Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | மந்த்ரமாத்ருகா புஷ்பமாலா ஸ்தவம் | பாகம் – 1

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||

ஒம்

|| க ஏ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||

जपो जल्पः शिल्पं सकलमपि मुद्राविचरना गतिः प्रादक्षिण्यक्रमणं अशनाद्याहुति विधिः |
प्रणामः संवेशः सुखमखिलमात्मार्पण दृशा सपर्या पर्यायसत्व भवतु यन्मे विलसितं ||

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

மந்த்ரமாத்ருகா புஷ்பமாலா ஸ்தவம் | मन्त्रमातृकापुष्पमालास्तवः

பாகம் – 1

कल्लोलोल्लसिततामृताब्धिलहरीमध्ये विराजन्मणिद्वीपे

कल्पकवाटिकापरिवृते कादम्बवाट्युज्ज्वले।

रत्नस्तंभसहस्रनिर्मितसभामध्ये विमानोतमे

चिन्तारत्नविनिर्मितं जननि ते सिंहासनं भावये॥

***

kallolollasitatāmṛtābdhilaharīmadhye virājanmaṇidvīpe

kalpakavāṭikāparivṛte kādambavāṭyujjvale |

ratnastaṁbhasahasranirmitasabhāmadhye vimānotame

cintāratnavinirmitaṁ janani te siṁhāsanaṁ bhāvaye ||

***

கல்லோலோல்லாசிததாம்ருதாப்தி லஹரிமத்யே விராஜன் மணித்வீபே

கல்பகவாடிகாபரிவ்ருதே காதம்பவாட்யுஜ்வலே |

ரத்னஸ்தம்ப ஸஹஸ்ர நிர்மித சபாமத்யே விமானோத்தமே

சிந்தாரத்னவினிர்மிதம் ஜனனி தே சிம்ஹாஸனம் பாவயே ||

***

இந்த முதல் நான்கு வரிகளிலேயே ஸ்ரீ ஆதிசங்கரர், ஒரு தீவிரமான ஸாதகனை உருவாக்குவதற்கென்றே படைத்தாரோ!  ஸாதகன் அம்பிகையிடம் கூறுவதாவது “தாயே சிந்தா ரத்தினத்தினால் வடிவமைக்கப்பட்ட ஸிம்ஹாஸனத்தை உனக்கு (அ) உனக்காக சமைத்துள்ளேன்”.  இங்கு அம்பிகையை “ஜனனீ – ஈன்ற தாயே” என்றழைக்கும்போது, நம்மையும் அறியாமல் அம்பாளிடத்தில் ஒரு தனி ஈடுபாடு உண்டாகிறதே! லலிதா ரஹஸ்ய சஹஸ்ரத்திலும் இத்தகைய பதம் முதலிலேயே உள்ளது – “ஸ்ரீ மாதா” என்று.

சிந்தாரத்னம் என்பது ஒரு விலை மதிப்பிட முடியாத, நாம் எதை நினைத்தாலும் உடனே கொடுக்கும் குணமுள்ள ஒரு ரத்தினக்கல் ஆகும். அப்படிப்பட்ட பல ரத்தினங்களைக் கொண்டு இழைக்கப்பட்ட விஷேஷ சிம்ஹாசனம், விமானத்தின் (கோபுரத்தின்) நடுவே இருத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த விமானமோ உத்தமமானது, ஏனெனில், உத்தமமான கோபுரம் என்று கூறப்படுவது ஏழு நிலைகள் கொண்ட ஒரு கோபுரமாகும். அவையும் விலை மதிப்பில்லா ரத்தினங்களை தங்கத்தினூடே இணைத்து செய்யப்பட்டது. இந்த விமானம் இருக்கும் இடமோ, ஓராயிரம் மறுபடியும் விலைமதிப்பிட இயலா நவரத்தின கற்களால் செய்யப்பட்ட தூண்களுள்ள மண்டபத்தில் இருத்தப்பட்டிருக்கிறது.  இந்த மண்டபமோ, மஞ்சள் நிறத்திலான மூலிகைகள் வனமும், தென்றல் தவழும் கதம்ப வனத்தின் நடுவே. இது மணித்வீபமெனும் ரத்தின தீவின் நடுவே உள்ளது. இந்த தீவானது, பேரலை புரளும் அமிர்தக்கடலின் நடுவே உள்ளது.

இப்படியாக இந்த முதல் நான்கு வரியிலேயே ஸ்ரீ ஆதி சங்கரர், அலைபொங்கும் அமிர்தக்கடல், மணித்தீவு, அடர்ந்த கதம்ப வனம், தங்க வண்ண மூலிகைகள் நிறைந்த சமவெளி, ஸஹஸ்ர ஸ்தம்ப மண்டபம் கொண்ட பவனம், கோபுரம் மற்றும் விஷேஷ சிம்ஹாஸனம் கல்பித்து அம்பிகையை ஆவாஹிக்கவன்றோ தயாராகிவிட்டார்!

அவரோடு அவர் வழியில் நாமும் தயாராகலாமே! – அம்பிகையை ஆராதிக்க! இரண்டாவது பாகத்தை நாளை பார்ப்போமா!

****

“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |

ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||

சுபம்

இந்த வலைப்பூவில் கொடுக்கப்படும் முன்னோர்கள் அருளிய வேதம், வேத தழுவல், வேத மந்திரங்கள், உபனிஷத், பாஷ்யம், பாஷ்ய தழுவல், விரிவுரைகள், ஸ்லோகம், ஸ்தோத்ரம், அவற்றின் யந்திரங்கள், அதற்குறிய தந்திரங்கள் முதலியன, எவர் ஒருவடைய தனிப்பட்ட சொத்தும் அல்ல. நமது மூதாதையர்கள் அவர்தம் தவ பலத்தால் அறிந்ததேயாகும். அவர்கள் லோக கல்யாணத்திற்காக அவையெல்லாவற்றையும் நமக்கு அளித்தனர். இவற்றின் ப்ரயோக விதி, வழிபாடுமுறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” அவள் அனுக்ரஹத்தால், வழிகாட்டுதலால் கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்!

ஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு தேவையான எளியோன் அறிந்த மந்திரம், யந்திரம், தந்திரம், விதிமுறைகள், வேண்டுபவரின் தகுதி அனுசரித்து அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan [at] yahoo [dot] com, அலைபேசி:- +91 92454 46956, Whats App:- +91 96774 50429

This entry was posted in मन्त्रमातृकापुष्पमालास्तवः, மந்த்ர மாத்ருகா புஷ்பமாலாஸ்தவம், மந்த்ரமாத்ருகா புஷ்பமாலா ஸ்தவம், மந்த்ரமாத்ருகாபுஷ்பமாலாஸ்தவம், ஸ்ரீ வித்யா தந்த்ரம்,, Uncategorized and tagged , , , . Bookmark the permalink.