Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | மந்த்ரமாத்ருகா புஷ்பமாலா ஸ்தவம் | பாகம் – 4

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||

ஒம்

|| க ஏ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||

जपो जल्पः शिल्पं सकलमपि मुद्राविचरना गतिः प्रादक्षिण्यक्रमणं अशनाद्याहुति विधिः |
प्रणामः संवेशः सुखमखिलमात्मार्पण दृशा सपर्या पर्यायसत्व भवतु यन्मे विलसितं ||

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

மந்த்ரமாத்ருகா புஷ்பமாலா ஸ்தவம் | मन्त्रमातृकापुष्पमालास्तवः

பாகம் – 4

लक्ष्ये योगिजनस्यरक्षितजगज्जाले विशालेक्षणे

प्रालेयाम्बुपटीर  कुङ्कुमलसत्कर्पूरमिश्रोदकैः।

गोक्षीरैरपि नारिकेलसलिलैः शुद्धोदकैर्मन्त्रितैः

स्नानं देवि धिया मयैतदखिलं कल्पताम्॥

***

lakṣye yogijanasyarakṣitajagajjāle viśālekṣaṇe

prāleyāmbupaṭīra  kuṅkumalasatkarpūramiśrodakaiḥ|

gokṣīrairapi nārikelasalilaiḥ śuddhodakairmantritaiḥ

snānaṁ devi dhiyā mayaitadakhilaṁ kalpatām||

***

லக்ஷ்யே யோகிஜனஸ்யரக்ஷிதஜகஜ்ஜாலே விசாலேக்ஷணே

ப்ரளெயாம்புபடிர குங்குமலசகர்பூரமிஸ்ரொடகை: |

கோக்சீரைரபி நாரிகேளசலிலைய: சுத்தோதகைர்மந்த்ரிதை:

ஸ்னானம் தேவி திய மயைதகிலம் கல்பதாம் ||

 

ஸ்ரீ திரிபுராம்பிகையின் அதிரஹஸ்யமான பஞ்சதஸியின் வாக்பவகூடத்தின் நான்காம் எழுத்து –

அம்பிகையே, அகில லோக ரக்ஷாகரீ, யோகிகள் அடைய விழயும் பரமானந்தியே, ஜெகஜ்ஜாலே, இந்த எழியோன், உனது ஸ்னானத்திற்காக மனதால் அர்ப்பணிக்கும் சுகந்த் பன்னீர், சந்தணம், மஞ்சள், சுத்தமான கற்பூரம் கலந்த நீர், மற்றும் கோவின் அமிர்தமாம் சுத்தமான பால், இளநீர் மற்றும் வேதமந்திரங்களால் புனிதப்படுத்தப்பட்ட சுத்த ஜலம் ஆகியவற்றை அங்கீகரித்து ஏற்றருள்வாயாக! இவைகளினால் உனது மனம் குளிரட்டும்.

அம்பிகையின் இருப்பிடமான மணித்வீபத்தையும், ஆஸனத்தின் இருப்பிடமாக கூறப்பட்டுள்ள ஏழு நிலை கோபுர முள்ள ஆயிரங்கால் பவனமும், (இந்த ஏழு நிலை என்பதை மூலாதார சக்ரம் முதல் ஸஹஸ்ரார சக்ரம் வரையில் என்றும் பொருள் கொள்ளலாம்). சிம்ஹ ஆஸனமும், பாத்யம் முதல் ஆசமனம் வரை அளித்த பின் இப்பொழுது அம்பிகைக்கு, ஸ்னானம் அர்ப்பணிக்கப்படுகிறது.  சங்கரர், ஆதிபரையான அம்பிகையே, யோகிகள் அடையத்துடிக்கும் பதகமலம் என்கிறார் ஏனென்றால், அம்பிகையால் மட்டுமே ஸாதகனை சிவனிடம் சேர்க்கமுடியும், லலிதா ரஹஸ்ய சஸஹஸ்ரத்தில் 727-வது நாமம் “சிவ ஞானப்ரதாயினி” என்பதாகும்.  ஆகையால் அம்பிகையால் மட்டுமே சிவ ஞானத்தை அருளமுடியும். அம்பிகையின் பரிபூரண அருட்கடாட்சம் கிட்டிய பின்னரே, சிவனின் கடாட்சம் பெறமுடியும்.  சிவனால் மட்டுமே ஜீவனை ஜீவன் முக்தனாக்கமுடியும், அல்லாது சிவனுடன் இணைய முடியும்.  ஆகையாலே சங்கரர், அம்பாளை “யோகிஜன லக்ஷ்யே” என்கிறார்

