Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | மந்த்ரமாத்ருகா புஷ்பமாலா ஸ்தவம் | பாகம் – 7

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||

ஒம்

|| க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

 

மந்த்ரமாத்ருகா புஷ்பமாலா ஸ்தவம் | मन्त्रमातृकापुष्पमालास्तवः

 

பாகம் – 7

 

सर्वाङ्गे घनसारकुङ्कुमघनश्रीगन्धपङ्काङ्कितं

कस्तूर्रितिलकं च फालफलके गोरोचनापत्रकम्।

गण्डादर्शनमण्डले नयनयोः दिव्याञ्चनं तेऽञ्चितं

कण्ठाब्जे मृगनाभिपङ्कममलं त्वत्प्रीतये कल्पताम्॥

***

sarvāṅge ghanasārakuṅkumaghanaśrīgandhapaṅkāṅkitaṁ

kastūrritilakaṁ ca phālaphalake gorocanāpatrakam|

gaṇḍādarśanamaṇḍale nayanayoḥ divyāñcanaṁ te’ñcitaṁ

kaṇṭhābje mṛganābhipaṅkamamalaṁ tvatprītaye kalpatām||

***

ஸர்வாங்கே கனஸார குங்குமகன ஸ்ரீகந்த பங்காங்கிதம்

கஸ்தூரி திலகஞ்ச பாலபலகே கோரோசனா பத்ரகம் |

கண்டாதர்சன மண்டலே நயனயோர் திவ்யாஞ்சனம் தேஅஞ்சிதம்

கண்டாப்ஜே ம்ருநாபி பங்கமமலம் த்வத் ப்ரீதயே கல்பதாம் ||

***

ஸ்ரீ திரிபுராம்பிகையின் அதிரஹஸ்யமான பஞ்சதஸியின் காமராஜ கூடம் (எ) மத்யகூடத்தின் இரண்டாம் எழுத்து –

அம்பிகே! குங்குமப்பூ, நல்வாசனைப் பொருள்கள் சந்தனம் முதலியவற்றுடன் உன் உடலுக்குப் பூச்சாக அணிவிக்கிறேன். கஸ்தூரி, கோரோசனை ஆகியவற்றால் உனது நெற்றியில் திலகம் இடுகிறேன். முகம் பார்க்கும் கண்ணாடியுடன் உனது கண்களில் திவ்வியமான அஞ்சன மையிடுகிறேன். உனது கழுத்துக்குக் கஸ்தூரி அணிவிப்பதாகக் கல்பிக்கிறேன்.

அம்பிகையின் ஸ்னான உபசாரமும், உடையுடுத்தும் வைபவமும், நகை பூணும் வைபவமுமானபின், அம்பிகையை மேலும் அழகு செய்ய, குங்குமப்பூ கலந்த சுத்த சந்தணத்தால் தயாரிக்கப்பட்ட லேபம், உடல் பூச்சாக அணிவிக்கிறேன் அம்மா!, கஸ்தூரி, கோரோஜனம் இழைத்து தாயே உனது அகலமான நெற்றியில் திலகமிடுகிறேன், உன் கண்களுக்கு திவ்யமான அஞ்சன மை தீட்டி மகிழ்கிறேன் தாயே. உனது முளரிபோன்ற திருக்கழுத்திற்கு, கஸ்தூரி லேபமிட்டு அழகுக்கு அழகு சேர்க்கிறேன் அம்மா!

