Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | மந்த்ரமாத்ருகா புஷ்பமாலா ஸ்தவம் | பாகம் – 6

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||

ஒம்

|| க ஏ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||

जपो जल्पः शिल्पं सकलमपि मुद्राविचरना गतिः प्रादक्षिण्यक्रमणं अशनाद्याहुति विधिः |
प्रणामः संवेशः सुखमखिलमात्मार्पण दृशा सपर्या पर्यायसत्व भवतु यन्मे विलसितं ||

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

 

மந்த்ரமாத்ருகா புஷ்பமாலா ஸ்தவம் | मन्त्रमातृकापुष्पमालास्तवः

பாகம் – 6

हम्सैरप्यतिलोभनीयगमने हारावलीमुज्ज्वलां

हिन्दोलद्युतिहीरपुरिततरे हेमाङ्गदे कङ्कणे।

मञ्चीरौ मणिकुण्डले मकुटमप्यर्धेन्दुचूडामणिं

नासामोक्तिकमङ्गुलीयकटकौ काञ्चीमपि स्वीकुरु॥

***

hamsairapyatilobhanīyagamane hārāvalīmujjvalāṁ

hindoladyutihīrapuritatare hemāṅgade kaṅkaṇe|

mañcīrau maṇikuṇḍale makuṭamapyardhenducūḍāmaṇiṁ

nāsāmouktikamaṅgulīyakaṭakau kāñcīmapi svīkuru||

***

ஹம்ஸைரப்பதிலோபனீயகமனே ஹாரவலீம்உஜ்வலாம்

ஹித்தோலத்யுதிஹீரபூரிததரே ஹேமாங்கதேகங்கணே |

மஞ்சீரௌமணிகுண்டலேமகுடம் அப்யர்த்தேந்துசூடாமணிம்

நாஸாமௌக்திகம்அங்குலீயகடகௌ காஞ்சீமபிஸ்வீகுரு ||

***

ஸ்ரீ திரிபுராம்பிகையின் அதிரஹஸ்யமான பஞ்சதஸியின் மத்யகூடத்தின் முதல் எழுத்து

இந்தப் பாடலில் வெவ்வேறு விதமான ஆபரணங்களை அம்பிகைக்கு அணிவித்தலைக் குறிப்பிடுகின்றது. கடகம், வாகுவளையம், கங்கணம், பாதகிங்கிணி, மணிகுண்டலம், மகுடம், முத்து மூக்குத்தி – பில்லாக்கு, பொன் மோதிரம், சூடாமணி, இடையணி முதலியவற்றை நான் உனக்கு (மானசீகமாக) அணிவிப்பதை நீ ஏற்றுக்கொள்வாயாக.

இந்த பாடலில் ஸாதகன், அழகு மிளிரப் பட்டுடுத்தி அன்னம் நாண நடைபயின்று ஆஸனத்தில் அமர்ந்த அன்னைக்கு, ஆபரணங்கள் சேர்த்து அழகு பார்க்கிறான்.  பலவிதமான ஹாரங்கள், முத்து, ஸ்வர்ணம், ரத்தினம் சேர்த்திழைத்து தயாரித்ததை அம்பிகைக்கு அணிவித்து அழகு பார்க்கிறான்.  இது ஸாதகனுக்கு மகிழ்வை தரவில்லை, ஆகையால் அம்பிகையின் கைகளுக்கு கங்கணம் அணிவித்து மகிழ்கிறான். நவ ரத்தினங்களாலும், தங்கத்தாலும் செய்த வளையல்களை அம்பிகைக்கு அணிவித்து அழகு பார்க்கிறான்.  காதிற்க்கு மணிகுண்டலங்களும், சிரசில் கிரீடமும், சிந்தாமணி ரத்தினத்தினாலும், அட்டமி யன்று தோன்றும் பிறை போன்ற நெற்றிச்சூடியையும் அணிவிக்கிறான். சம்பக புஷ்பத்தைப்போன்று பேரழகுடைய பெருமாட்டிக்கு, மூக்குத்தியும் பில்லாக்கும் எழில் கொஞ்சும் ரத்தினத்தில் செய்திட்டு சூடி மகிழ்கிறான்.

இந்த உபசாரங்களை அம்பிகைக்கு மனதளவில் ஈடுபாடோடு, பக்தியோடு செய்யும் ஸாதகன், அம்பிகையை நேரில் கண்ட அனுபவத்துடன் ஆனந்த கண்ணீர் மல்க அம்பிகையை துதிப்பதை யாம் உணர முடிகிறது.

ஆதி சங்கரர், கண்டிப்பாக, இந்த உபசாரத்தின்போது, அம்பிகையை ப்ரத்யக்ஷமாக, தர்ஸித்திருப்பார் என தீர்மானமாக சொல்லலாம். நாமும் அன்னாரது ஆசியுடன் அம்பிகையை தரிசிப்போமா!

***

“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |

ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||

சுபம்

இந்த வலைப்பூவில் கொடுக்கப்படும் முன்னோர்கள் அருளிய வேதம், வேத தழுவல், வேத மந்திரங்கள், உபனிஷத், பாஷ்யம், பாஷ்ய தழுவல், விரிவுரைகள், ஸ்லோகம், ஸ்தோத்ரம், அவற்றின் யந்திரங்கள், அதற்குறிய தந்திரங்கள் முதலியன, எவர் ஒருவடைய தனிப்பட்ட சொத்தும் அல்ல. நமது மூதாதையர்கள் அவர்தம் தவ பலத்தால் அறிந்ததேயாகும். அவர்கள் லோக கல்யாணத்திற்காக அவையெல்லாவற்றையும் நமக்கு அளித்தனர். இவற்றின் ப்ரயோக விதி, வழிபாடுமுறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” அவள் அனுக்ரஹத்தால், வழிகாட்டுதலால் கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்!

ஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு தேவையான எளியோன் அறிந்த மந்திரம், யந்திரம், தந்திரம், விதிமுறைகள், வேண்டுபவரின் தகுதி அனுசரித்து அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan [at] yahoo [dot] com, அலைபேசி:- +91 92454 46956, Whats App:- +91 96774 50429

This entry was posted in मन्त्रमातृकापुष्पमालास्तवः, குண்டலினி, மந்த்ர மாத்ருகா புஷ்பமாலாஸ்தவம், மந்த்ரமாத்ருகா புஷ்பமாலா ஸ்தவம், மந்த்ரமாத்ருகாபுஷ்பமாலாஸ்தவம், ஸ்ரீ வித்யா தந்த்ரம்,, Uncategorized and tagged , , . Bookmark the permalink.