இந்த சுவாசனை திரவியங்களானது மனதால் கல்பிக்கப்படுவதால், அவை மிகுந்த, உயர்ந்த, தரத்தோடு கூடியவைகளாகின்றன.  பாலும், இளநீரும், குளிர்ச்சி உண்டு செய்பவை, சந்தணமும், பன்னீரும் கூட.  இதன் காரணம் யாதெனில், சிவெயெனப்படும் சிவ பத்னியானவள், எப்பொழுதும் பல கோடி சூரியனுக்கு இணையான ப்ரகாசத்தோடு சிவனோடு இணைந்திருக்கிறாள், (காலாக்னி ருத்ராய எனும் ஸ்ரீ ருத்ரத்தை கவனிக்க) அப்பிரகாசத்திற்கு உண்டான சூடும் இருக்குமல்லவா!, ஸாதகனால் அவ்வளவு வெப்பமான அம்பிகையை நெருங்க முடியுமா? ஆகையினாலேயே அம்பிகையை குளிர்விக்கிறான். முடிவாக அம்பிகைக்கு வேத மந்திரங்களால் புனிதப்படுத்தப்பட்ட சுத்த ஜலத்தால் அபிஷேகிக்கிறான். வேத மந்திரங்களால் ஏன் நீர் புனிதப்படுத்தல் வேண்டும்? வேதமே அம்பிகையிடமிருந்தே வந்தவை தானே! (லலிதா ரஹஸ்ய ஸஹஸ்ரம் 338) என்றால், இங்கு அளிக்கப்படும் உபசாரங்கள், ஆலயங்களில், கோவில்களில் நடப்பதைக் கொண்டே தீர்மானிக்கப்படுகிறது, அதுபோலவே ஸாதகனும் அம்பிகையை ஆராதிக்க விழைகிறான்.  இது ஸாதகனின் மன மாற்றத்தையே குறிக்கிறது. ஸாதகன், சிந்தையில் அம்பிகையை இருத்தி சிந்தையாலே வழிபடத் துவங்கிவிட்டான் அன்றோ! முக்திக்கு மார்கம் கண்டு கொண்டான் அன்றோ!

அருந்தவச்செல்வர், ஆதிசங்கரர், அம்பிகையை ஆராதிக்க, நாமும் ஆராதனையில் பங்கெடுக்க, கண்டு களிக்க, என்ன தவம் செய்தோமோ!

 ****

“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |

ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||

சுபம்

இந்த வலைப்பூவில் கொடுக்கப்படும் முன்னோர்கள் அருளிய வேதம், வேத தழுவல், வேத மந்திரங்கள், உபனிஷத், பாஷ்யம், பாஷ்ய தழுவல், விரிவுரைகள், ஸ்லோகம், ஸ்தோத்ரம், அவற்றின் யந்திரங்கள், அதற்குறிய தந்திரங்கள் முதலியன, எவர் ஒருவடைய தனிப்பட்ட சொத்தும் அல்ல. நமது மூதாதையர்கள் அவர்தம் தவ பலத்தால் அறிந்ததேயாகும். அவர்கள் லோக கல்யாணத்திற்காக அவையெல்லாவற்றையும் நமக்கு அளித்தனர். இவற்றின் ப்ரயோக விதி, வழிபாடுமுறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” அவள் அனுக்ரஹத்தால், வழிகாட்டுதலால் கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்!

ஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு தேவையான எளியோன் அறிந்த மந்திரம், யந்திரம், தந்திரம், விதிமுறைகள், வேண்டுபவரின் தகுதி அனுசரித்து அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan [at] yahoo [dot] com, அலைபேசி:- +91 92454 46956, Whats App:- +91 96774 50429

This entry was posted in मन्त्रमातृकापुष्पमालास्तवः, மந்த்ர மாத்ருகா புஷ்பமாலாஸ்தவம், மந்த்ரமாத்ருகா புஷ்பமாலா ஸ்தவம், மந்த்ரமாத்ருகாபுஷ்பமாலாஸ்தவம், ஸ்ரீ வித்யா தந்த்ரம்,, Uncategorized and tagged , , , , . Bookmark the permalink.