Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | மந்த்ரமாத்ருகா புஷ்பமாலா ஸ்தவம் | பாகம் – 9

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||

ஒம்

ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம:

|| க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

மந்த்ரமாத்ருகா புஷ்பமாலா ஸ்தவம் | मन्त्रमातृकापुष्पमालास्तवः

பாகம் – 9

हन्तारं  मदनस्य नन्दयसि यैरङ्गैरनङ्गोज्ज्वलैः

यैर्भृङ्गावलिनीलकुन्तलभरैर्बध्नासि तस्यशयम्।

तानीमानि तवाम्ब कोमलतराण्यामोदलीलागृहाण्यामोदाय

दशाङ्गगुग्गुलुघृतैर्धूपैरहं धूपये॥

***

hantāraṁ  madanasya nandayasi yairaṅgairanaṅgojjvalaiḥ

yairbhṛṅgāvalinīlakuntalabharairbadhnāsi tasyaśayam|

tānīmāni tavāmba komalatarāaṇyāmodalīlāgṛhāṇyāmodāya

daśāṅgaguggulughṛtairdhūpairahaṁ dhūpaye||

***

ஹந்தாரம்மதஸ்யநந்தயஸியைர் அங்கைர்அனங்கோஜ்வலை:

யைர்ப்ருங்காவலிநீலகுந்தலபரைர்பத்னாஸிதஸ்யாசயம் |

தானீமானிதவாம்பகோமலதரான் யாமோதலீலாக்ருஹான்

யாமோதாயதசாங்ககுக்குலுக்ருதைர் தூபைர்அஹம்தூபயே ||

***

ஸ்ரீ திரிபுராம்பிகையின் அதிரஹஸ்யமான பஞ்சதஸியின் காமராஜ கூடம் (எ) மத்யகூடத்தின் மூன்றாம் எழுத்து –

“அம்பிகே! பலவகையான வாசனைப்பொருள்கள், மருத்துவ மூலிகைப் பொருள்கள், தசாங்கம், குங்கிலியம் போன்றவற்றைக் கலந்து, மன்மதனை எரித்த சிவனும் மோகிக்கும் உன் அங்கங்களுக்கும் அவனைக் கவரும் கூந்தலுக்கும் தூபம் காட்டுகிறேன்.”

ஒரு சமயம், காமதேவன் எனப்படும் மன்மதன், பரசிவனார், பார்வதியை மோஹிக்க சிவன்மேல் மலர்க்கணை தொடுக்க, சிவன் சினக்க, பஸ்மமான காமதேவனை, உயிர்ப்பிக்க காமதேவனின் மனைவி ரதிதேவி அம்பிகையை சரணடைய, அம்பிகையின் அருளால் உயிர்ப்பெற, தேகமில்லாமல், காமன் உருப்பெற, காரணமாயிருந்ததாலோ என்னமோ, காமதேவன் அம்பிகைக்கு யாரும் அளவிடமுடியாத அழகை வாரி வழங்கினான் என்றால் மிகையாகாது, இயற்கையிலேயே அம்பாளுக்கு, ப்ரக்ருதி (இயற்கை) என்ற நாமமும் உண்டல்லவா!, இயற்கையோடு அழகு சேரும்பொழுது, அழகு பேரழகாகவன்றோ பரிமணிக்கிறது!.

ஸாதகன் சிவனையும், சிவனோடிணைந்த பார்வதியையும் சிந்தையில் நிருத்துகின்றான். இப்பொழுது அந்த ஸாதகனுக்கு, ‘அம்பிகையும், ஐய்யனும் ஒன்றே’ என்று புரிய ஆரம்பிக்கிறது. ‘ஒன்றை விட்டு இன்னொன்று தனியாக இயங்குவதில்லை’ என்பதும் நன்கு விளங்குகிறது.  இந்த உயரிய நிலையில், அதாவது ஸஹஸ்ரார சக்கிர பிந்துவில் சிவ-சங்கரி மைதுனம் நடக்கிறது. ‘படைக்கும் தொழில்’ துவங்குகிறது.

அம்பிகையின் ஆராதனையில் தூபமிடல் ஒரு முக்கியமான சடங்காகும். தஸாங்கம் என்பது பத்து விதமான இயற்கை பொருள்கள் கொண்டு தயாரிக்கப்படும் சுவாஸனை திரவ்யமாகும். இந்த பத்து விதமான மூலிகை மற்றும் மரப்பட்டைகள் நன்கு பொடிக்கப்பட்டு, தணலிலிடும்போது, நறுமணமுள்ள புகை வெளிப்படும். இந்த நறுமணப்புகையால், சுற்றுப்புறம் சுத்தியாகும், அதோடு நமது சிந்தையில் உள்ள கெட்ட சிந்தனைகள் நெருப்பு தணலில் எரிந்துபோய் நற்ச்சிந்தனையே மிஞ்சும்.  பகவத்கீதையில் கிருஷ்ணர் சொன்னதாக ஒரு ஸ்லோகம் (|||.37), ‘ரஜோகுணம் எனும், வேட்கை மற்றும், கோபம் இதனுடயே எரிந்து சாம்பலாகட்டும்’ என்று.

ஸாதகன் இப்படியாக தனது மனதையும் தூய்மைப்படுத்திக்கொள்கிறான். தூய்மையுள்ள மனதில் அம்பிகை எப்பொழுதும் இருப்பாளன்றோ!

அற்புதமான, அழகுடன், ஆதிசங்கரர், அம்பிகையின் உடலுக்கும், நீளமான, பரசிவன் மோஹிக்கும் கூந்தலுக்கும் தூபமிட்டதை அவருடனிருந்து கண்டு களிப்புற்றோம் அந்த ஆதிசங்கரருக்கும் அம்பிகைக்கும் வணக்கம் சொல்லிக்கொண்டு அடுத்த பதிவுக்கு காப்போமா?

 

“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |

ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||

சுபம்

இந்த வலைப்பூவில் குறிப்பிட்டிருக்கும் ப்ரயோகம், செய்முறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்

ஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு தேவையான மந்திரம், யந்திரம், தந்திரத்தை தகுதி அனுசரித்து அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan [at] yahoo [dot] com, அலைபேசி:- +91 92454 46956, whatsapp:- +91 96774 50429

This entry was posted in मन्त्रमातृकापुष्पमालास्तवः, குண்டலினி, மந்த்ர மாத்ருகா புஷ்பமாலாஸ்தவம், மந்த்ரமாத்ருகா புஷ்பமாலா ஸ்தவம், மந்த்ரமாத்ருகாபுஷ்பமாலாஸ்தவம், ஸ்ரீ வித்யா தந்த்ரம்,, Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.