித்யா தந்த்ரம்,, Uncategorized and tagged , , , , , , , . Bookmark the permalink.

1 Response to Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | மந்த்ரமாத்ருகா புஷ்பமாலா ஸ்தவம் | பாகம் – 11

 1. kumar says:

  ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம்,,
  ஐம் க்லீம் சௌஹு :
  க ஏ இ ல ஹ்ரீம்,, ஹசகஹலஹ்ரிம், சகஹலஹ்ரிம், ஸ்ரீம்
  என்பது முழுமையான ஷோடஷி என்கிறேன் நான்
  காரணம்
  முதலில் மூலமந்திரம்
  பின்னர் அம்பாள்
  அதற்கு பின்னர் ஷோடஷி , ரகசிய முடிவோடு

  இது சரியா?????
  கொஞ்சம் பதில் சொல்லுங்களேன்
  (kumarvennavasal@gmail.com )

Comments are closed.