Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | மந்த்ரமாத்ருகா புஷ்பமாலா ஸ்தவம் | பாகம் – 10

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||

ஒம்

|| க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

 

மந்த்ரமாத்ருகா புஷ்பமாலா ஸ்தவம் | मन्त्रमातृकापुष्पमालास्तवः

பாகம் – 10

 लक्ष्मीमुज्ज्वलयामि रत्ननिवहोद्भास्वत्तरे मन्दिरे

मालरूपविलम्बितैर्मणिमयस्तम्भेषु संभावितैः।

चित्रैर्हाटकपुत्रिकाकरधृतैर्गव्यैर्घृतैर्वधितै-

-र्दिव्यैर्दीपगणैर्धिया गिरिसुते संतुष्टये कल्पताम्॥

***

lakṣmīmujjvalayāmi ratnanivahodbhāsvattare mandire

mālarūpavilambitairmaṇimayastambheṣu saṁbhāvitaiḥ|

citrairhāṭakaputrikākaradhṛtairgavyairghṛtairvadhitai-

-rdivyairdīpagaṇairdhiyā girisute saṁtuṣṭaye kalpatām||

***

 லக்ஷ்மீ முஜ்வலயாமி ரத்ன நிவஹோத் பாஸ்வத்தரே மந்திரே

மாலாரூப விலம்பிதைர் மணிமய ஸ்தம்பேஷு ஸம்பாவிதை: |

சித்ரைர் ஹாடக புத்ரிகாகரத்ருதைர் கவ்யைர் க்ருதைர் வர்த்திதை:

திவ்யைர் தீபகணைர் தியா கிரிஸுதே ஸந்துஷ்டயே கல்பதாம் ||

***

ஸ்ரீ திரிபுராம்பிகையின் அதிரஹஸ்யமான பஞ்சதஸியின் காமராஜ கூடம் (எ) மத்யகூடத்தின் ஐந்தாம் எழுத்து –

அம்பிகையே! நானாவித ரத்தினங்களால் ஆக்கப்பட்ட திவ்ய பவனத்தில், நானாவித ரத்தினங்களால் இழைக்கப்பட்ட தூண்களில் மாலைகளைப்போல், தீபங்கள் எரிந்துகொண்டிருக்கின்றன. தங்கத்தினாலான பெண் பதுமைகள், தீபத்தை இரு கைகளாலும் ஏந்தி உன் பவனத்தை ப்ரகாசிக்க செய்துகொண்டிருக்கின்றனர்.  இந்த தீபங்களனைத்தையும் பசு நெய் ஊற்றி, தீபமேற்றுகிறேன் தாயே பர்வத புத்ரீ. இவையெல்லாம் உனக்கு சந்துஷ்டியை நல்குவதாக, ஏற்றுக்கொள் அம்பிகையே.

ஸாதகன், தனது மல்ங்களான வேட்கை (LUST), கோபம் போன்ற “ரஜோகுணத்தை” நெருப்பிலிட்டு பொசுக்கி, சுத்தமான, நறுமணமுள்ள ஆத்மனை அம்பிகைக்கு தூட்பமாக அர்ப்பித்ததை அனுபவித்தோமல்லவா! இங்கு ஸாதகன், அம்பிகைக்கு, பசுவின் நெய்யால் ஆன தீபங்களை அற்ப்பிக்கிறான். பசுவின் (கோ) கிடைக்கும் எல்லாப்பொருளுமே பவித்ரமாக கருதப்படுகிறது, மந்திர உச்சாடனத்தோடு, பசுவின் பால், தயிர், நெய், சாணம், மூத்திரம் கலந்தது பன்சகவ்யமாகும். இது, சேவித்தவரின் பாவத்தையெல்லாம் பருகியவுடன் நிவர்த்திக்கிறது என்கின்றன வேதங்கள்.

