Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | மந்த்ரமாத்ருகா புஷ்பமாலா ஸ்தவம் | பாகம் – 2

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||

ஒம்

|| க ஏ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||

जपो जल्पः शिल्पं सकलमपि मुद्राविचरना गतिः प्रादक्षिण्यक्रमणं अशनाद्याहुति विधिः |
प्रणामः संवेशः सुखमखिलमात्मार्पण दृशा सपर्या पर्यायसत्व भवतु यन्मे विलसितं ||

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

 

மந்த்ரமாத்ருகா புஷ்பமாலா ஸ்தவம் | मन्त्रमातृकापुष्पमालास्तवः

பாகம் – 2

एणाङ्कानलभानुमण्डललसच्छ्रीचक्रमध्ये सिथतां

बालार्कद्युतिभासुरां करतलैः पशांकुशौ बिभ्रतीम्।

चापं बाणमपि प्रसन्नवदनां कौसुम्भवस्त्रान्वितां

तां त्वां चन्द्रकलावतंसमकुटां चारुस्मितां भावये॥

***

 eṇāṅkānalabhānumaṇḍalalasacchrīcakramadhye sithatāṁ

bālārkadyutibhāsurāṁ karatalaiḥ paśāṁkuśau bibhratīm|

cāpaṁ bāṇamapi prasannavadanāṁ kausumbhavastrānvitāṁ

tāṁ tvāṁ candrakalāvataṁsamakuṭāṁ cārusmitāṁ bhāvaye||

***

ஏணாங்கானல பானுமண்டல லச ஸ்ரீ-சக்ரமத்யே ஸிததாம்

பாலார்கத்யுதிபாசுராம் கரதலை: பாஷாங்குசௌ பிப்ரதீம் |

சாபம் பாணமபி ப்ரசன்ன வதனாம் கௌசும்ப வஸ்த்ரான்விதாம்

தாம் த்வாம் சந்த்ரகலாவதம்ச முகுடாம் சாருஸ்மிதாம் பாவயே ||

***

அம்பிகையின் எந்த ஸ்தூல வடிவை ஸாதகன் த்யானம் செய்யவேண்டும் என்பதை இங்கு குறிப்பிடுகின்றார் சங்கரர். அம்பிகையானவள், அக்னி, சூர்யன் மற்றும் சந்திரன் முதலானவர்களுடைய ப்ரகாசத்திற்கும் அதிகமான ப்ரகாசத்துடன் ஸ்ரீ-சக்ர மத்தியில் கேந்த்ர பிந்துவில் ப்ரசன்ன முகத்துடனும், தனது நான்கு கைகளிலும் பாசம் அங்குஷம், சாபம் மற்றும் பாணம் போன்ற திவ்ய அஸ்த்திரங்களுடனும், சிவப்பு பட்டு உடை உடுத்தியும், செவ்வானக்கதிரோன் பொன்ற ஒளியுடன் கூடியும், ப்ரகாசமானவளாயும், மகுடத்தில் சந்திரக்கீற்று எனும் பிறையுடனும் அமர்ந்திருப்பதாக த்யானிக்க கூறுகிறார்.  இந்த வடிவு சௌந்தர்யலஹரியின் 7-பாடலில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இந்த வடிவில் அம்பிகை காமராஜ பீஜமான “க்லீம்”கார ரூபிணியாக, காமகோடியான காமாட்சியாக சித்தரிக்கப்பட்டுள்ளாள். இவ்வடிவையே ஸர்வாபீஷ்ட ப்ரதாயினி ரூபம் என்றும் சர்வாஷா பரிபூரண சக்ரஸ்வாமினி என்றும் அழைப்பார்கள்

ஆதி சங்கரரோடு நாமும், அம்பிகையை இந்த ரூபத்தில் த்யானித்து மனதில் நிலைத்துவோமாக.

****

“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |

ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||

சுபம்

இந்த வலைப்பூவில் கொடுக்கப்படும் முன்னோர்கள் அருளிய வேதம், வேத தழுவல், வேத மந்திரங்கள், உபனிஷத், பாஷ்யம், பாஷ்ய தழுவல், விரிவுரைகள், ஸ்லோகம், ஸ்தோத்ரம், அவற்றின் யந்திரங்கள், அதற்குறிய தந்திரங்கள் முதலியன, எவர் ஒருவடைய தனிப்பட்ட சொத்தும் அல்ல. நமது மூதாதையர்கள் அவர்தம் தவ பலத்தால் அறிந்ததேயாகும். அவர்கள் லோக கல்யாணத்திற்காக அவையெல்லாவற்றையும் நமக்கு அளித்தனர். இவற்றின் ப்ரயோக விதி, வழிபாடுமுறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” அவள் அனுக்ரஹத்தால், வழிகாட்டுதலால் கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்!

ஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு தேவையான எளியோன் அறிந்த மந்திரம், யந்திரம், தந்திரம், விதிமுறைகள், வேண்டுபவரின் தகுதி அனுசரித்து அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan [at] yahoo [dot] com, அலைபேசி:- +91 92454 46956, Whats App:- +91 96774 50429

This entry was posted in मन्त्रमातृकापुष्पमालास्तवः, மந்த்ர மாத்ருகா புஷ்பமாலாஸ்தவம், மந்த்ரமாத்ருகா புஷ்பமாலா ஸ்தவம், மந்த்ரமாத்ருகாபுஷ்பமாலாஸ்தவம், ஸ்ரீ வித்யா தந்த்ரம்,, Uncategorized and tagged , , , , . Bookmark the permalink.