Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | சிவன் எங்கு இருக்கமாட்டான்?

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||

ஒம்

|| க ஏ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

|| சிவன் எங்கு இருக்கமாட்டான்? (அ) சிவனை கோவிலிலிருந்து வெளியேற்றுவது எப்படி? ||

தீக்ஷிதனாகிய ஆச்சாரியார், பக்தி இல்லாதவனாக பூஜித்தால், ராஜா, ராஜ்யம் இவர்களுக்கு கெடுதல்; அது எவ்விதம் எனில், காட்டில் இருக்கிற துஷ்ட மிருகமாகிற ஸிம்ஹத்தைக் கண்ட யானையானது எப்படி பயம் அடையுமோ, அதுபோல் பக்தியில்லாத ஆச்சாரியனைப் பார்த்த உடனே சிவபெருமான் பயம் அடைந்து (விலகி விடுவார்) மந்திரம் இல்லாமல் அர்ச்சனை செய்தால், அந்த ஈச்வரன் பயம் அடைவார் (விலகி விடுவார்). (காரண ஆகமம் – பூஜாவிதி படலம் – ஸ்லோகம் 311 – 312), மேல் விபரம் இங்கு காண்க!

ஒவ்வொரு கிரியையும், அதற்கேற்ற பாவனை, மந்திரங்களுடனேயே செய்யப்படல் வேண்டும்.  பாவனை இல்லாது, வெரும் மந்திரங்களுடன் மட்டும் செய்தால், அது பயனற்றவை ஆகும்.  பாவனையும் இல்லாது மந்திரங்களும் இல்லாது கிரியைகளை செய்தால், அச்செயல் தேவர்களை மகிழ்விக்காது, அசுரர்களையே மகிழ்விக்கும். அதன்காண், பூஜைகளின் முழுப்பயனும், மக்களை சென்று அடைய பாவனை, கிரியை, மந்திரம் மூன்றிலும் லோபம் (குறை) இருத்தல் கூடாது.

அப்படி அகலும் தருணத்திலேயே, இறைவன், தன் சன்னதியில் உபச்சாரம் செய்யாமல் அபச்சாரம் செய்தவனுக்கு, ஸந்ததி இல்லாதிருக்கட்டும் என்றும், இச்சந்ததியினர் என்றும் தம்மை ஆராதிக்க தகுதியில்லாதவர் என்றும் எண்ணி அகலுகிறார்.

அங்ஙனமாயின், பக்தி, ஆச்சாரம், அனுஷ்டானம் இல்லாத இடத்தில் இறைவன் இருப்பதில்லை என்றே பொருள்.  இறைவன் இல்லாத இடத்தில் இறைவி எப்படி இருப்பாள்? அம்மையும் அகன்றிருப்பாளே! அய்யனும், அம்மையும் இல்லாத இடத்தில் உப, பரிவார தேவதைகளும் இருக்கமாட்டார்களே, அவர்களோடு, அந்த க்ஷேத்ரத்தில் வழிபடுகின்ற சித்தர் பெருமக்களும் அகன்றிருப்பார்களே, ஆகையால், ஒருவர் செய்யும் தவறினால் ஆராதிக்கும் அனைவரும் ஆராதனையின் பலனிளக்கிறார்கள் அன்றோ!

ரௌத்திரனுக்கே, பயம் என்ற சொல்லே தெரியாத இறைவனையே அனுஷ்டானக் குறையால் ஓட்டுவிக்கும் செயல் நமக்கு பலனளிக்குமா?

“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |

ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||

சுபம்

இந்த வலைப்பூவில் குறிப்பிட்டிருக்கும் ப்ரயோகம், செய்முறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்

ஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு தேவையான மந்திரம், யந்திரம், தந்திரத்தை தகுதி அனுசரித்து அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan [at] yahoo [dot] com, அலைபேசி:- 92454 46956, whatsapp:- 96774 50429

This entry was posted in ஆலய வழிபாடு, சிவன் எங்கு இருக்கமாட்டான்?, Uncategorized and tagged , , , , , , , . Bookmark the permalink.