Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | மந்த்ரமாத்ருகா புஷ்பமாலா ஸ்தவம் | பாகம் – 3

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||

ஒம்

|| க ஏ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||

जपो जल्पः शिल्पं सकलमपि मुद्राविचरना गतिः प्रादक्षिण्यक्रमणं अशनाद्याहुति विधिः |
प्रणामः संवेशः सुखमखिलमात्मार्पण दृशा सपर्या पर्यायसत्व भवतु यन्मे विलसितं ||

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

|| மந்த்ரமாத்ருகா புஷ்பமாலா ஸ்தவம் | मन्त्रमातृकापुष्पमालास्तवः ||

பாகம் – 3

ईशानादिपदं शिवैकफलकं रत्नासनं ते शुबं

पाद्यं कुङ्कुमचन्दनादिभरितैरर्घ्यं सरत्नाक्षतैः।

शुद्धैराचमनियकं तव जलैर्भक्त्या मया कल्पितं

कारुण्यामृतवारिधे तदखिलं संतुष्टये कल्पताम्॥

***

īśānādipadaṁ śivaikaphalakaṁ ratnāsanaṁ te śubaṁ

pādyaṁ kuṅkumacandanādibharitairarghyaṁ saratnākṣataiḥ|

śuddhairācamaniyakaṁ tava jalairbhaktyā mayā kalpitaṁ

kāruṇyāmṛtavāridhe tadakhilaṁ saṁtuṣṭaye kalpatām||

***

ஈஸானாதிபதம் சிவைகபலகம் ரத்னாஸனம் தே சுபம்

பாத்யம் குங்கும சந்தனாதிபரிதைர் அர்க்யம் ச ரத்னாக்ஷதை: |

சுத்தைராசமாணிக்யம் தவ ஜலைர்பக்த்யா மயா கல்பிதம்

காருண்யாம்ருதவரிதே ததகிலம் ஸந்துஷ்டயே கல்பதாம் ||

***

ஸ்ரீ திரிபுராம்பிகையின் அதிரஹஸ்யமான பஞ்சதஸியின் வாக்பவகூடத்தின் மூன்றாம் எழுத்து – ஈ

அம்பிகையின் ஆராதனை க்ரமங்களில், ஷோடசோபசார பூஜை எனும் க்ரமத்தில் முதல் நான்கு உபசாரங்கள் இங்கு விளக்கப்பட்டுள்ளது. ஆதிபரையாம் அம்பிகையின் இருப்பிடமும், அம்பாளின் திரு உருவ ஸ்மரணையும், மனதில் நிலை நிருத்தலும் முதல் இரு பாக்களில் இருந்தவையாகும்.  ஸாதகன், கேந்த்ர பிந்துவில் அம்பிகையை ஆசனத்தில் அமர்த்தியபின், அம்பிகையை மேலும் மனதில் ஆராதிக்கிறான்.

சங்கரர் அம்பிகையை “காருண்யாம்ருதவரிதே” காருண்யக்கடலே என பொருள் கொள்ளலாமோ!  இதை இருவிதமாக அணுகலாம். ஒன்று பகுதி 1ல் கண்டது போல், அமிர்தக்கடல், மற்றொன்று, “அ-ம்ருத” என்றால் அழிவில்லாத, அல்லது இறப்பற்ற, பேரழகுடைய, மற்றும், ஸாஸ்வத:, இந்த இரு வகை பொருளும், அம்பிகைக்கு பொருத்தமானதே. வரிதே எனில், கடலே. பக்தர்பால், அம்பிகையின் அளவற்ற காருண்யத்தை இது காட்டுகிறது. தவறல்லவே, அம்பிகையே “ஸ்ரீ மாதா” வாயிற்றே!.

“ஈஸானாதிபதம் சிவைகபலகம்” என்று அம்பிகையின் இருக்கையை வர்ணிக்கிறார் சங்கரர். அம்பாளுடைய ஆஸனத்தின் கால்களாக பிரமன், விஷ்ணு, ருத்திரன் மற்றும் மஹாதேவனிருக்க, இருக்கைப் பலகையாக சதாசிவனுமிருப்பர். இதை விரிவாக லலிதா ரஹஸ்ய ஸஹஸ்ரம் நாமம் 249-ல் “பஞ்சப்ரேதாஸனாஸீனா” ல் தெரிவிக்கிறது.  ஐந்து ப்ரேதங்களாவன, முறையே பிரமன், விஷ்ணு, ருத்திரன், மஹாதேவன் மற்றும் சதாசிவன். பிரமன் உருவாக்குகிறான், விஷ்ணு காக்கிறான், ருத்ரன் அழிக்கிறான், மஹாதேவன் அழிந்ததை மறைக்கிறான் (திரோதானம்) சதாசிவனோ மறுபடியும் உயிர்ப்பிக்கிறான் (அனுக்ரஹம்).  இவ்வைவரும், தத்தமது ஸக்திகளாலேயே, தத்தம் பணிகளை குறைவின்றி பணிக்கின்றனர்.  அவர் தம் ஸக்தியை (அ) லலிதாம்பிகையின் பலவேறு பரிணாமங்களை இழந்தாரெனில், சர-த்தன்மையிலிருந்து ஸ்திர-த்தன்மைக்கு உட்பட்டாரெனில், அவர்கள் சவ்மேயன்றோ! வாக்தேவிகள், வேறு எந்த பொருள் படவும் இயற்றவில்லை என்று எண்ணுகிறேன்.  “சௌந்தர்யலஹரி”யும் இதைக் குறிப்பிடுகிறது.  “ஸ்லொகம் ஒன்றில்” சக்தியுடனிருக்கும் சிவனாலேயே சராசரங்களை படைக்க இயலுகிறது, சக்தியிழந்த சிவன் சவமே, ஏனெனில் அவனது அசைவுகள் அனைத்தும் நீயே, நின்னை ஸ்மரிக்கும் புண்யத்தை மறந்தால், சக்தியை இழந்து சவமாகிறான் என்கிறது, மற்றும், பிரமன், விஷ்ணு, சிவன் மற்றும் மற்றெல்லா தேவர்களாலும் நீயே போற்றப்படுபவளாகிராய், என்கிறது.