இதில் ஒரு விஷேஷம் என்னவெனில், இவ்வகை அலங்காரங்களை செய்யும்பொழுது, இறைவியும், சாதகனும் மட்டுமே தனித்துள்ளனர், சாதகன் தன் மனதிற்கு பிடித்தவாரு இறைவியை அழகூட்டி ஆராதிக்கிறான்.  இங்கு சங்கரர் அம்பிகையின் நெற்றியை ஒரு பலகைபோல என்றே குறிப்பிடுவதாக உள்ளது, ஆயின் சங்கரரின் சௌந்தர்யலஹரி(46)யில், அட்டமி சந்திர வடிவிலுள்ளது என்றும், அதேபோல் ரஹஸ்ய ஸஹஸ்ரம்(15)லும் குறிப்பிட்டிருப்பதை கவனித்தால், சந்தத்திற்காக சிறு பிழை சேர்த்தாரோ அல்லது குறிப்பு எடுத்தவர் பிழை சேர்த்தாரோ என என்ற கேள்வி எழுகிறது.

இதனோடு இன்னொரு விஷயமும் கூட, ஏதோ, பக்தனாகிய நாம், அம்பிகையை இப்படி ஒவ்வொரு விதமாக அழகு பார்த்து மகிழ, இறைவி அம்பிகையின் இறைவனான காமேஷ்வரன், தானும் குறுஞ்சிரிப்புடன் இதையெல்லாம் அம்பிகையுடன் சேர்ந்தே அனுபவிக்கிறான் அன்றோ! ஏனெனில், அம்பிகையின் வல பாதி காமேஸ்வரன் அன்றோ!  இப்படியாக காமேஷ்வரியை அழகு பார்த்து, ஆராதித்து, அறியாமலே காமேஷ்வரனையும் ஒருசேர ஆராதிக்கிறோம்! இதை விட, பெரும் பாக்கியம் மற்றொன்று ஒன்று உண்டோ? இப்படியாக நம் எல்லோருக்கும் அய்யனையும், அம்பிகையும் ஒரே சமயத்தில் ஆராதிக்க ஆதி சங்கரர் வழி வகுத்திட்டாரே, அவருடன் இணைந்து அம்பிகையை ஆராதிப்பதின் மூலம், சங்கரருக்கு நன்றி சொல்வோமா?

இனி ஒன்று கூட, திருமாலுக்கு, திருப்பதியில் அதிகமான இயற்கைப் பொருள்களே படைப்பதினாலேயே, திருமகள் அங்கு தாண்டவமாடுகிறாள் என்பதையும் மறவாதீர்கள்.  சுமார் 25 முதல் 35 வருடம் முன்பு, அக்ஷயனாம் திருவலநாதன், திருமலைநாதனுக்கு வெள்ளியில் தேர் அளித்த திவ்ய க்ஷேத்ரம் திருவலம். அக்காலகட்டத்தில் மிக செழிப்பாக இருந்த க்ஷேத்ரம் திருவலம். இன்றும், திருவேங்கடமுடையானுக்கு இயற்கையான பொருள்கள் அதிகம் சிலவிடப்படுகிறது, ஆதலின் காண் அங்கு திருமகள் வாசம் செய்கிறாள். ஆயின், திருவலமோ, செயற்கையால் அடிபட்டு, செய்வதறியாது நொந்து நிற்கிறது

இயன்றவரை இறை வழிபாட்டில் இன்ஸ்டன்ட் பொடிகளை உபயோகிப்பதை தவிர்க்க, நலமும் வளமும் பெருகும்

 

“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |

ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||

சுபம்

இந்த வலைப்பூவில் குறிப்பிட்டிருக்கும் ப்ரயோகம், செய்முறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்

ஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு தேவையான மந்திரம், யந்திரம், தந்திரத்தை தகுதி அனுசரித்து அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan [at] yahoo [dot] com, அலைபேசி:- +91 92454 46956, whatsapp:- +91 96774 50429

This entry was posted in मन्त्रमातृकापुष्पमालास्तवः, குண்டலினி, மந்த்ர மாத்ருகா புஷ்பமாலாஸ்தவம், மந்த்ரமாத்ருகா புஷ்பமாலா ஸ்தவம், மந்த்ரமாத்ருகாபுஷ்பமாலாஸ்தவம், ஸ்ரீ வித்யா தந்த்ரம்,, Uncategorized and tagged , , , , , , , . Bookmark the permalink.