Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | மந்த்ரமாத்ருகா புஷ்பமாலா ஸ்தவம் | பாகம் – 5

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||

ஒம்

|| க ஏ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||

जपो जल्पः शिल्पं सकलमपि मुद्राविचरना गतिः प्रादक्षिण्यक्रमणं अशनाद्याहुति विधिः |
प्रणामः संवेशः सुखमखिलमात्मार्पण दृशा सपर्या पर्यायसत्व भवतु यन्मे विलसितं ||

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

 

மந்த்ரமாத்ருகா புஷ்பமாலா ஸ்தவம் | मन्त्रमातृकापुष्पमालास्तवः

பாகம் – 5

ह्रींकाराङ्कितमन्त्रलक्षिततनो हेमाचलात्संचितैः

रत्नौरुज्ज्वलमुत्तरीयसहितं कौसुम्भवर्णांशुकम्।

मुक्तासंततियज्ञसूत्रममलं सौवर्णतन्तूद्भवं

दत्तं देवि धिया मयैतदखिलं संतुष्टये कल्पताम्॥

***

hrīṁkārāṅkitamantralakṣitatano hemācalātsaṁcitaiḥ

ratnaurujjvalamuttarīyasahitaṁ kausumbhavarṇāṁśukam|

muktāsaṁtatiyajñasūtramamalaṁ sauvarṇatantūdbhavaṁ

dattaṁ devi dhiyā mayaitadakhilaṁ saṁtuṣṭaye kalpatām||

***

ஹ்ரீங்காராங்கிதமந்த்ரலக்ஷிததநோ ஹேமாசலாத்ஸஞ்சிதை:

ரத்னௌருஜ்வலம்உத்தரீயஸஹிதம் கௌஸும்பவர்ணாம்சுகம் |

முக்தாஸந்ததியஜ்ஞஸூத்ரமமலம் ஸௌவர்ணதந்தூத்பவம்

தத்தம்தேவிதியாமயைததகிலம் ஸந்துஷ்டயேகல்பதாம் ||

 ***

ஸ்ரீ திரிபுராம்பிகையின் அதிரஹஸ்யமான பஞ்சதஸியின் வாக்பவகூடத்தின் ஐந்தாம் எழுத்து – ஹ்ரீம்

ஹ்ரீங்கார மந்திரத்தையே உடலாகக் கொண்டவளே! பார்வதியே! மணிக்கற்களால் பிரகாசிக்கும் உத்தரீயத்துடன் செந்நிற ஆடையும் பொற்தந்தியில் கோக்கப்பட்ட முத்துக்களால் ஆகிய பூணூலையும் உனக்கு சமர்ப்பிப்பதாகக் கல்பிக்கிறேன்.

ஸாதகன், தனக்காக இங்கு எதையும் யாசிப்பதில்லை, முக்தியைக்கூட, எல்லாவற்றையும் அம்பிகையை சந்தோஷப்படுத்தவே அர்ப்பணிக்கிறான். அம்பிகையின் மேல் அளவில்லா பற்றினாலே இந்த உபசாரங்களை செய்கிறான்.  அதுவும் அந்த ஸாதகன் இருந்த இடத்திலேயே, மானசீகமாக மேரு பர்வதம் சென்று, விலைமதிப்பற்ற முத்து ரத்தினங்களையும், வேறு வேறு இடங்களில் சென்று பல பூஜைப்பொருட்களை சேகரிக்காமல், மனதிலேயே அவற்றையெல்லாம் உருவாக்கி அம்பிகைக்கு அர்ப்பணிக்கிறான். இதனால் அந்த ஸாதகனுக்கு, அம்பிகையிடத்தில் மனம் ஒன்றிட / சிலவிட அதிக நேரம் கிடைக்கிறது அல்லவா?

ஒருவழியாக அம்பிகைக்கு ரத்தினங்களால் இழையப்பட்ட உத்தமமான செம்பட்டு ஆடையை ஸ்ரீ ஆதிசங்கரிரின் துணையோடு உடுத்திவிட்டோம், அன்னையை அலங்கரிப்போமா, அடுத்த பதிவில்!

இதிலெல்லாம் ஒரு விஷேஷம் கவனித்தீர்களா!.  ஆண்டவன், நமக்கு அளிப்பதில் எதிலுமே கலப்படம் என்ற சொல்லுக்கே இடமில்லை.  ஆயின் நாம் ஆண்டவனுக்கு அளிக்கும் எல்லா பொருளுமே கலப்படம். கற்ப்பூரம் என்றால், அதில் நாஃப்தா கலந்திருக்கிறது, நெய் என்றால் கொழுப்பும், கலரும், ஏன் டால்டா கூட கலந்திருப்பார்கள். எண்ணெய், சொல்ல வேண்டியதே இல்லை! இப்படி கலப்படமான பொருள்களை இறைவிக்குப்படைத்து, “அம்பா என்னால் இயன்ற வரை சுத்தமாக செய்துவிட்டேன்” மற்றவை உன் பொறுப்பு என்று பயந்து படைப்பதை விட எனக்கு, மானஸ பூஜையே மேலானதாகப்படுகிறது. சுத்தமான மனதும், உண்மையான பக்தியும் மனதிலிருந்தால், அன்னை அங்கிருப்பாள் அன்றோ!

“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |

ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||

சுபம்

இந்த வலைப்பூவில் கொடுக்கப்படும் முன்னோர்கள் அருளிய வேதம், வேத தழுவல், வேத மந்திரங்கள், உபனிஷத், பாஷ்யம், பாஷ்ய தழுவல், விரிவுரைகள், ஸ்லோகம், ஸ்தோத்ரம், அவற்றின் யந்திரங்கள், அதற்குறிய தந்திரங்கள் முதலியன, எவர் ஒருவடைய தனிப்பட்ட சொத்தும் அல்ல. நமது மூதாதையர்கள் அவர்தம் தவ பலத்தால் அறிந்ததேயாகும். அவர்கள் லோக கல்யாணத்திற்காக அவையெல்லாவற்றையும் நமக்கு அளித்தனர். இவற்றின் ப்ரயோக விதி, வழிபாடுமுறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” அவள் அனுக்ரஹத்தால், வழிகாட்டுதலால் கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்!

ஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு தேவையான எளியோன் அறிந்த மந்திரம், யந்திரம், தந்திரம், விதிமுறைகள், வேண்டுபவரின் தகுதி அனுசரித்து அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan [at] yahoo [dot] com, அலைபேசி:- +91 92454 46956, Whats App:- +91 96774 50429

This entry was posted in मन्त्रमातृकापुष्पमालास्तवः, குண்டலினி, மந்த்ர மாத்ருகா புஷ்பமாலாஸ்தவம், மந்த்ரமாத்ருகா புஷ்பமாலா ஸ்தவம், மந்த்ரமாத்ருகாபுஷ்பமாலாஸ்தவம், ஸ்ரீ வித்யா தந்த்ரம்,, Uncategorized and tagged , , , , , , , . Bookmark the permalink.