அம்பிகை ஸ்ரீ மஹா திரிபுரசுந்தரியின் இருப்பிடத்தைப் பற்றி “பாகம் 1”ல் கண்டிருந்தோம். அந்த மஹா மண்டபத்தில் எவ்வளவு தீபமேற்றினாலும் ஒரு குறிப்பிட்ட தூர அளவே வெளிச்சம் இருக்கும், ஆயின், அம்பிகையின் பவனமோ ரத்தினங்களால் ஆனதன்றோ!, ஆகையால், ஒளிரும் விளக்குகளின் ஒளியை ரத்தினங்களும் பிரதிபலிக்கின்றன. ஆதலால், மண்டபமே ஒளிமயமாக இருக்கிறது.

முன்னமே பார்த்தபடி மண்டபம், தீப தோரணங்களாலும், தீபமேந்திய தங்க பதுமைகளாலும் ஒளியூட்டப்படுகிறது. அவ்வொளியாலும், அவ்வொளியின் பிரதிபலிப்பாலும் அம்பிகையையும், அம்பிகையின் மண்டபத்தையும் ஒளி வெள்ளத்தில் ஆழ்த்துகிறது. ஆயினும், ஸாதகன், ஒன்றை தெரிந்துகொள்கிறான். அது என்னவென்றால், ஒளியேயான அம்பிகை இல்லேல் ஒளியேது? என்று. இதையே நாம், “ப்ரகாஸ விமர்ஷ மஹாமாயா ஸ்வரூபிணி” என்கிறோம்.

இது கதா உபனிஷத்தில் விரிவாக உறைக்கப்பட்டுள்ளது. இதில் (II.ii.15) ப்ரம்மத்தின் முன் சூரிய, சந்திர, நக்ஷத்திர, மின்னல் உள்பட எவரும் ஜ்வலிப்பதில்லை, ப்ரகாசிப்பதில்லை, எல்லாம் ப்ரம்மத்தின், ப்ரம்ம தேஜஸான ஒளியின் பிரதிபலிப்பே என்று.

இந்த வெளிச்சமாவது, ஸாதகனின், அகக்கண்ணை திறக்கிறது. இங்கு, ஸாதகனுக்கு, அம்பிகையை, அம்பிகையின் ரூபத்தை, மனதில் ஸ்மரித்தாலே போதுமானது, அம்பிகையை தவமிருந்து அடைய வேண்டியதில்லை என்று.  ஆம், ஸ்மரணையிலே சித்திக்கும் தாயிடம் தவமிருத்தல் வேண்டுமோ!  இத்தருணம், அம்பிகை, ஸாதகனின் உள்ளத்தில் ஒளிர்ந்து, ஸாதகனை அளவிலா பேரின்பத்தில் ஆழ்த்துகிறாள்.

இப்படியாக, ஸ்ரீ சங்கரரின் ஆராதனையால், சங்கரரை ஆட்கொண்டு பரமானந்த பேரின்பத்தை அடைய வைத்த அம்பிகையையும், சங்கரரையும் பாதம் பணிந்து அடுத்த பதிவிற்கு செல்வோமா!

 

“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |

ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||

சுபம்

இந்த வலைப்பூவில் குறிப்பிட்டிருக்கும் ப்ரயோகம், செய்முறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்

ஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு தேவையான மந்திரம், யந்திரம், தந்திரத்தை தகுதி அனுசரித்து அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan [at] yahoo [dot] com, அலைபேசி:- +91 92454 46956, whatsapp:- +91 96774 50429

This entry was posted in मन्त्रमातृकापुष्पमालास्तवः, மந்த்ர மாத்ருகா புஷ்பமாலாஸ்தவம், மந்த்ரமாத்ருகா புஷ்பமாலா ஸ்தவம், மந்த்ரமாத்ருகாபுஷ்பமாலாஸ்தவம், ஸ்ரீ வித்யா தந்த்ரம்,, Uncategorized and tagged , , , , , , , , , . Bookmark the permalink.