Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | மந்த்ரமாத்ருகா புஷ்பமாலா ஸ்தவம் | பாகம் – 8

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||

ஒம்

|| க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

 

மந்த்ரமாத்ருகா புஷ்பமாலா ஸ்தவம் | मन्त्रमातृकापुष्पमालास्तवः

பாகம் – 8

कल्हारोत्पलमल्लिकामरुवकैः सौवर्णपङ्केरुहैः

जातीचम्पकमालतीवकुलकैर्मन्दारकुन्दादिभिः।

केतक्या करवीरकैर्बहुविधैः कऌप्ताः स्रजो मालिकाः

संकल्पेन समर्पयामि वरदे संतुष्टये गृह्यताम्॥

***

kalhārotpalamallikāmaruvakaiḥ sauvarṇapaṅkeruhaiḥ

jātīcampakamālatīvakulakairmandārakundādibhiḥ|

ketakyā karavīrakairbahuvieidhaiḥ kaḷuptāḥ srajo mālikāḥ

saṁkalpena samarpayāmi varade saṁtuṣṭaye gṛhyatām||

***

கல்ஹாரோத்பல மல்லிகா மருவகை: ஸௌவர்ண பங்கேருஹை:

ஜாதீ சம்பக மாலதீ வகுலகைர் மந்தார குந்தாதிபி: |

கேதக்யா கரவீரகைர் பஹுவிதை: க்லுப்தா: ஸ்ரஜோ மாலிகா:

ஸங்கல்பேன ஸமர்ப்பயாமி வரதே ஸந்துஷ்டயே க்ருஹ்யதாம் ||

***

ஸ்ரீ திரிபுராம்பிகையின் அதிரஹஸ்யமான பஞ்சதஸியின் காமராஜ கூடம் (எ) மத்யகூடத்தின் மூன்றாம் எழுத்து –

பலவிதமான மலர்களை சூட்டி அம்பிகையை மகிழ்விப்பதை இப்பாடல் குறிப்பிடுகிறது.  செங்கழுநீர், நீலம், மல்லிகை, மருக்கொழுந்து, பொற்றாமரை, ஜாதி மல்லிகை, முல்லை, மகிழம்பூ, மந்தாரை போன்ற மலர்களை சங்கல்பித்து அம்பிகே, உனக்கு மாலைகளாகவும், சரமாகவும், உதிரியாகவும் சமர்ப்பிக்கிறேன். மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வாயாக.

ஸாதகர், அம்பிகைக்கு, மாலைகள் மட்டும் அர்ப்பணிக்கவில்லை, அதோடு கூட சரமாக கோர்த்து முடியில் சூடவும் அளிக்கிறார்.  முடியில் சூடும் புஷ்பமானது, சிரசின் பின்புறமும், முதுகுத்தண்டின் மேலுமாக அமைந்துள்ள சக்கரத்தை பாதுகாக்கிறது.  இந்த சக்கரம் அமைந்துள்ள இடத்தை ஆங்கிலத்தில் MEDULLA OBLANGETA என அழைக்கின்றனர். இதோடு அம்பிகையின் அலங்காரம் முடிகிறது.

பூவுலக மலர்களல்லாது, தேவலோகத்திற்கே உரிய தெய்வீக மலர்களால் அம்மையை, ஆதி பரையை அலங்கரிக்கும் சாதகன், பொருள்களால் ஆன மாயையை விட்டு, அருள்களால் ஆன அம்பிகையின் சாக்ஷாத்காரத்திற்கு தன்னை தயார் செய்து கொள்கிறான். அது காண், அம்பிகையின் தர்ஸன பாக்யமும், மோக்ஷமும் அடைய விழைகிறான்.

 

“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |

ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||

சுபம்

இந்த வலைப்பூவில் குறிப்பிட்டிருக்கும் ப்ரயோகம், செய்முறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்

ஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு தேவையான மந்திரம், யந்திரம், தந்திரத்தை தகுதி அனுசரித்து அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan [at] yahoo [dot] com, அலைபேசி:- +91 92454 46956, whatsapp:- +91 96774 50429

This entry was posted in मन्त्रमातृकापुष्पमालास्तवः, குண்டலினி, மந்த்ர மாத்ருகா புஷ்பமாலாஸ்தவம், மந்த்ரமாத்ருகா புஷ்பமாலா ஸ்தவம், மந்த்ரமாத்ருகாபுஷ்பமாலாஸ்தவம், ஸ்ரீ வித்யா தந்த்ரம்,, Uncategorized and tagged , , , , , , , , . Bookmark the permalink.