இப்படியாக அம்பிகைக்கு “சுபம்” எனும் ரத்தினங்களால் ஆக்கப்பட்ட ஆஸனம் அளிக்கப்படுகிறது. ஆஸனம் மட்டுமா “சுபம்”, அம்பிகையின் அடுத்துள்ள அத்தனையுமே சுபமேயன்றோ!

இப்படியாக ஸாதகன் அம்பிகைக்கு அளிக்கப்பட்ட ஆஸனத்தில், அம்பிகை எழில் கொஞ்ச, கம்பீரமாக வீற்றிருக்க, அம்பிகைக்கு இரண்டாவது உபசாரமாக அம்பிகையின் திருக்கமலங்களுக்கு “பாத்யம்” சமர்ப்பிக்கப்படுகிறது, பாத்யம் என்பது கால் அலம்புவதற்கன்று, ஸாதகன் மரியாதை நிமித்தமாக ரத்தினங்கள், சுப லக்ஷணமாக அக்ஷதை கலந்த நீரை அம்பிகையின் பாத அரவிந்தத்திற்கு அர்ப்பணிக்கிறான். அடுத்தது “அர்க்யம்” அம்பிகையின் திருக்கரங்களுக்கு, மஞ்சள், சந்தனத்துடன் நறுமணம் கமிழும் நீர் அளிக்கிறான். பின்னர், அம்பிகைக்கு சுத்த நீர் அருந்த கொடுக்கிறான்.  இவை அனைத்தும் பரம பக்தியுடனும் ஸ்ரத்தையுடனும், பணிவுடனும், பரிவுடனும், பாசத்துடனும், அம்பிகை திருப்திப்படுகிற வகையில் (ஸம்ஸ்துத) அமைகிறது.  இக்காரியங்களை செய்வதினால், ஸாதகன் தன் சித்தத்தை தூயதாக்கிக்கொள்கிறான்.  முழு ஈடுபாடுடன் எண்ணத்தில் செயல் படுகிறவனுக்கு, இந்த வரிகளில் குறிப்பிட்ட சுவாசனைகளை வரிகளை உச்சரிக்கும்போதே அனுபவிக்க வைக்கும்.

நால் வகை உபச்சாரங்களை, சங்கரர், திவ்யமாக அம்பிகைக்கு அர்ப்பணித்ததை அருகிலிருந்து கண்டு அனுபவித்தோமல்லவா, நாமும் அப்படியே அம்பிகைக்கு நம்மால் இயன்ற “யதா ஸக்தி” “யத் ஸம்பவ த்ரவ்யேஹி” எனும் கூற்றுப்படி இயன்ற, இருப்பில் உள்ள பொருள்களைக் கொண்டு அம்பிகையை ஆராதித்து அவள் ஆனந்தமுறும் காட்சியினைக் கண்டு களிப்போமா!

 ***

“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |

ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||

சுபம்

இந்த வலைப்பூவில் கொடுக்கப்படும் முன்னோர்கள் அருளிய வேதம், வேத தழுவல், வேத மந்திரங்கள், உபனிஷத், பாஷ்யம், பாஷ்ய தழுவல், விரிவுரைகள், ஸ்லோகம், ஸ்தோத்ரம், அவற்றின் யந்திரங்கள், அதற்குறிய தந்திரங்கள் முதலியன, எவர் ஒருவடைய தனிப்பட்ட சொத்தும் அல்ல. நமது மூதாதையர்கள் அவர்தம் தவ பலத்தால் அறிந்ததேயாகும். அவர்கள் லோக கல்யாணத்திற்காக அவையெல்லாவற்றையும் நமக்கு அளித்தனர். இவற்றின் ப்ரயோக விதி, வழிபாடுமுறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” அவள் அனுக்ரஹத்தால், வழிகாட்டுதலால் கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்!

ஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு தேவையான எளியோன் அறிந்த மந்திரம், யந்திரம், தந்திரம், விதிமுறைகள், வேண்டுபவரின் தகுதி அனுசரித்து அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan [at] yahoo [dot] com, அலைபேசி:- +91 92454 46956, Whats App:- +91 96774 50429

This entry was posted in मन्त्रमातृकापुष्पमालास्तवः, குண்டலினி, மந்த்ர மாத்ருகா புஷ்பமாலாஸ்தவம், மந்த்ர ஸ்வரூபம், மந்த்ரமாத்ருகா புஷ்பமாலா ஸ்தவம், மந்த்ரமாத்ருகாபுஷ்பமாலாஸ்தவம், ஸ்ரீ வித்யா தந்த்ரம்,, Uncategorized and tagged , , , , , , . Bookmark the permalink.